பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்தியாவின் முதல் பெண் உரிமை போராளி மோகன்ராய்

வெள்ளையர்தான் காட்டுமிராண்டிகளான இந்தியரை மனிதராக்கினர், வெள்ளையர்தான் இங்கு உடன்கட்டை ஏறும் கொடுமையினை, விதவை மறுமணம், குழந்தை திருமணம் தடுத்தது என்றெல்லாம் பேசி கொண்டிருக்கின்றார்கள் அப்படி ஒரு கருத்து இங்கு நிறுத்தபட்டிருக்கின்றது, அது முழுக்க சரியானதல்ல , பிராமணரிலும் பல நல்ல வழிகாட்டிகள் இருந்தார்கள் பிராமண கட்டுப்பாடு என அதை சொல்வதும் சரியல்ல, அக்கால இந்திய‌ பழக்கவழக்கம் அப்படி இருந்தது. பின்னாளில் அதை ஒழிக்க வந்ததும் பிராமணரே. அப்படி ஒருவர் சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க […]

என்றும் இந்தியாவின் பாசத்திற்குரிய தியாக தலைவன் எங்கள் ராஜிவ்

அந்த மனிதன் இன்று ஐரோப்பாவில் எங்கோ வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்க வேண்டியவன், அரசியலுக்கும் அவருக்கும் அன்று துளியும் சம்பந்தமில்லை. நேருவின் பேரன் என்ற பெருமையோடு வாழவேண்டியவன் ஆனால் 27 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஒரு பொட்டல் காட்டில் சிதறி கிடந்தார் ஒரு மனிதனின் தலைவிதிபடியே வாழ்வு அமையும், அந்த விதியின் முடிவை நோக்கியே சூழ்நிலைகள் ஒருவனை கொண்டு செல்லும், மானிட வாழ்வின் பெரும் விசித்திரமிது, மதியினால் தப்பவேமுடியாது, பெரும் ஞானி சாணக்கியனும், பல ஞான நூல்களும், ஞானிகளும், […]

பாலகுமாரன் : தனிபெரும் எழுத்தாளனுக்கு ஆழ்ந்த அஞ்சலி

தமிழக எழுத்தாளர் வரிசையில் தனி இடம் பிடித்தவர் பாலகுமாரன், சோழநாட்டு கம்பனின் தமிழ் அவருக்கு அனாசயமாய் வந்தது எழுத்துலகில் ஒருவித ரசனையான எழுத்தினை காட்டினார், அவரின் எழுத்தெல்லாம் சமாதனத்தையும் அன்பையும் சமத்துவத்தையும் தாங்கியே வந்தன‌ நாவல்களில் தனி முத்திரை பதித்துவிட்டு சினிமா உலகிற்கும் வந்தார் சுஜாதா போலவே பாலகுமாரனின் வசனங்களும் காலத்தினை வென்றவை ‘நாயகன்’ ‘குணா’, ‘செண்பகத்தோட்டம்’, ‘மாதங்கள் ஏழு’, ‘கிழக்கு மலை’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’, ‘பாட்ஷா’, ‘முகவரி’, ‘சிட்டிசன்; என எழுதி குவித்தார், அற்புதமான […]

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளே நர்ஸ் தினம்

பணிகளில் மிக பொறுமை வாய்ந்த மதிப்பு மிக்க பணி தாதியர் பணி, மிக மிக பொறுப்பு வாய்ந்த பணியும் கூட. அதனால்தான் அது தாய்க்கு அடுத்த வார்த்தையான தாதியர் என தமிழில் போற்றபடுகின்றது, மருத்துவமனையில் பாருங்கள், மருத்துவர் ஒரு நோயாளியினை கவனிப்பது சொற்பநேரம்தான், ஆனால் முழுநேரமும் உடனிருந்து மருந்துகொடுத்து , உணவு கொடுத்து அன்பாக கவனிப்பது தாதியர்கள் தான். அவர்களின் பணி இல்லை என்றால் ஒரு மருத்துவமனையும் இயங்காது, ஒரு உயிரும் பிழைக்கமுடியாது. மிக மிக பொறுமையும் […]

கார்ல் மார்க்ஸ் 200ம் பிறந்தநாளில் தொழிலாளரை காக்க அவதரித்த அந்த தெய்வத்தை கைகூப்பி வணங்குவோம்

உலகத்தை புரட்டி போட்டவர்களில் அழியா புகழுடையவர் காரல் மார்க்ஸ், உலகம் கண்ட வரலாற்று மனிதர்களில் அவருக்கான இடம் எக்காலமும் அழியாதது அவர் ஒரு யூதர், ஆனால் கிறிஸ்தவ யூதர். நமக்கெல்லாம் ஹிட்லர் யூதரை ஒழித்தது தெரியும். ஆனால் இயேசுவிற்கு பின்னால் ரோமர் யூதரை போட்டு சாத்தினார்கள், ரோமின் அரசராக போப் வந்த பின் ஐரோப்பா எங்கு அடிக்கடி போட்டு அடித்தார்கள் அப்படி அடிதாங்கமுடியாமல் கிறிஸ்தவத்திற்கு மாறிய சில யூதர்கள் உண்டு, காரல் மார்க்ஸின் முன்னோர் ஜெர்மனில் அப்படி […]

ஐடா ஸ்கேடர் எந்நாளும் நினைவில் நிற்பார்கள்

அவள் பெயர் ஐடா ஸ்கேடர், அமெரிக்க பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள் ஆனால் மிஷனரிகள் அக்காலத்தில் இந்தியர்களின் அடிதட்டு மக்களுக்கு சேவை செய்வதார்க வந்த பலரில் அவரும் ஒருவர்கள். அப்படித்தான் 14 வயது நிரம்பிய ஐடாவும் இந்தியா வந்தாள், வந்து இருமாதத்தில் அவளின் அன்னை அமெரிக்கா திரும்பிவிட்டார் தந்தையுடன் வேலூரில் விடுமுறை கழித்துகொண்டிருந்தாள் அந்த சிறுமி. அந்த இரு சம்பவங்களும் அவளை புரட்டி போட்டன‌ என்ன சம்பவம்? அந்த நள்ளிரவில் அவர் வீட்டு கதவினை தட்டுகின்றான் […]

 Rajathi Salmaஅவர்களுக்கு இன்று பிறந்தநாள்

மிக இறுக்காமான கட்டுபாடுகள் நிறைந்த சமூகத்தில் பிறந்து, அங்கிருக்கும் கட்டுபாடுகளையும் பெண் அடிமைத்தனத்தையும் தன் ஒரே நாவலில் மிக தைரியமாக கொண்டு வந்து பெரும் அதிர்வினை கொடுத்தவர் அவர் அந்த எழுத்துக்கள் வங்கதேசத்து தஸ்ரிமா நஸ்ரினை போல் இருந்ததால் தமிழகத்து நஸ்ரிமா என்றே அழைக்கபட்டார் பட்டம் வந்தால் சும்மா வருமா? மிரட்டல்களும் பின்னாலே வந்தது. மிக கடுமையான அச்சுறுத்தல்கள் ஒரு பெண்ணாக இருந்து மிக தைரியமாக போராடிகொண்டிருந்த அந்த பெண் எழுத்தாளரை எல்லோரும் வோட்டு வங்கி இன்னபிற […]

இன்று தியாகராஜ பாகவதரின் பிறந்த நாள்

உலகில் முதலில் கட்டபட்ட அணைகளில் எகிப்து அணைகளும், கல்லணையும் குறிப்பிடதக்கவை இருநாடுகளிலுமே அணையால் விவசாயம் செழித்து கலைகள் வளர தொடங்கின , சிந்தனை பெருகியது. சிந்தனை எப்பொழுது பெருகும்? பசி ஒழிந்து கவலை மறந்தாலொழிய சிந்தனை பெருகாது இங்கு பெருகிற்று இதனால்தான் பிரமீடும், தஞ்சை பெரிய கோவிலும் அதிசயமாக இன்றும் நிற்கின்றன. அந்த அறிவு அப்பொழுதே கிடைத்திருக்கின்றது அப்படிபட்ட சோழநாட்டில் முத்தமிழும் செழித்தது. அது காவேரி கரையில் இசைதமிழாக‌ பாடபட்டது, நாடகங்களிலும் பாடபட்டது காவேரி ஆற்றங்கரையில் நாடகதமிழின் […]

இன்று திப்புவின் நினைவுநாள்.. வீர வணக்கம்

இந்தியாவில் முதன் முதலில் பிரிட்டிசார் முடிசூட்டிகொண்ட இடம் கல்கத்தா, அங்கிருந்தேதான் படை நகர்த்தலை தொடங்கினார்கள், பின்புதான் சென்னை பக்கம் வந்தார்கள் அப்படியாக வடக்கே இருந்து தேற்கேயும், தெற்கே இருந்து வடக்கேயும் நகர்ந்து நகர்ந்துதான் இந்தியாவினை பிடித்தார்கள் எந்த இடத்திலும் அவர்கள் பெரிதாக திணறியதாக சரித்திரம் இல்லை, அசால்ட்டாக அடித்துவிட்டு, முன்னேறிகொண்டிருந்தார்கள், வடக்கே பெரும் எதிர்ப்புகள் அவர்களுக்கு அன்று இல்லை. அடிக்கவேண்டும், மிரட்டவேண்டும் அல்லது லஞ்சம் கொடுக்கவேண்டும் அவ்வளவுதான், கம்பெனி கொடி பறக்கும். தெற்கேயும் ஆற்காடு நவாப் குடும்பசண்டையினை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications