பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆப்கான் கிரிக்கெட் அணி

அது சல்லடையாய் துளைக்கபட்ட நாடு, குண்டு விழாத இடம் என ஒன்றோ, இல்லை தோட்டா துளைக்காத சுவர் என்றோ எதுவுமில்லை நல்ல களம் இல்லை, மட்டை இல்லை, கிரிக்கெட் விளையாட நல்ல பந்தோ, ஷூ கூட அவர்களுக்கு இல்லை சுருக்கமாக சொன்னால் உடல் ஒன்றே அவர்களுக்கு உருப்படி, வெறு எதுவுமில்லை ஆனாலும் அட்டகாசமாக வலுவான இந்திய அணியினை சமன் செய்யும் அளவிற்கு பயிற்சி பெற்று இருக்கின்றார்கள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியோ, ஆஸ்திரேலியாவோ ஏன் ஹாங்காங் கூட வளர்வது […]

ஈழ அழிவுக்கு காரணம் யார்

ஈழதமிழருக்கு உதவியர் அதிமுகவா திமுகவா என்பது மாறி ஈழ அழிவுக்கு காரணம் யார் என இப்பொழுது பட்டிமன்றம் நடத்துகின்றார்கள் இதில் சிலர் ஐ.நாவில் ஈழமக்களுக்காக முதலில்முழங்கியவர் ஸ்டாலின் என கிளம்புகின்றார்கள், இப்பொழுதுள்ள திமுகவினர் அறிவு அவ்வளவுதான் இது ஆபத்து, காரணம் பண்ருட்டி ராமசந்திரன், எம்ஜிஆர் அரசில் உணவு அமைச்சராக இருந்த பொழுது அவர்தான் 1987ல் முதலில் ஐ.நாவில் ஈழசிக்கலை எழுப்பினார் ஈழபோராட்டத்தில் திமுக அதிமுக இரண்டும் உதவியது, ஆனால் ராமசந்திரன் அசைவில் அரசியல் இருந்தது , சுயநலம் […]

இந்த பழனிச்சாமி கோஷ்டி

ஒரு மனிதன் தடுமாறலாம் ஆனால் இப்படி குப்புற விழகூடாது, டாஸ்மாக் நடத்தும் அரசுதான் ஆனால் இப்படி போதை போடாமலே உளற கூடாது அப்படி என்ன உளறல்? இலங்கையில் நடந்த இன அழிப்பினை திமுக எதிர்க்கவில்லையாம், அதை எதிர்த்து அதிமுக ஆர்பாட்டமாம் அட பதர்களா? அது நடந்து 10 வருடம் ஆக போகின்றது, அவர்களே மறந்தாயிற்று, இவர்கள் இப்பொழுதுதான் விழித்திருக்கின்றார்கள் சென்னையில் பிரபாகரனை வீட்டு காவலில் வைத்தவர் ராமசந்திரன், கண்டித்தது கலைஞர் ஈழசிக்கலில் அமைதிபடையினை அனுப்பாதே என்றவர் கலைஞர், […]

சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்

இந்த சைமன், திருமுருகன் காந்தி, திருமாவளவன், சத்தியராஜ், வைகோ, பழ.நெடுமாறன் போன்ற இன்னும் சிலரை பிய்ந்த செருப்போடு தேடிகொண்டிருக்கின்றேன், கைவசம் கொஞ்சம் சாணியும் இருக்கின்றது முதலில் அவர்களை பிடித்து முகத்தில் அறைய வேண்டும், அறைந்துவிட்டுத்தான் இந்த செய்தியினை சொல்ல வேண்டும் என்ன நடந்திருக்கின்றது? இலங்கையோடு நல்லுறவு கொள்ள டெல்லி முடிவு செய்து, ராஜபக்சே வந்து நாங்கள் தமிழர்களை கொல்ல யுத்தம் நடத்தவில்லை, அது பிரபாகரனின் முடிவு எனசொல்லி மோடி, மன்மோகன், ராகுல் எல்லோரையும் சந்தித்துவிட்டு சென்றாயிற்று ஆம் […]

ராஜபக்சே டெல்லி வந்திருக்கின்றார்

மறுபடியும் ராஜபக்சே டெல்லி வந்திருக்கின்றார் , அதுவும் சும்மா வரவில்லை மகன், அப்பா, அப்பப்பா, அம்மா அம்மம்மா , அக்கா அக்கக்கா என குடும்பதோடு வந்திருக்கின்றார் போல பஸ் பிடித்து செல்லும் வைகோவுமில்லை, இங்கே அழிச்சாட்டியம் செய்யும் சைமனோ, திருமுருகன் காந்தி போன்றோர் சத்தமுமில்லை “அடேய் ராஜபக்சே வந்திருக்கின்றார், அதுவும் முள்ளிவாய்க்கால் கொள்ளி வைத்த ராஜபக்சே வந்திருக்கின்றார்..” என்றால் “அட போடா..” என சொல்லிவிட்டு எல்லாம் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாயிற்று எப்பொழுது இவர்கள் கத்துவார்கள் என்றால் திமுக […]

பாசிசம் என்றால் என்ன

இந்த விமானத்தில் சோபியா என்பவர் கத்தினார், அதை தொடர்ந்து பாசிச பாஜக என கத்தினார்கள், கத்தினார்களே தவிர பாசிசம் என்றால் என்னவென தெரியவில்லை புரட்சி என்றாலே எம்ஜிஆரா என அப்பாவிதனமாக கேட்கும் தமிழகத்திற்கு பாசிசம் என்றால் என்ன என்பது எப்படி தெரியும்? நம்மிடமும் சிலர் கேட்டார்கள், சொல்லிவிடலாம் உலகில் மக்களாட்சியினை முதலில் கொடுத்த ரோமர்கள் ஒரு சிக்கலான காலகட்டத்தில் அவசர ஏற்பாடாக Cincinnatus. என்பவரை மன்னராக வைத்தார்கள், அவனோ அடக்கி ஆள ஆரம்பித்தான் அவன் தனக்கு சிலை […]

ஈழத்து சேகுவேரா : 03

ஈழத்து சேகுவேரா  03   சென்னையில் கலைஞர் அரசு பாதுகாப்பு கொடுக்காத நிலையிலும் இந்தியாவில் தலைமறைவாக‌ இருந்தாலும் தமிழகம் வந்த அகதிகளுடனும், தமிழக அரசியல்வாதிகளினுடம், நல்ல தொடர்பில் இருந்தார் பத்மநாபா. அகதிகள் பிரச்சினையில் முன்னின்று குறைகேட்டு களைய முயற்சிப்பார். கலைஞர் அப்பொழுதுதான் முதல்வராக கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த நேரம், ஆனால் பத்மநாபா அவருக்கு நண்பர் என்றாலும், புலிகளை தமிழகத்தில் சுதந்திரமாக உலவவிட்டுருந்தார் அதற்கு அந்த கட்சியில் அப்போது பலமாக இருந்தபலபேர் காரணம். […]

ஈழத்து சேகுவேரா : 02

ஈழத்து சேகுவேரா 02 அப்பொழுதெல்லாம் புலிகளின் பலம் குறைவு, எல்லா குழுக்களும் இலங்கை ராணுவத்தை எதிர்த்து போராடின‌ ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு முகாமை தாக்க சிங்கள ராணுவம் திணறியது, இந்நிலையில்தான் நாங்கள் பெரியவர்கள் என சொல்ல தொடங்கினார்கள் புலிகள், சபாரத்னம் அவர்கள் எதிரியானார் அவரை கொல்லதேடும் பொழுது காப்பாற்ற நினைத்தவர் பத்மநாபா, வைக்க்கோல் லாரியில் அவரை காப்பாற்றி இந்தியா அனுப்பும் திட்டம் அவருக்கு இருந்தது, அதற்குள் சபாரத்தினத்தை கொன்றனர் புலிகள் பத்மநாபாவினையும் புலிகள் கொல்லதேட அவர் மோதலை […]

 ஈழத்து சேகுவேரா : 01

 ஈழத்து சேகுவேரா 01 பிரபாகரனுக்காகவும் புலிகளுக்காகவும் செத்தவர்களை மாவீரர்கள் என சொல்லி ஒப்பாரி வைக்கும் கூட்டம் உண்டு, ஆனால் புலிகளால் கொல்லபட்ட தமிழ் போராளிகளுக்கு தியாகிகள் தினம் என அனுசரிக்கபடும் இந்நாளும் உண்டு அப்படியும் ஒரு நாள் அனுசரிக்கபடும், தமிழகத்தில் இதெல்லாம் தெரிவதில்லை, நாம் அனுசரிப்போம் ஜூன் 19ம் நாள் ஒப்பற்ற ஈழபோராளி பத்மநாபாவின் நினைவுநாள், கோடம்பாக்கத்தில் அவர் 1990ல் மரித்தபொழுதே ஈழம் இனி மலராது என அடித்து சொன்ன அனுபவஸ்தவர்கள் உண்டு, தமிழர்களின் பெரும் சிந்தனை […]

இன்று சதாம் பிறந்தநாள், அந்த மாவீரனுக்கு ஆழ்ந்த அஞ்சலி

இந்த தலைமுறை கண்ட மாவீரனும், ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என சொன்னவனும், தன் நாட்டு வளங்களை தன் மக்களுக்கே பயன்படுத்துவேன் என நின்றவனும் , தான் ஆட்சியில் இருந்த காலத்தில் ஈராக்கை தூக்கி நிறுத்தியவனும், இந்தியா என் நட்பு நாடு இந்திராகாந்தி என் சகோதரி நாங்கள் இருக்கும்வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆசியாவில் நுழையமுடியாது என சவால்விட்டவனுமான மாவீரன் அவன் காலம் அவனை மாவீரன் வரிசையில்தான் வைத்திருக்கின்றது, வடகொரியா போல் அணுகுண்டோ அல்லது இன்றைய புட்டீன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications