பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தந்தை சாவுக்கு பழி தீர்த்திருக்கின்றார் ஷேக் ஹசீனா.

வங்கதேச முன்னாள் ராணுவத்தாரான மஜீத் என்பவருக்கு தூக்கு நிறைவேற்றபட்டிருக்கின்றது அவர் இப்போதைய வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்கதேச விடுதலை வீரருமான‌ முஜிபுர் ரகுமான் கொலையில் சம்பந்தபட்டவர் வங்கதேச போர் ஏற்பட ரகுமானே காரணம், அவரின் முக்திவாஹினி படை பாகிஸ்தானுடன் மோதி, அவர்களுக்கு ஆதரவாக இந்திய ராணுவம் களமிறங்கியே வங்கம் உருவாயிற்று ஆனால் முஜிபுர் ரகுமான் 1975ம் ஆண்டு சுட்டு கொல்லபட்டார், அவர் குடும்பமே கொல்லபட்டது. உலகிலே ஒரு நாட்டின் தலைவர் வீடு தாக்கபட்டு […]

ஐதரபாத் சமஸ்தானம்.

ஏன் ஐதரபாத் சமஸ்தானம் பற்றி ஒரு தமிழன் அல்லது திராவிடன் படிக்க வேண்டுமென்றால் அதில்தான் தமிழ்நாட்டு திராவிட கோஷ்டிகளின் பொய்முகம் இருக்கின்றது தென்னகத்தில் வெள்ளையன் வரும்பொழுது இரு சமஸ்தானங்கள் பலமானது ஒன்று ஐதரபாத் சமஸ்தானம் இன்னொன்று ஆற்காடு சமஸ்தானம் ஆற்காடு சமஸ்தானதின் வாரிசு போட்டியில் நுழைந்தான் பிரான்சின் டூப்ளே, அவனுக்கு போட்டியாக நுழைந்த கிளைவ் எனும் பிரிட்டானியன் இங்கே பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடிகோலினான் பின் ஆற்காடு நவாப் கூப்பில் உட்கார வைக்கபட்டாலும், ஐதரபாத் சமஸ்தானம் ஆங்கிலேயனுக்கு உட்பட்ட […]

கக்கன்

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு காலத்தில் தூய்மையான தியாகிகளும், மக்களை தவிர ஏதும் சிந்தியா மகா உத்தமர்களும் இருந்தார்கள், அப்படியும் ஒரு பொற்காலம் இருந்தது அப்படி ஒரு குறையும் சொல்லமுடியாத தூய்மையான அரசியல்வாதிகளில் ஒருவர்தான் கக்கன் , காந்தி, சாஸ்திரி, காமராஜரை போலவே மகா தூயவாழ்வு வாழ்ந்த அரசியல் மகான் அவர் சுதந்திரபோராட்ட தியாகி, வெள்ளையனிடம் சிறையில் சித்திரவதை பட்டவர்களில் அவரும் உண்டு, கடுமையான அடிகள் அவை சுதந்திர இந்திய பொதுதேர்தலில் மதுரை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டவர். […]

கள்ளமவுனம்

நிச்சயம் அவன் இந்த தேசத்து மாபெரும் சுதந்திர வீரன், அவனைபோல் ஒருவனை இத்தேசம் கண்டதுமில்லை காணபோவதுமில்லை அவனது மைசூர் சமஸ்தானம் இன்றைய ஜெர்மனுக்கு ஈடான பொருளாதாரத்தை கொண்டிருந்தது அதை குறிவைத்தே வெள்ளையன் போர் நடத்தினான் புகழ்பெற்ற தன் முதல் இரு போர்களில் ஆங்கிலபடைகளை கதறவைத்திருந்தான் அவன், பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் வலிய சொன்னான் “என்னை போல் ஒருவனை வரலாற்றில் திப்பு வடிவில் காண்கின்றேன்” , திப்புவுக்கு படை அனுப்ப நெப்போலியன் முடிவும் செய்திருந்தான் அந்த பாழாய்போன நெல்சன் […]

இலங்கையில் பறக்கும் தட்டுகளும் அந்நிய கிரகத்தாரும்

இலங்கையில் கொஞ்சநாளாக பறக்கும் தட்டுகளும் அந்நிய கிரகத்தாரும் வந்து போவதாக பல செய்திகள் உண்டு அவை கட்டுகதை என ஒருசாராரும், திருடர்கள் பரப்பிவிடும் கதை என ஒருசாராரும் இல்லை உண்மையிலே அந்நிய கிரக சக்திகள் நடமாட்டம் என ஒரு சிலரும் சொல்லிகொண்டிருக்கின்றனர் 2 அடி உயர விசித்திர உருவங்கள் அடிக்கடி அங்கு இரவு தென்படுமாம், சாடுமாம், ஓடுமாம், கதவை தட்டுமாம் இன்னும் ஏகபட்ட அட்டகாசங்கள் செய்யுமாம் ஆனால் எதுவும் அவை பேசுவதில்லையாம், உற்று பார்க்குமாம் அப்படியே ஓடிவிடுமாம் […]

பசவண்ணா என்றொரு புரட்சியாளர்

இங்கு பாரதி , பெரியார் பிற்காலத்தில் பேசிய பெண்விடுதலையினை அன்றே கன்னடத்தில் சொன்ன பசவண்ணா என்றொரு புரட்சியாளர் இருந்தார் அவர் இந்திய வரலாற்றில் முக்கியமானவர், லிங்காயத் பிரிவு அவரால் தொடங்கபட்டது, பெரியாருக்கு 700 ஆண்டுகள் முன்பு பிறந்த பசுவண்ணா பல புரட்சி செய்தார் பசவண்ணாவினை பெரியாருடன் ஒப்பிட்டால் பசவண்ணா இந்திரா காந்தி, பெரியார் மோடி, இதற்கு மேல் நீங்களே முடிவு செய்யுங்கள் அப்படி என்ன செய்தார் என்றால் ஏகபட்ட சீர்திருத்தங்களை அன்றே செய்தார், ஆச்சரியமான புரட்சியாளர் அவர், […]

அழியா புகழுடைய காரல் மார்க்ஸ்

உலகத்தை புரட்டி போட்டவர்களில் அழியா புகழுடையவர் காரல் மார்க்ஸ், உலகம் கண்ட வரலாற்று மனிதர்களில் அவருக்கான இடம் எக்காலமும் அழியாதது அவர் ஒரு யூதர், ஆனால் கிறிஸ்தவ யூதர். நமக்கெல்லாம் ஹிட்லர் யூதரை ஒழித்தது தெரியும். ஆனால் இயேசுவிற்கு பின்னால் ரோமர் யூதரை போட்டு சாத்தினார்கள், ரோமின் அரசராக போப் வந்த பின் ஐரோப்பா எங்கு அடிக்கடி போட்டு அடித்தார்கள் அப்படி அடிதாங்கமுடியாமல் கிறிஸ்தவத்திற்கு மாறிய சில யூதர்கள் உண்டு, காரல் மார்க்ஸின் முன்னோர் ஜெர்மனில் அப்படி […]

2017ல் மிக சிறந்த படமாக விருதுபெற்ற படம் இது

பரம வைரிகளான இஸ்ரேல் பாலஸ்தீன எல்லையில் ஏற்பட்ட காதல் இது. பிரிக்கபட்ட எல்லையில் அப்பக்கம் இஸ்ரேலிய இளைஞனும் இப்பக்கம் பாலஸ்தீன பெண்ணும் முத்தமிடுகின்றார்கள் அதுவும அந்நாட்டு கொடியோடு 2017ல் மிக சிறந்த படமாக விருதுபெற்ற படம் இது இதெல்லாம் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடந்தால் என்னாகும்? சங்கிகள் மாரடைப்பிலே செத்துவிடும் அல்லது சயனைடு கடித்து செத்துவிடும்

ஈழத்தில் என்ன பிரச்சினை

அமைதிபடை அட்டகாசம் தெரியாமல் பேசுகிறாய் என்கின்றனர் சிலர். அமைதிபடைக்கு முன்பே 1980 ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றால் நாடு இலங்கையில் தலையிடுவதை இந்தியா அனுமதிப்பதில்லை. ஈழ போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் இந்தியாவினை ஒதுக்கிதான் வைத்தார், போராளிகளுக்கு பயிற்சிகள் தொடங்கிய காலத்திலும் வேண்டா வெறுப்பாக இறுதியில் வந்து சம்பிரதாயத்திற்குதான் கலந்து கொண்டனர் புலிகள். அவ்வப்போது இந்தியாவுடன் மோதும் சூழ்நிலை வரலாம் […]

அந்த ஜப்பான் துயரம்

அந்த ஜப்பான் துயரம் நடந்து இன்றோடு 8 வருடம் ஆயிற்று புக்குஷிமா எனும் அணுவுலை சுனாமியால் பாதிக்கபட்டு, அது தொடங்கி ஜப்பான் நடத்தும் பெரும் போராட்டம் இன்றோடு 6 ஆண்டுகளை கடக்கின்றது இதில் எந்த அளவு முன்னேற்றம் ஜப்பானிய அணுகழிவு நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கின்றது என்றால், ஜப்பானிய அரசும், அணு நிபுணர்களும் தலைகுனிந்து நிற்கின்றார்கள் அதனால் இன்னும் பெரும் ஆபத்து நீடித்துகொண்டே இருக்கின்றது, முழுவது களைய 10 லட்சம் கோடி செலவாகலாம் என கணிக்கபட்டுள்ளது பணம் கூட சிக்கலில்லை, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications