பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 15

வாட்டர்லூ இன்றைய பெல்ஜியம் நாட்டில் இருக்கின்றது, 1815ல் ஜூன் 18ல் அங்குதான் நெப்போலியனின் இறுதி யுத்தம் தொடங்கிற்று. வழக்கம் போல ஐரோப்பிய நாடுகள் எல்லாம் ஒரு அணி, நெப்போலியன் தனி. தமிழக பாஜக போல தலைவர் ஆக எல்லோரும் பயந்த எதிரணிக்கு வெலிங்டன் தலைவர் ஆனார் , பெரும் களம் கண்டவன் அல்ல எனினும் நெப்போலியனின் சமீபத்ய தோல்வி அவனுக்கு நம்பிக்கை கொடுத்தது நெப்போலியனோ தன் அனுபவம் எல்லாம் திரட்டி நின்றான், வெற்றி என்பது அவனுக்கு வாடிக்கை […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 14

பிரான்ஸ் நாட்டின் மன்னனான நெப்போலியனை கிட்டதட்ட 12 நாடுகள் இணைந்துதான் வீழ்த்தின, அதுவும் அவன் படைபலம் குறைந்த நேரத்தில், அந்த அளவு பலமிக்கவனாக இருந்தான் நெப்போலியன், தோற்றானே தவிர திருப்பி அடிக்கவேண்டும் என்ற வெறி இருந்துகொண்டே இருந்தது லீப்ஸிக்கில் தோற்றபின் அல்லது விரட்டபட்ட பின் ஏப்ரல் 6, 1814ல் நெப்போலியன் பதவியிறக்கம் செய்யபட்டார். லூயி எனும் பழைய வாரிசை மன்னர் ஆக்கியது கூட்டுபடையும் பிரான்ஸும் நெப்போலியனை எல்பா எனும் தீவிற்கு கடத்தும்படி ஒப்பந்தமும் எழுதபட்டது. எல்பா என்பது […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 13

நெப்போலியன் ரஷ்யாவில் இருந்து பின்வாங்க பல காரணங்கள் இருந்தன, கடும் குளிர் , ரஷ்யர்களின் பின்வாங்கி தாக்கும் தந்திரம் என ஏராளம், முக்கியமாக உணவு தட்டுப்பாடு நெப்போலியன் ஐரோப்பா முழுக்க தனக்கு எதிரியார் என தேடி திரிந்தாலும் தன் காலடியில் இருந்த எதிரிகளை கண்டுபிடிக்காமல் விட்டுவிட்டான், அவர்கள் பிரான்ஸ் நிலபிரபுக்கள் அந்நாளைய தொழிலதிபர்கள் நெப்போலினின் சீர்திருத்த நடவடிக்கையில் அவர்கள் பெரிதாக பாதிக்கபட்டிருந்தனர் அவர்கள்தான் நெப்போலியன் இல்லாத நேரத்தில் புதிதாக ஒருவனை பதவியில் வைத்து புரட்சி செய்தனர் இப்படி […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 12

1812 ஜூன் 24ல் நெப்போலியனியனின் பெரும்படை ரஷ்யா நோக்கி கிளம்பியது 7 லட்சம் வீரர்கள், 70 ஆயிரம் குதிரைகள் 2 ஆயிரம் பீரங்கிகள் , உணவு பொருள் விநியோகத்திற்கு 2000 வேகன்கள் அதில் முழுக்க உணவுகள் என ஐரோப்பாவின் மிகபெரும் படையாக அது இருந்தது அந்த படையோடும் கூட ஒட்டோமன் சுல்தான்களோடு நெப்போலியன் மோதவில்லை என்பதுதான் வரலாற்றின் மறைக்கபட்ட பக்கம். ஓட்டோமேன் துருக்கியரை அடித்திருந்தால் பட்டுசாலை உட்பட பல சாலைகள் நெப்போலியன் வசமாயிருக்கும், பிரிட்டனின் முதுகெலும்பு முறிந்திருக்கும் […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 11

பிரிட்டன் மீது பொருளாதார தடை என அறிவித்தாலும் ஐரோப்பிய நாடுகள் தயங்கித்தான் இருந்தன‌ காரணம் பிரிட்டன் அன்று மிகபெரும் வர்த்தக சாம்ராஜ்யம், வியாபாரத்திற்கு உண்டான அத்தனை சாதகங்களும் அவர்களுக்கே இருந்தது, குறிப்பாக கப்பல்கள் வியாபாரம் இல்லாவிட்டால் ஐரோப்பிய நாடுகள் கதி அதோகதிதான், அதனால் பிரிட்டனுடன் ரகசிய உறவுகளை வளர்த்தன. சசிகலா கோஷ்டியோடு பன்னீர் கோஷ்டியில் சிலருக்கு உறவு இருக்கின்றதல்லவா? மோடியினையும் மீறி ரகசியமாக பழகுகின்றார்கள் அல்லவா? அப்படி நெப்போலியன் நிர்வாகத்தில் கில்லாடி, பிரிட்டன் மீது பொருளாதார தடை […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 10

நெப்போலியன் கதை என்ன ஆனது? என ஒரு பயலும் கேட்கவில்லை, ஆனாலும் சொல்வது நம் கடமை நெப்போலியனின் வெற்றியில் ஐரோப்பா அதிர்ந்து கொண்டிருந்தது, மிக அசால்ட்டாக ஸ்பெயின், போர்சுக்கல் தவிர எல்லா நாடுகளையும் அமுக்கியிருந்தான். ஜெர்மன் அப்பொழுது இப்பொழுது போல் அல்ல, பிரஷ்யா என வேறு பெயரில் வேறு வடிவத்தில் இருந்தது ரஷ்யாவும், ஆஸ்திரியாவும் நாம் நண்பர்களாக இருக்கலாம் “இந்த கோட்டை தாண்டி..” என சொல்லிவிட்டு அவனுக்கு அடங்கியே இருந்தன‌ அதாவது மோடிக்கு தமிழக பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 9

இந்த பதவி நாற்காலி இருக்கின்றதே, உலகில் மிக மிக ஆபத்தானது. எந்த நல்லவனையும் முழு கெட்டவனாக, சுயநலமிக்கவனாக மாற்றிவிடும் வல்லமை கொண்டது யாரை நம்பி வைத்தாலும் அதில் அமர்ந்தவுடன் மாறிவிடுகின்றார்கள் (பன்னீர் செல்வமும் , பழனிச்சாமியும் அப்படித்தான் என்ற எண்ணம் வர கூடாது), அதன் தன்மை அப்படி இனி யாரையும் நம்ப இந்த நெப்போலியன் தயாராக இல்லை, நானே அமரபோகின்றேன் என தன்னை முதன்மை கவுன்சில் என 1801ல் அறிவித்தான் நெப்போலியன், இன்றளவும் நீடித்து நிற்கும் சீர்திருத்தங்களை […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 08

கடல் யுத்தத்தை தொடக்கினார் நெல்சன் சிங்கத்தின் பலம் தரையில் என்றால், முதலையின் பலம் நீரில் என்பது போல பிரிட்டனின் பலம் முழுக்க அந்த கடற்படைதான். உலகம் முழுக்க அவர்கள் கட்டியாண்டதற்கு அந்த கடற்படை மிக அவசியமானதாக இருந்ததால், மிக வலுவாக வைத்திருந்தார்கள் அதன் பலம் நீண்ட வரலாறுடையது. ஹிட்லரால் கூட அதனை வெல்ல முடியவில்லை. அப்படிபட்ட பிரிட்டன் கடற்படையுடன் தான் எகிப்து கரையில் நெப்போலியன் மோதினான். பிரிட்டிஷாரின் கப்பல்களும் அவர்களின் வியூகமும் மிக கடுமையாய் இருந்தன, அதிலும் […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 7

ஜூன் 9, 1798ல் எகிப்தை குறிவைத்து தன் படைகளை நகர்த்தினான் நெப்போலியன் 29 வயதுதான் அவனுக்கு அப்போது. ஜோசப்பினுடன் ஒரு பக்கம் தீரா காதல் என்றாலும் இன்னொருபக்கம் மிக நேர்த்தியான யுத்த நகர்வு இருந்தது. எகிப்திற்கு நிலம் வழியாக செல்ல அவனுக்கு ஐரோப்பாவில் தடையேதும் இல்லை, ஆனால் ஆசிய நுழைவாசலில் இருந்தது சிக்கல் ஆம், ஆட்டோமன் துருக்கியர் அங்கு வலுவாக இருந்தனர். துருக்கி சிரியா இஸ்ரேல் அரேபியா ஆர்மீனியா என பரவி இருந்தது அவர்கள் சாம்ராஜய்ம், கிட்டதட்ட […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 6

எதாவது வரி விதிப்பது, அந்நிய நாட்டில் படையெடுப்பது அல்லது விவசாயமோ ஆடுமாடோ வளர்த்து உற்பத்தியினை பெருக்குவது உலகில் ஆங்காங்கே கால்பதித்திருக்கும் காலணி நாடுகளிலிருந்து ஏதாவது தேற்றி வருவது என்ற ரீதியில் பிரென்ஞ் டைரக்கர்கள் கூட்டம் நடைபெற்றது நெப்போலியன் தன் திட்டத்தை சொன்னான், திகைத்து நின்றார்கள், காரணம் அவன் சொன்னது அப்படி பிரிட்டனின் பெரும் பலம் அதன் கடற்படை, அதனை தகர்க்கும் படை பிரான்ஸ் கப்பற்படையினை தயார் செய்வேன். முதலில் பிரிட்டன் கடற்படையினை தாக்குவேன், இங்கெல்லாம் பிரிட்டனின் ஆதிக்கம் […]