பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 05

நாட்டில் குழப்பம் நடக்கும்பொழுது அந்நிய நாடுகள் அதனை பயன்படுத்தி படையெடுக்கும், நெப்போலியன் காலத்திலும் அதுதான் நடந்தது. பிரிட்டன் டூலன் நகரை பிரிட்டனிடமிருந்து மீட்டாலும், ஐரோப்பிய நாடுகள் பிரான்சின் மீது எப்பொழுது பாயலாம் என குறித்துகொண்டிருந்தன, நெப்போலியன் அப்பொழுது வெறும் கமாண்டர், பத்தோடு ஒன்று என்பதால் அவனை ஐரோப்பாவில் யாருக்கும் தெரியாது. குழப்பமான நிலையில் இருந்த‌ பிடித்துவிடலாம் என அவர்கள் திட்டமிட்டுகொண்டே இருந்தார்கள். நெப்போலியனுக்கோ ஜோசப்பின் கிறுக்கு உச்சத்தில் இருந்தது, கவிதை எழுதினான் அவளோடு சேர்ந்த் ரோஜா செடி […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 4

சிறையில் இருந்து வெளிகொண்டுவந்து வெண்டி கலரங்களை அடக்கு என நெப்போலியனை அனுப்பினாலும் அவன் செல்லவிரும்பவில்லை தன் பதவியினை இறக்கம் செய்து அவனை போக சொன்னது அவனுக்கு பெருத்த அவமானம், மகாபாரத கர்ணன் போல துடித்தான், ஆனாலும் ராணுவ பணியாள் என்ன செய்யமுடியும் என் உடல்நலம் சரியில்லை, யுத்தத்தில் ஈடுபட முடியாது என மெடிக்கல் ரிப்போர்ட் கொடுத்துவிட்டு அமர்ந்துவிட்டான். அவனை என்ன செய்ய என யோசித்த அதிகார வர்க்கம் அவனை துருக்கி பக்கம் தூக்கியடித்தது. அன்று ஆட்டோமன் துருக்கியர் […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 03

டூலான் நகரை மீட்க செல்லும் முன் மிக அழகான திட்டம் தயாரித்திருந்தான் நெப்போலியன் அதவாது அந்த ஆங்கிலபடை, ஸ்பானிஷ் படை வந்திருப்பது பிரான்சினை ஆக்கிரமிக்க, குழப்பமான இந்த காலகட்டத்தில் அவர்கள் நாட்டை பிடிக்க வருகின்றார்கள். அவர்களை ஓட அடிக்காவிட்டால் அது ஆபத்து. அதே நேரம் சண்டை நடக்கும் பொழுது அவர்கள் உட்புகுந்துவிடவும் கூடாது, யுத்தம் திசைமாறும் கிட்டதட்ட இலங்கை திரிகோணமலை துறைமுகம் போன்ற அமைப்புள்ள இடம் அது. மூன்றுபக்கம் நிலம் ஒரு பக்கம் கடல் என்ற அமைப்பு. […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 2

நெப்போலியனுக்கு 20 வயதாயிருக்கும் பொழுது, அதாவது அவன் ராணுவத்தில் இருக்கும்பொழுதுதான் பிரென்ஞ் புரட்சி வெடித்தது. அமெரிக்க விடுதலைக்கு பிரான்ஸ் உதவி செய்தது ஒன்றும் ரகசியமல்ல, மக்களாட்சி அங்கு மலரவேண்டும் என்பதை விட பிரிட்டன் ஒழியவேண்டும் என்ற எண்ணத்தில் பிரான்ஸ் அமெரிக்கர்களுக்கு உதவியது. அமெரிக்கா விடுதலை அடைந்த 10ம் வருடத்தில் பிரான்ஸ் மக்களுக்கும் மக்களாட்சி ஆசைவந்தது, மன்னனின் கொடுங்கோல் ஆட்சியும் ஒரு காரணம். மன்னன் மக்களை அடக்கி பார்த்தாலும், கில்லட்டின் எல்ல்லாம் வைத்து மிரட்டி பார்த்தாலும் மக்கள் அசையவில்லை, […]

வாமணன் – நெப்போலியன் வரலாறு : 01

ஐரோப்பா பல இன நாடுகளின் தொகுப்பு, முதலில் எல்லாம் அவைகள் அவ்வளவு பெரும் சிந்தனை கொண்ட நாடுகள் அல்ல, காட்டுமிராண்டிதனமான வாழ்வுதான் அவர்களுடையது. அலெக்ஸாண்டர் முதலில் எழும்பி கிழக்கினை மேற்கினை இணைத்தான், கீழைநாட்டு அறிவு சிந்தனைகள் அதன் மூலமாக அவர்களுக்கு கிடைத்தன‌ ரோமையர்களும் ஆப்ரிக்காவிலிருந்து பெரும் சிந்தனைகளை பெற்றனர், வானியல் முதல் கணிதம் தத்துவம் என ஐரோப்பாவிற்கு வந்தன, சிந்தனை வளர்ந்தது. ஐரோப்பியர்கள் கிறிஸ்தவம் முன் மண்டியிட்டு போப் ஆட்சி செய்தாலும் முதலில் கலீபாக்களும், அதன் பின் […]

மாவீரன் நெப்போலியனை எழுத சொல்லி கேட்கிறார்கள்…

மாவீரன் நெப்போலியனை எழுத சொல்லி பலர் கேட்டுகொண்டிருக்கின்றார்கள். வரலாற்றில் மிக மிக அசாத்திய மனிதன் அவன். அலெக்ஸாண்டர் மன்னனாக பிறந்தான் பேரரசனாக மரித்தான்,ஜூலியஸ் சீசரும் அவ்வகை. சமுத்திர குப்தனுக்கோ சாணக்கியன் எனும் ஆசான் இருந்தான். ஆனால் தன் வாழ்வில் ஒவ்வொரு நொடியினையும் தானே செதுக்கியவன் நெப்போலியன். கிடைத்த வாய்ப்பினில் எல்லாம் தன்னை தூக்கி நிறுத்தி எழும்பியவன். அபூர்வ சகோதரர்களில் நாகேஷ் அப்பு கமலை பார்த்து கேட்பார் அல்லவா, “பாதி இங்க இருக்கு மீதி எங்கே?” அப்படிபட்ட குள்ள […]