பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வெல்ல பிறந்தவன் : முடிவுரை

அலெக்ஸாண்டரை பற்றி சொல்லும்பொழுது பல விஷயம் முரண்படுகின்றது என்கின்றார்கள சிலர், அவர்களுக்கு சில விஷயங்களை சொல்லவேண்டும். இந்திய வரலாற்றை நமக்கு கொடுத்தது யார் என நினைக்கின்றீர்கள்? வெள்ளையர்கள் அவர்கள் தொகுத்ததுதான் வரலாறு, பல இடங்களில் தங்களுக்கு சாதகாகமாக வளைத்தார்கள். இன்று நாம்படிக்கும் வரலாறு பல மர்ம பக்கங்களை உள்ளடக்கியது, நிறைய விஷயங்களை மறைத்திருப்பார்கள் ஐரோப்பியர்கள். அவர்களின் பெருமை அப்படி. ஐரோப்பியர்தான் பெரியவர்கள் என்பது அவர்கள் நினைப்பு, வரலாற்றில் அலெக்ஸாண்டர், சீசர், நெப்போலியன் என்றுதான் வகைபடுத்துவார்கள் இவர்களை விட […]

வெல்ல பிறந்தவன் : 11

பாபிலோன் திரும்பிய அலெக்ஸாண்டருக்கு எல்லாமே முரணாக நடந்தன‌ அவனின் மிக‌ பரந்த பேரரசில் ஆங்காங்கு எழும்பிய கலவரங்கள் இப்பொழுது தீவிரமாயின, காரணம் அந்த கடைசி யுத்தம். ஒருவன் வெற்றிமேல் வெற்றி பெரும்வரைதான் அடங்கியிருப்பார்கள், அவன் சறுக்க ஆரம்பித்தால் அவன் நிழல் கூட அவனுக்கு அடங்காது. அலெக்ஸாண்டருக்கும் இதே சிக்கல் வந்தது. போராஸுக்கு மட்டும் நாட்டை திரும்ப கொடுப்பாராம், எங்களுக்கு கொடுக்கமாட்டாராம் என்பன போன்ற குரல்கள் எதிரொலித்தன, பார்மீனியோவினை கொன்றபின் அலெக்ஸாண்டரின் தளபதிகள் அலெக்ஸாண்டரை நம்பவில்லை, அலெக்ஸாண்டருக்கு அவர்களுக்கும் […]

வெல்ல பிறந்தவன் : 10

இந்தியாவிற்கு கிளம்ப திட்டமிட்டு அலெக்ஸாண்டர் தன் தெய்வத்தை வணங்கிய நேரங்களில் அவனுக்கு சகுனம் சரியில்லாமல் பட்டது. அதுவரை அவனுக்கு ஒத்துழைத்த விதி இம்முறை அவனுக்கு மாறிற்று. பெரும் பேரரசை அமைத்துவிட்டான், கிட்டதட்ட 50 நாடுகள் பெரும் கோட்டைகள் அமைந்த, கிரீஸிலிருந்து இந்திய எல்லைவரை பூதமாக பரவிவிட்டது அவன் பேரரசு, 30 வயதிற்குள் அவன் அந்த சாகசத்தை செய்திருந்தான். இத்தனை அரசுகளையும் அடக்கி வைப்பதுதான் அடுத்த சாகசம் என்பது அவனுக்கு புரிந்தது, பல இடங்களில் கலவரம் வெடித்தன அவற்றை […]

வெல்ல பிறந்தவன் : 09

பாபிலோனை நோக்கி வந்தான் அலெக்ஸாண்டர், பாபிலோன் எனும் பெருமைமிகு நகரத்தை கைபற்றும் வேகம் அவனிடம் இருந்தது. டார்சியசோ மிகபெரும் படையினை திரட்டிவைத்திருந்தான், கடந்த முறைபோல் அல்ல, இம்முறை அவனின் தயாரிப்பு கடுமையாக இருந்தது முதலில் திறந்த களத்தினை தேர்ந்தெடுத்தான், அதில் தன் தேர்படை நகர புல் எல்லாம் வெட்டி, கற்களை எல்லாம் அகற்றி ஒரு மைதானம் போல ஆக்கியிருந்தான், அந்த களமிருந்த‌ டைக்கிரீஸ் ஆற்று கரையில் அவன் படை ஆர்பரித்து நின்றது முண்ணணியில் தேர்படை அதனை அடுத்து […]

வெல்ல பிறந்தவன் : 08

அலெக்ஸாண்டர் படையினை மூன்றாக பிரித்திருந்தான், இடதுபக்கம் காலாட்படை வலதுபக்கம் குதிரைபடை என நிருத்தியிருந்தான் முன்றாம் அணியினை தனக்கு பின்னால் நிறுத்தியிருந்தான். அப்பக்கம் நடுவில் டேரியஸ் இருந்தார், அவரை சுற்றி மெய்பாதுகாவல் படை இருந்தது இடது பக்கம் குதிரைபடை, தேர் படைகள் இருந்தன, வலது பக்கம் காலாட்படை இருந்தது. யார் சங்கு ஊதினார்களோ தெரியாது, சிக்னல் கொடுத்தான் அலெக்ஸாண்டர். போரை அவன்தான் முதலில் தொடங்கினான், தன் பலமிக்க குதிரைபடையினை டேரியசின் காலாட் படையினை நோக்கி ஏவினான் டேரியரின் அம்புபடை […]

வெல்ல பிறந்தவன் : 07

அன்றைய பாரசீகம் பல நாடுகளாக இருந்தது, இன்றைய துருக்கி உட்பட்ட நாடுகளை மாமன்னன் சைரஸ் என்பவரின் வாரிசாக‌ அச்செமின்ட்ட் என்பவர்கள் ஆண்டனர். சிரியா பக்கம் அசீரியர்கள், லெபனான் பக்கம் டயர், எகிப்தில் பாரோக்கள் என சிற்றரசுகளாய் ஆண்டனர். (சைரஸ் குறிப்பிடதக்க பாரசீக மன்னன், அவன் மேற்கு பாரசீகத்தில் பெரும் அரசை அமைத்திருந்தான், அவனின் வரலாறும் மிக பெரிது.) இவர்கள் மேதிய பெர்சிய அரசனான டார்சியுஸ் என்பவருக்கு கட்டுபட்டவர்கள். டார்சியுஸ் பாபிலோனில் இருந்தான், இன்றைய பாக்தாத் அது அன்றைய […]

வெல்ல பிறந்தவன் : 06

அலெக்ஸாண்டரின் முதல் அடி சிர்மஸ் மன்னனுக்கு விழுந்தது, டான்யூப் நதிக்கரையில் நடந்த யுத்தம் அது. அதுவரை அப்படிபட்ட வினோத யுத்தத்தை கிரேக்கம் அறியவில்லை, மோதினான், கொஞ்சம் அடிவாங்கியது போல் நடித்தான், பின் ஒரேபாய்ச்சல் மொத்த எதிரி சேனையும் அடங்கியது ராணுவம் என்பதற்கும், கும்பல் என்பதற்கும் உள்ள வித்தியாசம் அதுதான். போர் என்பதற்கும் வன்முறை என்பதற்குமுள்ள வித்தியாசமும் அதுதான் யுத்தம் என்று வந்தால் வியூகம் முக்கியம், படைகளின் பலத்தினை விட வியூகம் மகா முக்கியம். எதிரியின் வியூகத்தை நொடிபொழுதில் […]

வெல்ல பிறந்தவன் : 05

அலெக்ஸாண்டருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அரண்மனை கலையிழந்தது, அலெக்ஸாண்டர் தாய் பாசத்த்தில் துடித்தான், ஆனால் தந்தையினை மதித்தான், அதுவும் தந்தை மாமன்னாக இருக்கும்பொழுது என்ன செய்ய? தந்தையோ மனோகரா படத்து புருஷோத்தமனாக இருந்தார், கிரேக்கத்து கிளியோபாட்ராவிடம் மயங்கி கிடந்தார், திருமண நாளும் நெருங்கிற்று (இது எகிப்து கிளியோபாட்ரா அல்ல, அவர் வேறு, அது அங்கு அரச குடும்பத்து சொல் , சில சமஸ்தானங்களில் நாச்சியார் என சொல்வார்கள் அல்லவா? அப்படி. பின்னாளில் எகிப்தில் கிரேக்கர் ஆளும்பொழுது […]

வெல்ல பிறந்தவன் : 04

அரிஸ்டாட்டில் வரலாற்றின் பெரும் ஞானி, சாக்ரடீஸின் அறிவின் வாரிசாக வாழ்ந்துகொண்டிருந்தவர். மிக சிறந்த குடிமக்களை உருவாக்குவதே என் பணி என பள்ளி நடத்திகொண்டிருந்தார். கிரேக்கத்தில் பள்ளிகூடத்தின் பெயர் அகாடெமி கிரேக்கத்தின் பெரும் மன்னன் அழைக்கின்றான் என்பதற்காக அவர் மாசிடோனியா வந்தார், ஆனால் அரண்மனை வாழ்வு அவருக்கு மகிழ்ச்சியாய் இல்லை, எனக்கு புறநகர் பக்கம் ஒரு தோட்டம் சூழ்ந்த அகாடெமி அமையுங்கள் என கேட்டுகொண்டு அப்பக்கம் சென்றுவிட்டார் தனியாக அரசகுமாரன் மட்டும் என்னிடம் பாடம் படிக்க முடியாது, மாசிடோனியாவின் […]

வெல்ல பிறந்தவன் : 03

அன்று ஜுலை 26, கி.மு 356 அலெக்ஸாண்டர் பிறந்திருந்தான் பிலிப்பிற்கோ ஏக மகிழ்ச்சி, பெரும் விழாவாக அவனின் பெயர் சூட்டும் விழாவினை நடத்தி கிரேக்க குருமார்கள் புடைசூழ அவனுக்கு மூன்றாம் அலெக்ஸாண்டர் என பெயரிட்டார், அதாவது அவனுக்கு முன்பும் அலெக்ஸாண்டர்கள் இருந்திருக்கின்றார்கள் தம்பிடிக்கு பிரயோசனம் இல்லை. இவனை பெரும் வீரனாக்கி மாசிடோனியாவின் புகழை பரவச்செய்வேன் என அவர் முழங்கியபொழுது நிச்சயம் சுபமுகூர்த்த நேரமாகத்தான் இருந்ந்திருக்க வேண்டும் அலெக்ஸாண்டர் தாயின் மடியில் தவழ ஆரம்பித்தான், தந்தையோ போர்க்களம் செல்லுதல் […]