பழமொழி நானூறு : 02
“சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வு இன்றிக்கற்றொறும், “கல்லாதேன்” என்று, வழி இரங்கி,உற்று ஒன்று சிந்தித்து உழந்து ஒன்று அறியுமேல்கற்றொறும் தான் கல்லாத வாறு” தம்மினும் கல்வியுடையார் முன்னர்ச்சென்று சொல்லும் பொழுதிலெல்லாம் சொல்வதிலே தளர்ச்சியானது தோன்றலாம்.அதனால், சோர்வு அடையவே கூடாது. புதிதாக ஒன்றைக் கற்குந்தொறும், தான் கல்லாதவன் என்று கருதி, அதனைக் கற்கும், வழியினை நினைத்து இரங்கி மனம் ஒருமைப்பட அது ஒன்றையே சிந்தித்து, வருந்தியாயினும் அந்த ஒன்றை அறிய முற்படவேண்டும்.இப்படியாவதனால், புதிதாக ஒவ்வொன் றையும் கற்குந்தொறும் தான் […]