பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 09

“பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றிஅறுத்துருவ மாற்றி யிரு” பிறப்பற்ற நிலையினை அடைவதே மோட்சவீடு பாக்கியமாகும், சிறந்த ஒப்புமை (பேர் உவமை) இன்றி, அதாவது உலகோடும் உலக இயல்போடும் ஒன்றி இராமல் அந்த இயல்பை அறுத்து தன்னை உருமாற்றி இருத்தல் வேண்டும் என்கின்றார் ஒளவையார். மோட்சம் என்பது பிற்ப்பற்ற நிலையே, அந்த நிலையினை அடைய உலக இயல்பை அறுத்து தன் மானிட இயல்பிலிருந்து தன்னை அறுத்து , தன் இயல்பை மாற்றி சிவ சிந்தனையில் இருத்தல் வேண்டும் என்கின்றார் […]

நவராத்திரி சிந்தனைகள் : 04

மானிட வாழ்வினை இயக்கும் மிகபெரிய சக்தி, ஆதார சக்தி செல்வம் என்பதை உணர்ந்திருந்த இந்து ஞானியர் அதனை பெருக்கவும் காக்கவும் அதன் மூலம் தானும் உய்ந்து சமூகத்தையும் ஒருவன் உய்விக்கலாம் என்பதை உணர்ந்தார்கள் “பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை” என அதை தெளிவாக சொன்னார் வள்ளுவ நாயனார். செல்வம் எல்லோரிடமும் இருப்பதல்ல, திறமையும் அறிவும் இருக்குமிடம் எல்லாம் செல்வம் இருப்பதில்லை என்பதையும், செல்வம் இருந்தாலும் அதை கொண்டாடி அனுவிக்க பலவகை காலசூழலும் வாய்ப்பும் வரவேண்டும் என்பதையும் அதை தெய்வமே […]

நீதிநெறி விளக்கம் : 96

“இசையாத போலினு மேலையோர் செய்கைவசையாகா மற்றையோர்க் கல்லாற் – பசுவேட்டுத்தீயோம்பி வான்வழக்கங் காண்பாரை யொப்பவேஊனோம்பி யூன்றின் பவர்” மேலோர் செய்யும் பல காரியங்களை இழிபுத்தி கொண்ட மக்களால் புரிந்து கொள்ள முடியாது, அதனை இகழ்ந்து பரிகசிப்பர். பசுவின் நெய்கொண்டு யாகம் வளர்த்து உலக நன்மைக்கு பாடுபடும் மேலோரும், பசுவினை கொன்று தின்னும் கீழோரும் ஒப்பாகமுடியுமோ? பெரியோர்கள் செய்யும் காரியங்களையும் அவற்றின் பலனையும் புரிந்துகொள்ள முடியா மூடர்கள் பெரியோரை பரிகசிப்பார்கள் இழிவு செய்வார்கள் அவர்களால் மேல் மக்களை புரிந்துகொள்ளவும் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 08

“பிதற்று முணர்வை யறுத்துப் பிரபஞ்சவிகற்ப முணர்வதே வீடு அர்த்தமில்லா உணர்வை அதாவது உடலே பிரதானம் எனும் உணர்வை அறுத்து உண்மையான பொருளை தேடி தவமிருந்து பிரபஞ்சத்துடன் கலப்பதே வீடு பேற்றுக்கான வழி என்கின்றார் ஒளவையார். அழிய கூடிய உடலிலும் அதன் ஆசைகளிலும் மனதை வைத்து ஆசையினை செலுத்தி வாழ்வினை வீணாக்காமல் அழியாத நித்தியமான பிரபஞ்ச சக்தியினில் கரைந்து வீடு பேறு அடைய முயற்சிக்க வேண்டும் என்பது ஒளவை சொல்லும் போதனை

நவராத்திரி சிந்தனைகள் : 03

நவராத்திரி சிந்தனைகள் : 03 அன்னபறவை வெண்மை நிறமானது, எப்பொழுதும் முழு வெண்மையாக காட்சி அளிப்பது. வெண்மை என்பது தூய்மையின் நிறத்தை குறிப்பது, கலைகளும் அதன் பலனும் எப்பொழுதும் தூய்மையாய் உயர்ந்ததாய் இருக்கவேண்டும் என்ற தத்துவத்தில் அன்னபறவை சரஸ்வதிக்கு சின்னமாக்கபட்டது அன்னம் எப்பொழுதும் சுத்தமாக காட்சியளிக்கும், சுத்தமில்லாமலோ அழக்கு அடைந்தோ அதனை காண முடியாது, கலைகள் எப்பொழுதும் சுத்தமாக தூய சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்ற தத்துவம் அதில் இருந்தது அன்னம் நீர், நிலம், வானம் என […]

குமரகுருபரர் நீதி நெறி விளக்கம் : 95

“மெலியார் விழினு மொருவாற்றா னுய்பவலியார்மற் றொன்றானு முய்யார் – நிலைதப்பிநொய்ய சழக்கென வீழாவாம் வீழினும்உய்யுமா லுய்யா பிற” மெல்லிய பொருள் ஒன்று மேலிருந்து கீழே விழுந்தால் அது நொறுங்காது, ஆனால் கனமான பொருள் கீழே விழுந்தால் உடைந்துவிடும் , அப்படி ஒன்றுமில்லா சாமானியனோ பெரும் அறிவில்லாதவனோ வீழ்ந்தால் அவனுக்கு ஏதுமில்லை ஆனால் கற்றறிந்த பெரியோர்கள் வீழ்ந்தால் அந்த பாதிப்பு கடுமையானதாக இருக்கும் எழமுடியாதவாறு இருக்கும் என்பது பொருள் ( சழக்கு என்றால் தளர்ச்சி அல்லது சறுக்கல் என […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 07

“குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றில் மறித்துப் பிறப்பில்லை வீடு” இப்பாடல் “குறித்து உருவமெல்லாம் குறைவின்றி மாற்றில் மறித்து பிறப்பில்லை வீடு” என பிரிந்து பொருள் தரும்உருவம் என்றால் காட்சி, மாய காட்சிகளும் ஆசைகளும் என இங்கு பொருள் கொள்ளலாம் மாய காட்சிகளும் அது கொடுக்கும் ஆசைகளின் மூலத்தை கண்டறிந்து அந்த காட்சிகளை மாற்றி அதாவது அங்கு அந்த மாய காட்சிகளுக்கு பதில் சிவசிந்தனை , உண்மை ஞானம் என மாற்றி வைத்தால் பிறப்பில்லா நிலைக்கு தடை ஏதுமில்லை […]

நவராத்திரி சிந்தனைகள் : 02

இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் வாழ ஒரு தொழில் அவசியம், ஒரு வேலையினை ஏதோ ஒரு வடிவில் அவன் செய்ய வேண்டும், அவனுக்கு ஒரு பலன் வேண்டும் மானிட வாழ்வில் அவன் இந்த சமூகத்துக்கு ஒன்றை கொடுத்து தனக்குதேவையானதை பெற வேண்டும் இதுதான் அவனுக்கு விதிக்கபட்ட வாழ்வு, மற்ற விலங்குகளில் இருந்து அவன் இங்குதான் வேறுபடுகின்றான் அவன் ஆறாம் அறிவு பெற்ற பலன் இதுதான், இங்கேதான் கூர்ந்து கவனித்தது இந்துமதம் ஆம், வேலை செய்வது என்பதை மாடும் […]

நவராத்திரி சிந்தனைகள் : 01

கலை என்பது வெறும் ரசிக்க கூடிய படைப்பினை மட்டும் கொடுக்காது, வெறும் தற்காலிக புகழை கொடுக்காது, சில இடங்களில் செல்வத்தை மட்டும் கொடுக்காது. கலையினை தெய்வ நினைவோடு ஒருவன் தொடரும் பொழுது அது அவனை முக்திக்கு சேர்க்கும் ஞான நிலைக்கு இழுத்து செல்கின்றது “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்” என தெளிவாக சொன்னான் வள்ளுவன், ஆம் கலையோ கல்வியோ அதன் உச்சபட்ட நிலை கடவுளை உணர்வது உணர்ந்ததை உணர்த்துவது. கலை படைப்பு என்பது சாமான்யம் […]

ஆர்.எஸ்.எஸ்

பிரிட்டிசாரிடம் சிக்கிய இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என தேசம் போராடியபொழுது சுதந்திரம் அடைந்து என்ன செய்யவேண்டும் என்ற திட்டம் யாரிடமும் அன்று இல்லை ஆப்கானியரோடு நடந்த இந்து விடுதலை யுத்தத்தில்தானே வெள்ளையன் புகுந்தான் அப்படியானால் விடுதலையின் நோக்கம் என்ன என்பதை யாரும் சிந்திக்கவில்லை சுதந்திரம் கிடைத்தால் இத்தேசம் என்னென்ன விளைவுகளை சந்திக்கும், என்னென்ன பாதிப்பு வரும், இந்தியா எப்படி சுதந்திரபோராட்ட நோக்கில் அதாவது ஆயிரமாண்டு போராட்ட பாதையின் இலக்கில் இருந்து மாறும் என யாரும் யோசிக்கவில்லை அந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications