பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நீதிநெறி விளக்கம் : 94

நீதிநெறி விளக்கம் : 94 “மறைவழிப் பட்ட பழமொழி தெய்வம்பறையறைந்தாங் கோடிப் பரக்குங் கழிமுடைப்புன்புலா னாற்றம் புறம்பொதிந்து மூடினும்சென்றுதைக்குஞ் சேயார் முகத்து” அழுகிய மாமிசத்தை மூடி வைத்தாலும் அதலிருந்து வரும் துர்நாற்றத்தை மறைக்க முடியாது, அப்படியே ஒருவன் எங்கோ மறைவாக பேசிய பழிகளும் வஞ்சக மொழிகளும் தெய்வம் கண்ணை திறக்கும்பொழுது எல்லா இடத்துக்கும் பரவிவிடும் என்பது பொருள். யாரும் கண்காணிக்காத இடத்தில் இன்னொருவரை பற்றி பழிபேசுகின்றோம் என பேச வேண்டாம், தெய்வம் அவனை தண்டிக்கும் நேரத்தில் மறைவாக […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 06

“நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால்தனக்கொன்று மில்லை பிறப்பு” அதாவது இந்த உலக மயக்கமான விருப்பு, வெறுப்பு, பந்தம், பாசம் போன்றவற்றை மறந்தால் அவற்றில் இருந்துவிடுபட்டு ஆசை மயக்கம் கடந்த பெரு ஞானநிலையினை அடைந்தால் மீண்டும் பிறப்பில்லை என்கின்றார் ஒளவையார் மனதில் எழும் நினைவுகளும் ஆசைகளுமே எல்லா துன்பத்துக்குமே காரணம், நடந்ததை நினைப்பதும் இப்படி நடக்கவேண்டும் என நினைப்பதுமே மானிடரின் எல்லா துயரத்துக்கும் காரணம், அந்த நினைப்பை வெறுத்து அறுத்து நடந்ததையும் எதிர்கால ஆசைகளையும் துறந்தால் ஞானம் பெருகும், […]

ஆச்சரகோவை : 60

ஆச்சரகோவை : 60 “யாதொன்றும் ஏறார் செருப்பு வெயில் மறையார்ஆன்ற அவிந்த மூத்த விழுமியார் தம்மோடு அங்குஓர் ஆறு செல்லும் இடத்து” கற்றறிந்த பெரியார்கள், அனுபவஸ்தர்கள், மூத்தவர்கள் ஆகியோர் நடந்து செல்லும்பொழுது அவர்களை நடக்கவிட்டு தான் மட்டும் குதிரை, தேர், பல்லக்கு போன்ற வாகனங்களில் அறிவுடையோர் ஏறமாட்டார்கள் அவர்கள் வெயிலில் வாடி நடக்க அறிவுடையோர் தனக்கு குடை பிடிக்கமாட்டார்கள், அவர்கள் பாதம் மண்ணில் காயும்படி இருக்க அறிவுடையோர் தன் பாதங்களுக்கு செருப்பு அணியமாட்டார்கள் அதாவது பெரியோர்களையும் அறிஞர்களையும் […]

இந்துமதம் மானிடரின் வாழ்வியலை

இந்துமதம் மானிடரின் வாழ்வியலை மனவோட்டத்தை மிக நுணுக்கமாக அணுகிய மதம், கொண்டாட்டம் வாழ்வுக்கும் மனது உற்சாகத்துக்கும் அவசியம் என சொன்ன மதம். அனுதினமும் உழைத்து ஒரே வேலை ஒரே உணவு ஒரே வீடு என்றிருக்கும் மனம் அலுத்து போகாமல் அதை உற்சாகபடுத்த சிந்தித்த மதம், இதனால் அது ஏகபட்ட திருவிழாக்களை உருவாக்கியது. மானிட மனநலனை சிந்தித்த ஒரே மதம் இந்துமதம் மட்டுமே. அதிலும் பெண்களின் மனநிலையினை சரியாக புரிந்த மதம் அதுதான், பெண்களுக்கு வேலைகள் அதிகம், சிந்தனையும் […]

மலபார் இந்து இனபடுகொலை

இந்திய சரித்திரத்திலே மிக கொடுமையானதும், தைமூரும் இன்னும் பலரும் செய்த மாபெரும் கொலைகளைவிட, அதாவது டெல்லியில் மனித தலையில் பிரமீடு கட்டி பெரும் பாதக கலவரம் செய்த தைமூரின் காலங்களை விட கொடியது அந்த மாப்பிள்ளைமார் கலவரம் உண்மையில் அது கலவரம் அல்ல, திட்டமிட்ட இன அழிப்பு, அந்த கொடூரத்தில் செத்தவர்களெல்லாம் இந்துக்களாக இருக்குமளவு, இந்துக்களே இனி வாழகூடாது என முடிவெடுக்கபட்டு நிகழ்த்தபட்ட பெரும் இந்து இன அழிப்பு கேரள மாகாணத்தில் 1921ல் நடந்த இந்து இன […]

நீதிநெறிவிளக்கம் : 92

“நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வைகஞ்சுக மன்று பிறிதொன்றே – கஞ்சுகம்எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்குமற்றிப்புலமுங் காவா திது” கஞ்சுகம் என்றால் ஆடை அல்லது மேல்துணி உள்ளத்தால் துறவு பூணாமல் எல்லா ஆசைகளையும் மனதில் வைத்து கொண்டு துறவிக்குரிய ஆடையினை அணிந்தால் அவர் துறவியாகிவிட மாட்டார், அந்த கஞ்சுகம் எனும் ஆடை அவர் உடலை காக்குமே தவிர அவரின் உணர்வை காக்காது, அந்த உணர்வினை அவரால் துறக்கமுடியாதபொழுது அவர் ஞானம் பெற்று முக்தி அடைய வழியே இல்லை உள்ளத்தால் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 04

“கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சையறுத்துருவ மாற்றி யிரு” இக்குறள் “கறுப்பு வெளுப்பு சிவப்பு உறுபொன் பச்சை அறுத்து உருவ மாற்றி இரு” என பொருள்படும் ஞானமார்க்கத்தை போதிக்கும் ஒளவை ஏன் நிறங்களை பற்றி சொல்கின்றார் என்றால் இந்துக்கள் ஐம்பூதங்களையும் புலன்களோடு அதற்குண்டான தொடர்போடு சொன்னார்கள், அந்த புலன்களை அடக்க அந்த ஐம்பூதங்களின் தன்மையினை அதனதன் வகையின் நிறத்தால் சொன்னார்கள் கறுப்பு என்பது காற்றினை குறிக்கும் நிறம், மிதுனம் எனும் காற்று ராசியின் அதிபதியாக சனிகிரகத்தை இந்துமதம் சொல்லிற்று […]

சேவல் விருத்தம் : 07

“வீறான காரிகதி முன்னோடி பின்னோடிவெங்கட் குறும்புகள் தரும்விடுபேய்க ளேகழுவன் கொலைசாவு கொள்ளிவாய்வெம்பேய் களைத்துரத்திப்பேறான சரவண பவா என்னுமந்திரம்பேசியுச் சாடனத்தாற்பிடர்பிடித் துக்கொத்தி நகநுதியி னாலுறப்பிய்ச்சுக் களித்தாடுமாம் மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்மகோதரம் பெருவியாதிவாதபித் தஞ்சிலேற் பனங்குட்ட முதலானவல்லபிணி களைமாற்றியேசீறாத ஓராறு திருமுக மலர்ந்தடியர்சித்தத் திருக்கு முருகன்சிலைகள்உரு விடஅயிலை விடுகுமர குருபரன்சேவற் றிருத் துவசமே” முதல்வரி இதோ “வீறான காரிகதி முன்னோடி பின்னோடிவெங்கட் குறும்புகள் தரும்” இவ்வரி “வீறான காரி கதி முன்னோடி பின்னோடி வெம் கண் குறும்புகள் தரும்” […]

நாச்சியார் திருமொழி 23

ஆண்டாள் நாளெல்லாம் கண்ணனை தேடினாள் அவன் வரவில்லை, அவனை அவள் மிகவும் தேடுகின்றாள் என்பதை அறிந்ததால் கண்ணனும் வரவில்லை, அவன் வரமாட்டான் என தெரிந்தாலும் அவள் மனம் தேடுவதை நிறுத்தவில்லை அணைகட்டினாலும் கசியும் நீர்போல் மனம் அவனை தேடிகொண்டுதான் இருந்தது அவன் நினைவுகளோடு கண்ணன் சிலைமுன் அப்படியே கண் அயர்ந்தாள் ஆண்டாள், மெல்லிய தென்றல் அவளை தீண்ட அந்த சுகந்தத்தில் தன்னை அறியாமல் தூங்கினாள், அந்த தூக்கத்தில் அவளுக்கு கனவு வந்தது அந்த கனவில் அவள் களத்தில் […]

குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 91

“நல்லவை செய்யத் தொடங்கினு நோனாமேஅல்லன வல்லவற்றிற் கொண்டுய்க்கும் – எல்லிவியனெறிச் செல்வாரை யாறலைத் துண்பார்செலவு பிழைத்துய்ப்ப போல்” அதாவது ஒருவன் நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் பல காரியங்களை செய்தாலும் அதனால் சில இக்கட்டில் சிக்கி அல்லன செய்யவேண்டிய நிலையும் வரும், காட்டில் பயணம் செய்பவன் நல்ல நோக்கத்துக்காக் பயணம் செய்தாலும் சில கள்வர்கள் அவன் பொருளை பறித்து அவன் நோக்கத்தை சிதைப்பர் என்பது பாடலின் பொருள் ஒருவன் நல்லது செய்ய நினைத்தாலும் நல்லபடிவாழ நினைத்தாலும் அவன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications