பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குலேசனின் கதை

பகவான் கிருஷ்ணனின் அவதாரம் அரசுரர்களையும் அதர்மத்தையும் அழிப்பதற்கு என்றாலும் அங்கு அந்த பரந்தாமனின் ஒவ்வொரு அசைவும் வாழ்வுக்கும் ஆன்மீகத்துக்குமான தத்துவ போதனைகள் விளையாட்டாகவும், புன்னகையடனும், இயல்பாகவும் அவன் நடத்திய ஒவ்வொரு காட்சியும் ஆழ்ந்த போதனைகளை வாழ்வுக்கும் ஆத்மாவுக்கும் போதித்தது, அப்படி கண்ணன் நடத்தியதுதான் அந்த குலேசன் கதை அந்த குலேசனின் கதை எப்பொழுது படித்தாலும் உருக்கமானது, பல தத்துவங்களை போதிப்பது பகவான் கண்ணன் இளவயதாயிருந்த பொழுது அவனுக்கிருந்த பல நண்பர்களில் குசேலனும் ஒருவன் பின்னாளில் கண்ணன் பெரும் […]

சுப்பிரமணிய பாரதி

காசி ஒரு புண்ணிய நகரம், அது மாபெரு பிரபஞ்ச சக்தியினை தன்னுள் வைத்துகொண்டு இந்துஸ்தானத்துக்கான வழிகாட்டிகளை, மிக சரியான ஆற்றல் மிககவர்களை, இறைசக்தி தேடி கொண்டவர்களை எதிர்பார்த்து கொண்டே இருக்கும் உரிய காலத்தில் உரிய நபர் அங்கு கால்வைத்துவிட்டால் தன்னிடம் வந்து அமர்ந்துவிட்டால் எல்லா சக்திகளையும் ஞானத்தையும் அவர்களுக்கு அள்ளி கொடுத்து அனுப்பி வைக்கும் அதன்பின் அந்த பிறப்பு செயற்கரிய சாதனை பல செய்து உயர்ந்து நின்று ஜோதியாய் வழிகாட்டும், வரலாற்றில் ஆதிசங்கரர் முதல் விவேகானந்தர், குருநாணக் […]

கந்தர் அனுபூதி : 06

“திணியா னமனோ சிலைமீ துனதாள்அணியா ரரவிந்த மரும்புமதோபணியா வென வள்ளி பதம் பணியுந்தணியா வதிமோக தயாபரனே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும் “திணியான மனோ சிலை மீது உனதாள்அணியார் அரவிந்தம் அரும்பு மதோபணியா என வள்ளி பதம் பணியும்தணியா அதிமோக தயா பரனே” “திணியான மனோ சிலை” என்றால் மிக உறுதியான பாறை என பொருள், மிக மிக இறுக்கமான தன் பாறை மனதை பற்றி சொல்கின்றார் அருணகிரியார் மேலும் தொடர்கின்றார் “மீது உனதாள் அணியார் […]

சக்கரவர்த்தி ராஜகோலாச்சாரியார்

அந்த மனிதன் மிகபெரும் அறிவாளி, அடுத்த 200 ஆண்டுகாலத்தை முன் கூட்டியே கணிக்கும் அளவு மிகபெரும் தீர்க்கதரிசி, லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்ட புனித பிம்பம். சம்பாதிக்கவேண்டிய வழக்கறிஞர் தொழிலை நாட்டுக்காய் தியாகம் செய்த வ.உ.சி வகையறாஅந்த மனிதன் தமிழகத்தில் சுதந்திர போராட்டம், அரசியல், தேசபணி என பல இடங்களில் மிகபெரிய அடையாளமாய் இருந்தான், பிரிட்டிஷ் இந்தியாவில் தேர்தல்முறை அறிமுகபடுத்தபட்டபொழுது ஆட்சி என்றால் என்ன? நிர்வாகம் என்றால் என்ன என்பதை முதலில் சொல்லி கொடுத்ததே அந்த மாமனிதனே அந்த […]

இந்துக்களின் ஒவ்வொரு மாத பவுர்ணமியும் முக்கியமானது, அந்த பவுர்ணமியோடு வரும் நட்சத்திரங்கள் படி பெரும் நுணுக்கமான பண்டிகையினை அமைத்தார்கள் நிறைந்த நிலவு கொண்ட அந்நாள் மாதம் மாதம் கொண்டாடபட வழிவகைகளையும் ஏற்படுத்தினார்கள், அதில் ஒரு தத்துவமும் ஆன்மீகமும், சுற்று சூழலும், மருத்துவமும்,நலமும் மானிட நலமும் அறிவும் தெய்வ நம்பிக்கையும் மேம்பட வழியும் சொன்னார்கள் தைபூசம், சித்திரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடி பூரம், ஆவணி அவிட்டம் என்ற வரிசையில் கார்த்திகை தீபமும் மகா முக்கியமான ஒரு நாள் […]

கார்த்திகை தீபம் எனும் அந்த ஞான பண்டிகை

கார்த்திகை தீபம் எனும் அந்த ஞான பண்டிகை ஏதோ விளக்கு வைத்து கொண்டாடும் வெறும் சம்பிரதாயம் அல்ல, மழைகாலத்தில் சீதோஷ்ண கிருமிகள் பரவாமல் இருக்க மட்டும் கொளுத்தபடும் பெரும் நெருப்பும் அல்ல‌ அது மாபெரும் தத்துவத்தையும் இந்திய ஞானமரபின் ஆன்மீக மரபின் பெரும் ஞானத்தையும் சொல்லும் நாள் இந்திய இந்துக்களின் பிரதான வழமை அக்னி வழிபாடு, ஐம்பெரும் பூதங்களில் ஒன்று என்றல்ல அதையும் தாண்டி பரம்பொருளே ஜோதிவடிவானவர் என சொல்லி அந்த ஒளியினை வணங்கும் சமூகம் இது […]

Jack Farj Rafael Jacob

அந்த முன்னாள் இந்திய தளபதி பலருக்கும் தெரியாது, 1971ல் இந்தியா பாகிஸ்தான் யுத்ததின் பொழுது மாபெரும் சாகசத்தை அவர் செய்தார் அவர் பெயர் Jack Farj Rafael Jacob அவர் லெப்டினென்ட் ஜெனரல் தரத்தில் இருந்தார், அவர் அன்று காட்டிய மாவீரம் சிலாகிப்புகுரியது, இதே டிசம்பர் 12ம் நாள் அது அந்த ரபேல் ஜாக்கெப் ஒரு யூதர், பாக்தாத் யூதர். ஆம் அவர் ஈராக் பக்கம் வாழ்ந்த யூத குடும்பம், 17ம் நூற்றாண்டில் வியாபாரத்துக்காக கல்கத்தா வந்த […]

நீலகண்ட கிருஷ்ணன்

நாம் யாரையும் மறைக்கவில்லை அந்த அவசியமுமில்லை, வங்கபோரின் தலமை தளபதி மானெக்சா எனும் வகையில் அவர்தான் யுத்தத்தை நடத்தினார் என்பதால் அவ்வெற்றி அவரின் பெரும் வெற்றியாக பார்க்கபட்டது ஆனால் அவருக்கு கீழ் ஏகபட்ட தளபதிகள் தீரம் காட்டினார்கள், அவர்களில் இருவர் சாகசமே போரை மாற்றியது ஒருவர் தமிழரான கிருஷ்ணன் இன்னொருவர் இந்தியவாழ் யூதரான ஜேக்கப் இங்கு கிருஷ்ணனை பற்றி காணலாம் அந்த ஜேக்கப் பற்றி அடுத்த பதிவில் காணலாம் நிச்சயமாக அந்த கிருஷ்ணனின் சாகசம் பெரிது, ஆனால் […]

ஆறுமுக நாவலர்

ஓலைசுவடியில் இருந்த தமிழை அச்சுக்கு கொண்டுவந்தவர் உ.வே சாமிநாதய்யர் என்றாலும் அதற்கு சில முன்னோடிகள் இருந்தார்கள் அதற்கு காரணமும் இருந்தது தமிழகமும் இலங்கையும் இரட்டை சகோதரர்கள் என்றாலும், மூவேந்தர்களுக்கும் தென்னிலங்கை வட இலங்கை மன்னர்களுக்கும் மண உறவுகள் இருந்தன என்றாலும், பாண்டிய சிங்கள தொடர்ச்சியாக நாயக்க சிங்கள தொடர்புகள் இருந்தன என்றாலும் ஒரு கட்டத்தில் அந்த தொடர்பு அறுந்தது 17ம் நூற்றாண்டின் சில அரசியல் சூழலும் மேவேந்தர் கால தமிழக கப்பல்படை இல்லாததும் அதற்கு காரணம் அந்த […]

கந்தர் அனுபூதி : 05

கந்தர் அனுபூதி : 05 “மக மாயை களைந்திட வல்ல பிரான்முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனேஅகம் மாடை மடந்தையர் என்ற‌ அயரும்செகமாயையுள் நின்று தயங்குவதே” இந்த பாடலின் வரியினையும் பொருளையும் ஒவ்வொன்றாக காணலாம் “மக மாயை களைந்திட வல்ல பிரான்” என்பது முதல் வரி, மகம் என்றால் மிகபெரிய மிக அதிகாரமும் வல்லமையும் கொண்ட வெளிப்பாடானது என பொருள், அப்படிபட்ட பெரிய மாயை என பொருள், களைதல் என்றால் நீக்குதல். அப்படியான பெரிய மாயைகளையும் நீக்க வல்லவரான […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications