ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 02
“அயனங்கொள் சந்திரனா லாதித்த னொன்றில்நயனமா முத்திக்கு வீடு” இக்குறள் “அயனம் கொள் சந்திரனால் உதித்த ஒன்றில் நயனமாம் முத்திக்கு வீடு” என பிரிந்து பொருள் தரும் அயனம் என்றால் சூரியன், அதாவது பிங்கலை மூச்சு, பிங் எனும் சொல்லுக்கு வழி என்றும் பொருள் அந்த பிங்கலையுடன் இடகலை மூச்சு சேர்ந்து அதாவது யோகத்தில் இரு மூச்சுக்களும் கலந்து சுழிமுனை நாடி தூண்டபடும் பொழுது ஒரு ஞான ஒளி கிடைக்கும், அந்த ஞான ஒளியில் முக்திக்கான வழி தெரியும் […]