பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கோட்சேவின் நெஞ்சுக்கு நீதியானது…

அந்த இந்தியா எரிந்து கொண்டிருந்தது, ஆண்டாண்டு காலம் மத கலவரம் சாதி கலவரம் இல்லா இந்தியா வெள்ளையன் வந்தபின் இந்த கோலங்களால் எரிந்து பிரிந்து கொண்டிருந்தது பஞ்சாபிய எல்லையும் வங்க எல்லையும் கோரமாக எரிந்தது, எரிந்தது என்பதை விட இந்துக்கள் எரிந்தனர் அவர்கள் சொத்துக்கள் எரிந்தது, இந்து பெண்களெல்லாம் கற்பிழந்து சாவை பெற்றுகொண்டும் ஓடிகொண்டுமிருந்தனர் தனக்கு அள்ள அள்ள செல்வத்தை வழங்கிய இந்தியா தன் கையினை விட்டு போகும் வெறுப்பில் வெள்ளையன் செய்த சதி அது நிச்சயம் […]

பிர்சா முண்டா

18ம் நூற்றாண்டில் பொதுவுடமை பேசியவன் கார்ல் மார்க்ஸ் என்றாலும் அவன் ஐரோப்பாவில் எழுதி பேசிகொண்டிருந்தானே தவிர காரியத்தில் இறங்கவில்லை எல்லாம் பேச்சோடு நிறுத்திகொண்டான் அவனின் சில கூட்டாளிகளும் அவ்வகையே 1919ல்தால் லெனின் ரஷ்யாவில் அடித்து பிடித்து ஆட்சியினை மாற்றினான், மாவோ, காஸ்ட்ரோ, ஹோ சி மின் என எல்லாரும் லெனினுக்கு பின்னர்தான் வந்தார்கள் ஆனால் 1890களிலே ஒரு இந்தியன் கம்யூனிசம் பேசினான், சோவியத் யூனியனுக்கு முன்பே அவன் உலகில் பொதுவுடமை இயக்கத்தை நிறுவ பார்த்தான் என்றால் அவன் […]

புல்தின்ற கல்நந்தி , மிலேச்சர் மிரண்ட வரலாறு

இலஙகையில் உள்ள இந்துமத ஸ்தலங்களை சொல்லமுடியுமா என சிலர் கேட்டார்கள், அந்த தீவில் சைவம் எக்காலமும் உண்டு, ராவணன் சீதையினை சிறைவைத்த வகையில் வைஷ்ணவ அடையாளமும் உண்டு பின்னாளில் பவுத்தம் வந்தாலும் சிங்களவரில் பலர் இன்றும் இந்துக்களே, எப்படியான இந்துக்கள் என்றால் கதிர்காமம் முருகன் ஆலயத்தை மிக புனிதமாக போற்றி வணங்கும் சுத்தமான இந்துக்கள், இன்றும் கதிர்காமம் ஆலயம் அவர்கள் கட்டுபாட்டில்தான் உண்டு நல்லூர் கந்தசாமி கோவில் உலகெல்லாம் அறிந்த சிறப்புடையது, திரிகோணமலை சிவன் கோவில் நாயன்மார்களால் […]

ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை எனும் சிக்கலின் மூலமும் முடிவும்…

ராஜிவ் கொலை என்பது வெறும் அரசியல் கொலை அல்ல, உலகிலே மனித வெடிகுண்டால் கொல்லபட்ட முதல் தலைவர் அவர்தான் எனும் வகையில் அது மகா முக்கியத்துவமானது, அதன் மூலம் மற்றும் முடிவு அதனால் ஏற்பட்ட விளைவு வரை இங்கு அலசலாம் பொதுவாக ஈழதமிழருக்கும் தமிழக தமிழருக்குமான உறவு கசப்பானது, அக்காலம் முதலே ஈழதமிழரும் தமிழக தமிழரும் கொஞ்சம் இடைவெளி கொண்டிருந்தனர், அதுவும் வெள்ளையன் இதனை மிக திட்டமிட்டு வளர்திருந்தான், கொழும்பு மலையகம் ஈழம் என தமிழக தமிழர்கள் […]

உதவி தேவைபடும் “சிறப்பு குழந்தைகளுக்கான நாளாக” இதனை கொண்டாடலாம்

19ம் நூற்றாண்டில் ஒரு தந்திரம் உலகெல்லாம் உண்டு, அதாவது கொஞ்சமும் தகுதி இல்லாத ஒருவரை மறுபடி மறுபடி மக்கள் மனதில் பதியவைத்து அவரை பெரும் பிம்பமாக்குவது ஊடகங்கள் பல தங்களை அறியாமலும் பல தங்களை அறிந்தும் இந்த காரியத்தை செய்யும், ஒரே ஒருவருக்கு கொடுக்கபடும் அதீத விளம்பரம் மற்ற திறமையான எல்லோரையும் அப்படியே மறைய செய்துவிடும், கிரிக்கெட்டில் யாருக்கும் வாய்பளிக்காமல் ஒரே ஒருவனை மட்டும் நிறுத்தி ஆட சொன்னால் எப்படி இருக்கும் அப்படியான நிலை இது இதனை […]

தமிழில் வழிபாடு

வரலாற்றை எப்பொழுதும் அதன் ஆட்சிகாலங்களோடு பார்க்க வேண்டும், அங்கு நடந்த அரசியல் காட்சிகளோடு பார்க்க வேண்டும் இங்கு தமிழுணர்வோ, தமிழ் அபிமானமோ ராம்சாமி காலத்திலும் கருணாநிதி காலத்திலும் ஏற்பட்டது அல்ல, தமிழில் வழிபாடு என்பதெல்லாம் திராவிடத்தில் எழுந்ததே அல்ல‌ இங்கு தமிழில் வழிபாடு என்பதை அகத்தியர் சொன்னார், இன்னும் பலர் சொன்னார்கள், 11ம் நூற்றாண்டில் ராமானுஜர் எனும் மகானே தமிழ் வழிபாட்டை செய்தார் தமிழ்சங்கமெல்லாம் பல ஆயிரம் ஆண்டாக தமிழை வளர்த்தது, இங்கு முருகன் சிவன் விநாயகர் […]

அகநானூறு : 03

நாதா மேனகையே வா என்ன செய்கின்றீர்கள் நாதா அருணகிரி நாதரின் கந்தர் அனுபூதி வாசிக்கின்றேன், வா இருவரும் சேர்ந்து அந்த இனிமையான ஆன்மீக சாற்றினை பருகலாம் வா நாதா, நான் கன்னியாகுமரி வரை சென்றுவரட்டுமா? ஏன் கண்ணே? செவ்வாழை பழம் வாங்க போகின்றாயா? உன்னை விடவா அது சிகப்பானது? இல்லை நாதா, அங்குதான் ஒருத்தி காதலனுக்கு பழச்சாற்றில் விஷம் வைத்து கொன்றாளாம், கொஞ்சம் அவளிடம் ஆலோசனை கேட்காலம் என்றுதான்.. அப்படியா, சரி வா நாம் அகநானூறு படிக்கலாம், […]

அப்சல்கான் Vs சிவாஜி

அப்சல்கான் சுமார் 300 கிலோ எடை கொண்டவன், 7அடி நெருங்கும் உயரம் கொண்டவன், பீரங்கியினை இழுக்கும் காளைகளே முடியாத இடங்களில் தனி ஒருவனாக பீரங்கியினை தூக்கும் வலிமை கொண்டவன், தன் தோளில் இருவரை சுமந்துதான் உடல்பயிற்சி செய்வான், சிறந்த மல்யுத்த வீரன், அவன் ஒருவனை வளைத்து பிடித்தால் அவனிடமிருந்து தப்ப முடியாது வஞ்சம் பேசி ஏமாற்றி கொல்வதில் வல்லவன், தெற்கே பல நாயக்க சிற்றரசர்களை சமாதானம் பேச வரவைத்து கொன்றவன், எதிரி பலமானவனாய் இருந்தால் அவனின் கூட்டாளிகளை […]

பழமொழி நானூறு : 33

“அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்திருவுடையராயின் திரிந்தும் வருமால்பெரு வரை நாட பிரிவின் றதனால்திருவினும் திட்பமே நன்று” அரிய விலை மதிப்புடைய சிறந்த அணிகலன்களும், நிறைந்த செல்வமும் ஒருவனின் ஊழ்வினையினை பொறுத்து தகுதி இல்லாமல் வந்து சேரும், அதாவது பொல்லாதவனுக்கும் அறிவில்லாதவனுக்கும் கூட ஊழ்வினை காரணமாக பரம்பரை சொத்தோ இல்லை குறுக்குவழியிலோ பணமும் பொருளும் வந்து சேரும் அப்படிபட்டவனை உலகம் ஒரு பொருட்டாக கருதாது அவனை சிறந்தவன் என ஒப்பாது, எவன் எக்காலமும் அறிவான வழியில் நிலையாக நிற்பானோ […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 200 – குருவழி / குறள் : 04

“தலைப்பட்ட சற்குருவின் சந்நிதியி லல்லால்வலைப்பட்ட மானதுவே யாம்.” இக்குறள் “தலைபட்ட சத்குருவின் சந்நிதி இல்லாமல் வலைபட்டமானது அதுவேயாம்” என இக்குறள் பிரிந்து பொருள் தரும் அதாவது அறிவில் சிறந்த , முதிர்ச்சி அடைந்த சற்குருவின் சன்னதிக்கு செல்லாமல் அறியாமை வலையில் (கண்ணியில்) சிக்கிய மனதை விடுவிக்க முடியாது என்பது பொருள் நல்ல குருவே ஒருவனுக்கு முதல் அவசியம், நல்ல குரு அமைந்துவிடுவதை போல வரம் வேறொன்றுமில்லை குரு ஒருவனுக்கு ஞான வெளிச்சம் கொடுப்பார், குரு ஒருவனை அடுத்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications