பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சந்திர சேகர வெங்கட் ராமன்

திருச்சி திருவானைக்காவலில் பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் பிறந்தார். காவேரிகரை கொடுத்த அபூர்வ மனிதரில் அவரும் ஒருவர் சந்திர சேகர வெங்கட் ராமன் இயற்பியலில் அவர் மேதை. சென்னை, விசாகபட்டினம் என படித்தவர்தான் ஆனால் விஞ்ஞானம் அவருக்கு இயல்பாய் வந்தது பெரும் ஆராய்ச்சி முடிவுகளை அவர் வெளியிட்டபொழுது உலகம் மிக ஆரவாரமாய் அவரை கொண்டாடியது, இதோ நோபல் பரிசு என கொடுத்து கவுரவித்தது ஆம், வானமும் கடலும் ஏன் நீல நிறத்தில் தோன்றுகின்றது என சொன்ன முதல் விஞ்ஞானி […]

“சோறு கண்ட இடம் சொர்க்கம்” என்றால் சோற்றினை சிவலிங்கத்துக்கு படைப்பதை காண்பது, அதை கண்டால் சொர்க்கம் கிடைக்கும் என ஒரு விளக்கம் வருகின்றதே, அது சரியானதா? என ஒரு சிலர் கேட்பதால் நாம் நம்மால் இயன்ற அளவு அதை சொல்ல விளகின்றோம் இதில் ஏதேனும் தவறு இருப்பின் இது அடியேனின் தவறல்ல, சில ஞானியரின் குறிப்புகளில் இருந்துதான் தருகின்றோம் சோறு என்றால் அது ஒரு பொருள் அல்ல, சோறு என்பது ஒரு நிலை அதாவது பக்குவட்ட நிலை. […]

பழமொழி நானூறு : 29

“ஆணம் உடைய அறிவினார் தம்நலம்மானும் அறிவினவரைத் தலைப்படுத்தல்மானமர்க் கண்ணாய் மறம்கெழு மாமன்னர்யானையால் யானையாத் தற்று” ஆணம் என்றால் அன்பு, நேசம் என பொருளில் வரும் மான் விரும்பும் கண்களை உண்டைவளே, நல்ல அன்புடைய அறிவார்ந்த மக்கள் தங்களை போன்ற அறிவுடையவர்களையே நண்பராக்கி கொள்ளமுயல்வது எப்படி என்றால் அரசர்கள் யானைகளை கொண்டே யானைகளை கட்டுபடுத்தி இழுத்துவந்து தங்களுக்கு தோதாக பழக்கி வைப்பதை போல் அறிவால் அறிவார்ந்தவர்களை வசபடுத்தி தன்னோடு வைப்பார்கள் என்பது பாடலின் பொருள் காட்டிலோ இல்லை பகைவரின் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 10

“நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகிஉற்றெங்கும் நிற்குஞ் சிவம்” அசைவன அசையாதன என உலகில் இருக்கும் எல்லாமுமே சிவம், அதன் உற்ற இயக்கமாய் நிற்பதும் சிவம் என்பது குறளின் பொருளாகும் இங்கு அசைய கூடிய ஆடுமாடுகள், பறப்பன,ஊர்வன தொடங்கி கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா வரை , காற்றுவரை எல்லாமும் சிவம் அப்படியே அசையாத மலையும் கல்லும் நிலமும் சிவம், மரமும் கொடியும் சிவம் என்கின்றார் ஓளவையார் (நிற்பது நடப்பது என்பதுதான் அசையாதது, அசைவது என்ற பொருளில் சைவம் அசைவம் […]

பழமொழி நானூறு : 28

“நற்கு அறிவு இல்லாரை நாட்டவும் மாட்டாதேசொல் குறிகொண்டு துடி பண்ணுறுத்ததுபோல்வெற்பு அறைமேல் தாழும் விலங்கு அருவி நல் நாடகற்றறிவு போகா கடை” அதாவது ஒரு கவிதை வரிக்கு இயல்பாய் இசை அமைப்பவன் பண் இசைப்பதை போல ஒருவனின் இயல்பான அறிவே அவன் கற்ற கல்விக்கு ஏற்ப வெளிபடும், இயல்பான அறிவின்றி என்ன கற்றாலும் அதனால் பலனேதுமில்லை நல்ல அருவி வீழும் பாறை கொண்ட நாடனே என்கின்றார் புலவர் இங்கு குறிப்பால் பாறைமேல் அருவி என அவர் சொல்வதிலும் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 09

“தோற்றமது வீடாகித் தொல்லைமுத லொன்றாகிஏத்தவரு மீச னுளன்” இக்குறள் “தோற்றம் அது வீடாகி தொல்லை முதல் என்றாகி ஏத்தவரும் ஈசன் உளன்” என பிரிந்து பொருள் தரும் அதாவது சிவனே மோட்ச வீடாகவும் விளங்குகின்றார், இந்த உலகத்தின் உயிர்களாகவும் அதன் கர்மாவாகவும் கர்ம இயக்கமாகவும் விளங்குகின்றான், எல்லா உயிர்க்கு மட்டுமல்ல அவற்றின் இயக்கம் சிந்தனை என எல்லாவற்றுக்குள்ளும் இருப்பது சிவனே என்கின்றார் ஒளவையார் இக்குறள் ஒரு தேர்ந்த ஞானத்தை சொல்கின்றது, அதாவது இந்த உலகில் நடக்கும் நல்லது […]

அபிராமி அந்தாதி 58

அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்தருணாம்புயமுலைத் தையல் நல்லாள் தகை சேர் நயனக்கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும்சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே இங்கு அம்புயம் என்றால் தாமரை எனும் பொருளை தெரிந்துகொண்டு மேற்கொண்டு காணலாம் இந்து ஞானமரபில் தாமரை முக்கியமானது, அது ஞானமலராக ஞானம் மலர்வதன் குறியீடாகவே கருதபட்டது, இந்துமதத்தின் எல்லா பிரதான தெய்வங்களையும் அம்மதம் தாமரை மலர்மேல்தான் நிறுத்திற்று, பிரம்மன் முதல் தேவி வரை அது தாமரையில் வைத்து மகிழ்ந்தது தாமரை என்பது ஞானத்தின் வெளிப்பாடாகவே இந்துமரபில் […]

கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜெகநாதன்

தமிழக எழுத்துலகில் மாபெரும் அடையாளங்கள் பல இருந்தார்கள், அவர்களின் தமிழும் சுவையும் அது சொல்லபட்ட அழகும் அவ்வளவு சிலாகிப்பானது அவர்களை போல எழுதவும் சொல்லவும் இன்னொருவர் வரமுடியாது எனும் அளவு மேதைகள் அவர்கள், இன்று நினைத்தாலும் மனம் சிலிரிக்கும் எழுத்து அவர்களுடையது புதர்மண்டி கிடக்கும் கானகத்திலே மறைந்திருக்கும் கல்வெட்டாக அவர்களை தேடித்தான் படிக்க வேண்டியிருக்கின்றது, புதைந்து கிடக்கும் பூம்புகார் இந்து நாகரீகம் போல அவர்கள் புதைக்கபட்டிருக்கின்றார்கள் அப்படியும் சில உன்னதமான எழுத்தாளர்கள் இருந்தார்கள் என தேடி தேடி […]

64ம் நாயனார்

தமிழகம் இந்து பக்தியினையும் ஆன்மீகத்தையும் உயிராக கொண்ட மண், அந்த பக்திதான் இந்த தமிழகத்தை வாழவைத்தது உயர்த்தியது மாபெரும் அடையாளங்களை கொடுத்தது தமிழனின் இந்துத்வ அபிமானத்தையும் அவன் வாழ்ந்த வாழ்வினையும் இலக்கியங்களுக்கு அடுத்து சொல்லி கொண்டிருப்பவை ஆலயங்கள் அந்த இலகியங்களின் அழகும் ஆழமும் உருக்கமும் ஒரு பக்கமும் இன்று நினைத்தே பார்க்கமுடியாத பிரமாண்டமும் கலைநயமும் ஏகபட்ட சொத்துக்களும் பெரும் செலவு கொண்டாட்டமுமாக இன்னொரு பக்கம் நிற்பவை ஆலயங்கள் இந்த இரண்டும் தமிழன் எப்படி உன்னத இந்துவாக வாழ்ந்தான், […]

பழமொழி நானூறு : 26

“அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்பிறிதினால் மாண்டது எவனாம் – பொறியின்மணி பொன்னும், சாந்தமும், மாலையும், மற்று இன்னஅணி எல்லாம், ஆடையின் பின்” அறிவும் ஞானமும் உடையவர் எனும் பெருமையினை பெறாத ஒருவர் எவ்வளவு செல்வங்களை பெற்றாலும் அது அவருக்கு என்ன நன்மை தரும்?, தராது கருவிகளால் தீட்டபட்ட வைரம் போன்ற மணிகளும், நகைகளும், சந்தணமும், மாலையும் ஒருவன் அணிந்தாலும் அது ஆடை உடுத்தியது போன்ற பயனை தராது அறிவு செல்வமே உண்மையான செல்வம் அது அல்லாத […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications