பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜெகநாதன்

தமிழக எழுத்துலகில் மாபெரும் அடையாளங்கள் பல இருந்தார்கள், அவர்களின் தமிழும் சுவையும் அது சொல்லபட்ட அழகும் அவ்வளவு சிலாகிப்பானது அவர்களை போல எழுதவும் சொல்லவும் இன்னொருவர் வரமுடியாது எனும் அளவு மேதைகள் அவர்கள், இன்று நினைத்தாலும் மனம் சிலிரிக்கும் எழுத்து அவர்களுடையது புதர்மண்டி கிடக்கும் கானகத்திலே மறைந்திருக்கும் கல்வெட்டாக அவர்களை தேடித்தான் படிக்க வேண்டியிருக்கின்றது, புதைந்து கிடக்கும் பூம்புகார் இந்து நாகரீகம் போல அவர்கள் புதைக்கபட்டிருக்கின்றார்கள் அப்படியும் சில உன்னதமான எழுத்தாளர்கள் இருந்தார்கள் என தேடி தேடி […]

64ம் நாயனார்

தமிழகம் இந்து பக்தியினையும் ஆன்மீகத்தையும் உயிராக கொண்ட மண், அந்த பக்திதான் இந்த தமிழகத்தை வாழவைத்தது உயர்த்தியது மாபெரும் அடையாளங்களை கொடுத்தது தமிழனின் இந்துத்வ அபிமானத்தையும் அவன் வாழ்ந்த வாழ்வினையும் இலக்கியங்களுக்கு அடுத்து சொல்லி கொண்டிருப்பவை ஆலயங்கள் அந்த இலகியங்களின் அழகும் ஆழமும் உருக்கமும் ஒரு பக்கமும் இன்று நினைத்தே பார்க்கமுடியாத பிரமாண்டமும் கலைநயமும் ஏகபட்ட சொத்துக்களும் பெரும் செலவு கொண்டாட்டமுமாக இன்னொரு பக்கம் நிற்பவை ஆலயங்கள் இந்த இரண்டும் தமிழன் எப்படி உன்னத இந்துவாக வாழ்ந்தான், […]

பழமொழி நானூறு : 26

“அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்பிறிதினால் மாண்டது எவனாம் – பொறியின்மணி பொன்னும், சாந்தமும், மாலையும், மற்று இன்னஅணி எல்லாம், ஆடையின் பின்” அறிவும் ஞானமும் உடையவர் எனும் பெருமையினை பெறாத ஒருவர் எவ்வளவு செல்வங்களை பெற்றாலும் அது அவருக்கு என்ன நன்மை தரும்?, தராது கருவிகளால் தீட்டபட்ட வைரம் போன்ற மணிகளும், நகைகளும், சந்தணமும், மாலையும் ஒருவன் அணிந்தாலும் அது ஆடை உடுத்தியது போன்ற பயனை தராது அறிவு செல்வமே உண்மையான செல்வம் அது அல்லாத […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 07

“மூலமொன் றாகி முடிவொன்றா யெவ்வுயிர்க்கும்காலமாய் நிற்குஞ் சிவம்” எல்லா உயிருக்கும் சிவமே மூலம் அந்த சிவமே முடிவு , எல்லா உயிருக்கும் ஆயுள் கொடுப்பதும் ஆயுள் வரை காவலாய் இருப்பதும் சிவமேயாகும் என்பது குறளின் பொருள் எல்லா உயிர்களும் சிவனில் இருந்தே தோன்றுகின்றன, சிவன் அருளிய காலம் வரை அவர் அருளில் வாழ்கின்றன, பின் அந்த பரமாத்மாவிலே கலக்கின்றன என்கின்றார் ஒளவையார்

பழமொழி நானூறு : 24

“நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப்புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல் – புல்லார்புடைத்தறுகண் அஞ்சுவான் இல்லுள் வில்லேற்றிஇடைக்கலத்து எய்து விடல்” ஒருவன் பெரும் அறிஞர்கள் இருக்கும் அவையில் தன் நாவை சுருட்டி மவுனம் காத்துவிட்டு எதுவுமே பேசாமல் திரும்பிவிட்டு, புல்லறிவினர் இருக்கும் இடத்தில் கல்லாதவர் இருக்கும் இடத்தில் தன்னை பற்றி பெருமையாக சொல்லுதல் என்பது வீட்டை சுற்றி பெரும் வீரர்கள் வளைத்து நிற்கும் நேரம் வீட்டினுள் இருந்து தன் வீட்டு சட்டிபானைகள் மேல் அம்பு எய்து வீரத்தை காட்டுவது போன்ற […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 06

“ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும்ஒன்றாகி நிற்குஞ் சிவம்” இக்குறள் “ஒன்றே தான் ஊழி முதலாகி பல்லுயிருக்கும் ஒன்றாகி நிற்கும் சிவம்” என பொருள் தரும் ஊழிக்காலம் முடிந்து உயிர்கள் தோன்றுவது சிவம் எனும் மூலத்தில் இருந்தே, அதனால் எல்லா உயிர்களிலும் இருப்பது அந்த ஒரே சிவனே என்பது பாடலின் பொருள் ஊழிகாலத்தை பற்றி சொல்வது என்பது முடிவினை குறிப்பது, அதாவது சிவமே எல்லா யுகங்களின் தொடக்கமாகவும் இருக்கின்றார் முடிவுமாகவும் இருக்கின்றார், எல்லா உயிர்களும் அவரில் இருந்தே தொடங்குகின்றது […]

பழமொழி நானூறு : 23

“அல்லவையுள் தோன்றி அலவலைத்து வாழ்பவர்நல் அவையுள் புக்கு இருந்து நா அடங்க – கல்விஅளவு இறந்து மிக்கார் அறிவு எள்ளிக் கூறல்மிளகு உளு உண்பான் புகல்” அல்லன செய்யும் மூடர்கள், கல்லாதவர்கள், புல்லறிவாளர்கள் கூட்டத்தில் இருக்கும் ஒருவன் கற்றவர் நிரம்பிய அவையில் நுழைந்து, தனக்கு எல்லாம் தெரியும் என பெரும் அறிவு மிக்கோரை ஏளனமாக பேசி அவர்கள் வருந்தி மவுனமாவது என்பது அந்த மூடன் உளுந்து என நினைந்து மிளகு புழுவினை உண்ணுதல் போன்றது என்கின்றார் புலவர் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 05

“எண்ணிறந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும்உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்” இக்குறள் “எண்ணிறைந்த யோனி பலவாய் பரந்தெங்கும் உள் நிறைந்து நிற்கும் சிவம்” என பொருள் தடும் இந்த உலகில் இருக்கும் எல்லா உயிர்களிலும் அது இன்னும் பரவ வழிசெய்யும் அல்லது உயிர் ஜெனிக்கும் இடமான யோனிகளின் தன்மையாக இருப்பது சிவமே என்பது பொருள் இத உலகில் உள்ள எல்லா உயிர்களும் தன்னை பெருக்கும் சக்தி கொண்டவை, அந்த சக்தியாக நிற்பவன் சிவன் , உலகில் உயிர்கள் நிலைபெற்ற் நிற்க […]

சர்தார் வல்லபாய் பட்டேல்

காலம் சில நல்லவர்களை அதர்ம கூட்டத்தில் வைத்திருக்கும், அவர்கள் அந்த கூட்டத்தில்தான் இருப்பார்கள், அவர்கள் செய்யும் பல கொடுமைகளை, அதர்மங்களை கண்டுகொண்டேதான் இருப்பார்கள், நல்லவர்கள் இவர்களால் பாதிக்கபடும்பொழுது பல்லைகடித்து கொண்டு அமைதியாய் இருப்பார்கள் காரணம் எப்பொழுது பாயவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும், எப்பொழுது நிலமை எல்லைமீறி செல்லுமோ அப்பொழுதுதான் நாம் பேசவேண்டும், அதுவரை அமைதிகாக்க வேண்டும், அவசரபட்டு தர்மத்தை பேசுகின்றோம் செய்கின்றோம் என மொத்தத்தையும் கெடுத்துவிட கூடாது என்பது அவர்களுக்கு தெரியும் பாரதத்தில் விதுரர் போன்றவர்கள் உண்டு, […]

பழமொழி நானூறு : 22

“மானமும் நாணும் அறியார் மதி மயங்கிஞானம் அறிவார் இடைப்புக்கு தாம் இருந்துஞானம் வினாஅய் உரைக்கின் நகை ஆகும்யானைப் பல் காண்பான் புகல்” கொஞ்சமும் கல்வியும் அறிவும் இல்லாத ஒருவன், தன்னுடைய மானம் நாணம் இவை எல்லாம் பற்றி கவலை இல்லாதவன், அப்படி ஒன்று இருப்பதாக அறியாதவன் தானும் புகழ்பெற வேண்டும் என்ற மயக்கத்தில் கற்றவரும் ஞானியரும் இருக்கும் அவையில் புகுந்து வாதிடுவது என்பது நகைப்புக்குரியது அது எப்படியானது என்றால், பட்ட பகலில் மாட்டின் பல்லை பார்த்து வயதை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications