பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 07

“மூலமொன் றாகி முடிவொன்றா யெவ்வுயிர்க்கும்காலமாய் நிற்குஞ் சிவம்” எல்லா உயிருக்கும் சிவமே மூலம் அந்த சிவமே முடிவு , எல்லா உயிருக்கும் ஆயுள் கொடுப்பதும் ஆயுள் வரை காவலாய் இருப்பதும் சிவமேயாகும் என்பது குறளின் பொருள் எல்லா உயிர்களும் சிவனில் இருந்தே தோன்றுகின்றன, சிவன் அருளிய காலம் வரை அவர் அருளில் வாழ்கின்றன, பின் அந்த பரமாத்மாவிலே கலக்கின்றன என்கின்றார் ஒளவையார்

பழமொழி நானூறு : 24

“நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப்புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல் – புல்லார்புடைத்தறுகண் அஞ்சுவான் இல்லுள் வில்லேற்றிஇடைக்கலத்து எய்து விடல்” ஒருவன் பெரும் அறிஞர்கள் இருக்கும் அவையில் தன் நாவை சுருட்டி மவுனம் காத்துவிட்டு எதுவுமே பேசாமல் திரும்பிவிட்டு, புல்லறிவினர் இருக்கும் இடத்தில் கல்லாதவர் இருக்கும் இடத்தில் தன்னை பற்றி பெருமையாக சொல்லுதல் என்பது வீட்டை சுற்றி பெரும் வீரர்கள் வளைத்து நிற்கும் நேரம் வீட்டினுள் இருந்து தன் வீட்டு சட்டிபானைகள் மேல் அம்பு எய்து வீரத்தை காட்டுவது போன்ற […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 06

“ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும்ஒன்றாகி நிற்குஞ் சிவம்” இக்குறள் “ஒன்றே தான் ஊழி முதலாகி பல்லுயிருக்கும் ஒன்றாகி நிற்கும் சிவம்” என பொருள் தரும் ஊழிக்காலம் முடிந்து உயிர்கள் தோன்றுவது சிவம் எனும் மூலத்தில் இருந்தே, அதனால் எல்லா உயிர்களிலும் இருப்பது அந்த ஒரே சிவனே என்பது பாடலின் பொருள் ஊழிகாலத்தை பற்றி சொல்வது என்பது முடிவினை குறிப்பது, அதாவது சிவமே எல்லா யுகங்களின் தொடக்கமாகவும் இருக்கின்றார் முடிவுமாகவும் இருக்கின்றார், எல்லா உயிர்களும் அவரில் இருந்தே தொடங்குகின்றது […]

பழமொழி நானூறு : 23

“அல்லவையுள் தோன்றி அலவலைத்து வாழ்பவர்நல் அவையுள் புக்கு இருந்து நா அடங்க – கல்விஅளவு இறந்து மிக்கார் அறிவு எள்ளிக் கூறல்மிளகு உளு உண்பான் புகல்” அல்லன செய்யும் மூடர்கள், கல்லாதவர்கள், புல்லறிவாளர்கள் கூட்டத்தில் இருக்கும் ஒருவன் கற்றவர் நிரம்பிய அவையில் நுழைந்து, தனக்கு எல்லாம் தெரியும் என பெரும் அறிவு மிக்கோரை ஏளனமாக பேசி அவர்கள் வருந்தி மவுனமாவது என்பது அந்த மூடன் உளுந்து என நினைந்து மிளகு புழுவினை உண்ணுதல் போன்றது என்கின்றார் புலவர் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 05

“எண்ணிறந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும்உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்” இக்குறள் “எண்ணிறைந்த யோனி பலவாய் பரந்தெங்கும் உள் நிறைந்து நிற்கும் சிவம்” என பொருள் தடும் இந்த உலகில் இருக்கும் எல்லா உயிர்களிலும் அது இன்னும் பரவ வழிசெய்யும் அல்லது உயிர் ஜெனிக்கும் இடமான யோனிகளின் தன்மையாக இருப்பது சிவமே என்பது பொருள் இத உலகில் உள்ள எல்லா உயிர்களும் தன்னை பெருக்கும் சக்தி கொண்டவை, அந்த சக்தியாக நிற்பவன் சிவன் , உலகில் உயிர்கள் நிலைபெற்ற் நிற்க […]

சர்தார் வல்லபாய் பட்டேல்

காலம் சில நல்லவர்களை அதர்ம கூட்டத்தில் வைத்திருக்கும், அவர்கள் அந்த கூட்டத்தில்தான் இருப்பார்கள், அவர்கள் செய்யும் பல கொடுமைகளை, அதர்மங்களை கண்டுகொண்டேதான் இருப்பார்கள், நல்லவர்கள் இவர்களால் பாதிக்கபடும்பொழுது பல்லைகடித்து கொண்டு அமைதியாய் இருப்பார்கள் காரணம் எப்பொழுது பாயவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும், எப்பொழுது நிலமை எல்லைமீறி செல்லுமோ அப்பொழுதுதான் நாம் பேசவேண்டும், அதுவரை அமைதிகாக்க வேண்டும், அவசரபட்டு தர்மத்தை பேசுகின்றோம் செய்கின்றோம் என மொத்தத்தையும் கெடுத்துவிட கூடாது என்பது அவர்களுக்கு தெரியும் பாரதத்தில் விதுரர் போன்றவர்கள் உண்டு, […]

பழமொழி நானூறு : 22

“மானமும் நாணும் அறியார் மதி மயங்கிஞானம் அறிவார் இடைப்புக்கு தாம் இருந்துஞானம் வினாஅய் உரைக்கின் நகை ஆகும்யானைப் பல் காண்பான் புகல்” கொஞ்சமும் கல்வியும் அறிவும் இல்லாத ஒருவன், தன்னுடைய மானம் நாணம் இவை எல்லாம் பற்றி கவலை இல்லாதவன், அப்படி ஒன்று இருப்பதாக அறியாதவன் தானும் புகழ்பெற வேண்டும் என்ற மயக்கத்தில் கற்றவரும் ஞானியரும் இருக்கும் அவையில் புகுந்து வாதிடுவது என்பது நகைப்புக்குரியது அது எப்படியானது என்றால், பட்ட பகலில் மாட்டின் பல்லை பார்த்து வயதை […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 04

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 04 “வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய்ஆயுமிடந் தானே சிவம்” இக்குறள் “வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றின் உட்பொருளாய் ஆயுமிடம் தானே சிவம்” என பிரிந்து பொருள் தரும் அதாவது காற்றாய் உயிராய் மற்றவற்றின் எல்லா உட்பொருளாய் இருப்பது சிவமே, ஆழ ஆராய்ந்தால் இதை உணரலாம் என்கின்றார் ஒளவையார் இங்கு காணும் எல்லாவற்றுக்கும் ஒரு ஆயுளும் இயக்கமும் உண்டு, கல் மண் என […]

தென்னாட்டு சிங்கம் இரண்டாம் நேதாஜி..

காலம் சில சத்தியவான்களை, பரிசுத்தமான தேசாபிமானிகளை, அப்பழுக்கற்ற தேசமகான்களை, சனாதான சீலர்களை அவர்கள் வாழும் காலம் ஒதுக்கிவைக்கும் ஆனால் பின்னாளில் அவர்கள்தான் வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட பெரும் மோசடிக்கும், அன்று அதர்மக்காரர்கள் செய்த எல்லா சூதுக்களுக்கும், வஞ்சக திட்டங்களுக்கும் சாட்சிகளாய் நிற்பார்கள் அவர்களை படிக்கபடிக்கத்தான் இத்தேசத்தில் எப்படிபட்ட வஞ்சகங்கள் நிகழ்ந்தன என்பதும், தேசம் அந்நியராலும் அவர்கள் அடிவருடிகளாலும் எப்படியெல்லாம் மோசடிக்குள்ளாக்கபட்டது என்பதும், சனாதான தர்மத்தையும் இந்த அருமையான பாரதத்தையும் ஒழிக்க நிகழ்ந்த சதிகள் பற்றியும் தெரிந்து கொள்ளமுடியும் சாவர்க்கர், […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 03

“ஆகமுஞ் சீவனு மாசையுந் தானாகிஏகமாய் நிற்குஞ் சிவம்” இக்குறள் “ஆகமும் சீவனும் ஆசையும் தானாகி ஏகமாய் நிற்கும் சிவம்” என பிரிந்து வரும் ஆகம் என்றால் உடல், சீவன் என்றால் உடலை இயக்கும் உயிராகிய ஜீவன், ஆசை என்பது ஒவ்வொருவரின் கர்மா அல்லது வாழ்க்கையினை செலுத்தும் ஆசை ஆக இந்த உடலாகவும் அதிலிருக்கும் உயிராகவும், உடலுக்கும் உயிருக்குமான தொடர்பான அந்த ஆசையாகவும் விளங்குவது சிவம் என்கின்றார் ஒளவையார் இது அப்படியே கீதையின் சாயலை ஒத்திருப்பதை காணலாம், எல்லாமுமாய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications