பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 04

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 04 “வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய்ஆயுமிடந் தானே சிவம்” இக்குறள் “வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றின் உட்பொருளாய் ஆயுமிடம் தானே சிவம்” என பிரிந்து பொருள் தரும் அதாவது காற்றாய் உயிராய் மற்றவற்றின் எல்லா உட்பொருளாய் இருப்பது சிவமே, ஆழ ஆராய்ந்தால் இதை உணரலாம் என்கின்றார் ஒளவையார் இங்கு காணும் எல்லாவற்றுக்கும் ஒரு ஆயுளும் இயக்கமும் உண்டு, கல் மண் என […]

தென்னாட்டு சிங்கம் இரண்டாம் நேதாஜி..

காலம் சில சத்தியவான்களை, பரிசுத்தமான தேசாபிமானிகளை, அப்பழுக்கற்ற தேசமகான்களை, சனாதான சீலர்களை அவர்கள் வாழும் காலம் ஒதுக்கிவைக்கும் ஆனால் பின்னாளில் அவர்கள்தான் வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட பெரும் மோசடிக்கும், அன்று அதர்மக்காரர்கள் செய்த எல்லா சூதுக்களுக்கும், வஞ்சக திட்டங்களுக்கும் சாட்சிகளாய் நிற்பார்கள் அவர்களை படிக்கபடிக்கத்தான் இத்தேசத்தில் எப்படிபட்ட வஞ்சகங்கள் நிகழ்ந்தன என்பதும், தேசம் அந்நியராலும் அவர்கள் அடிவருடிகளாலும் எப்படியெல்லாம் மோசடிக்குள்ளாக்கபட்டது என்பதும், சனாதான தர்மத்தையும் இந்த அருமையான பாரதத்தையும் ஒழிக்க நிகழ்ந்த சதிகள் பற்றியும் தெரிந்து கொள்ளமுடியும் சாவர்க்கர், […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 03

“ஆகமுஞ் சீவனு மாசையுந் தானாகிஏகமாய் நிற்குஞ் சிவம்” இக்குறள் “ஆகமும் சீவனும் ஆசையும் தானாகி ஏகமாய் நிற்கும் சிவம்” என பிரிந்து வரும் ஆகம் என்றால் உடல், சீவன் என்றால் உடலை இயக்கும் உயிராகிய ஜீவன், ஆசை என்பது ஒவ்வொருவரின் கர்மா அல்லது வாழ்க்கையினை செலுத்தும் ஆசை ஆக இந்த உடலாகவும் அதிலிருக்கும் உயிராகவும், உடலுக்கும் உயிருக்குமான தொடர்பான அந்த ஆசையாகவும் விளங்குவது சிவம் என்கின்றார் ஒளவையார் இது அப்படியே கீதையின் சாயலை ஒத்திருப்பதை காணலாம், எல்லாமுமாய […]

அபிராமி அந்தாதி : 57

அபிராமி அந்தாதி : 57 “ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டம் எல்லாம்உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால்செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே” இந்த பாடல் பெரும் விஷயங்களை சொல்லும் பாடல் என்பதால் ஒவ்வொரு விஷயமாக பார்க்கலாம் “ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம் உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி” என தொடங்குகின்றார் பட்டர் இந்த “இருநாழி கொண்டு” […]

கந்தபுராணம் : 04

சூரபதுமனே தோற்று திரும்பிய நிலையில் அசுரனின் அரண்மனை ஆடிகிடந்தது, மறுநாள் போருக்கு செல்ல துணிந்தான் பானுகோபன் பானுகோபன் ராவணன் மகன் இந்திரஜித்தனின் சாயல், நீர் ஆகாயம் என சகல வித்தைகளும் அறிந்தவன், யாராலும் வெல்லமுடியாதவன் சூரியனையே வென்று தூக்கிவந்து தன் அரண்மனையில் தொங்கவிட்ட வீரன் அவன் ஆனாலும் தன் கண்முன்னே தன் சகோதரர்களை வெட்டிபோட்ட வீரபாகுவினை நினைத்து அவன் மனம் குமுறிற்று அதே நேரம் தன்னையே நிராதாயுதபாணியாக்கி மன்னிப்பு கொடுத்த முருகனை எண்ணி அவன் மனம் அஞ்சிற்று […]

கடவுளுக்கு அர்பணிக்கபட்டவள் என பொருள்படும் “நிவேதிதை”

இந்துமதம் உண்மையான ஞானதேடலும் பிரபஞ்ச தத்துவமும் ஆன்ம ரகசியங்களை அறிந்துகொள்ள துடிப்போர் எங்கிருந்தாலும் ஏற்றுகொள்ளும், மதங்களின் தாயான அந்த தாய் மானிட லவுகீக தேவைகளை விட ஞானமே பெரிதென தேடிவருக்கெல்லாம் தன் மடியில் இடம் கொடுத்து ஞானம் ஊட்டும் அப்படி பல சாட்சிகளை உலகம் கண்டிந்தாலும் ஒப்பற்ற பெரும் சாட்சி சகோதரி நிவேதிதா அவள் இயற்பெயர் மார்கரட் எலிசபெத் நோபல், 1867ல் பிரிட்டனின் அயர்லாந்தில் பிறந்தார், அக்காலத்தில் இந்தியா பிரிட்டனின் அரச கட்டுபாட்டில் இருந்தது, இந்தியர் பற்றியும் […]

மருது சகோதரரர்கள்

சுதந்திர போராட்டத்தை இந்தியாவில் தொடங்கிய வீரர்களில் முக்கியமானோர் மருது சகோதரரர்கள் அவர்களின் வீரமும் தியாகமும் பெரிது. தமிழகத்தில் மிகபெரிய போர்குரலாக அவர்கள்தான் விளங்கினார்கள், ஆங்கிலேயன் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியவர்களில் முக்கியமானவர்கள் அவர்கள் அவர்கள்தான் இங்கு தேசமும் தெய்வீகமும் இரு கண்கள் என முதலில் சொன்னவர்கள், தேசத்துக்காக பெரியமருதுவும் கோவிலுக்காக சின்னமருதுவும் உயிரையே கொடுத்தார்கள், அந்த வீர அடையாளம் அவர்கள் சாதரண குடும்பத்து சகோதரர்கள், ஆனால் தங்கள் வீரத்தாலும் விசுவாசத்தாலும் சிவகங்கை அரசின் தளபதிகளாயினர், முத்துவடுகநாதரின் நம்பிக்கைகுரியவர்களாயினர். இருவருமே […]

ஹர்தீப்சிங் பூரி

நேற்று சென்னை மெட்ரோ ரயில் அலுவகம் திறப்புக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, முக ஸ்டாலினுடன் சேர்ந்து அதை திறந்து வைத்தார் பூரிக்கும் ஸ்டாலினுக்குமான தொடர்பு ஒரு வகையில் புன்னகைக்க வைப்பது, நடந்த வரலாறு அப்படி, அதனால் உருவாகிவிட்ட கோரங்கள் அப்படி, அதையெல்லாம் தாண்டி எதிரும் புதிருமானவர்கள் இனைந்து நின்றதெல்லாம் புன்னகைக்க வேண்டிய இடங்கள் அந்த பூரி ஒரு சீக்கியர், இன்றைய ஜெய்சங்கரை போல அன்று உலக அரசியலில் தேர்ந்தவராக இருந்தார் இதனால் இந்திய அயலக […]

பழமொழி நானூறு : 20

“கல்லாதும் கேளாதும் கற்றார் அவை நடுவண்சொல்லாடு வாரையும் அஞ்சற்பாற்று-எல் அருவிபாய் வரை நாட! பரிசு அழிந்தாரோடுதேவரும் ஆற்றல் இலர்” அதாவது கற்றார் அவை நடுவிலிருக்கும் கற்றவர்கள், கல்லாத‌ புல்லறிவாற் பேசும் கயவ ரிடத்தே எதுவும் எதிர்மாற்றம் பேசமாட்டார்கள், அவர்கள் நல்லறிவும் நற்பண்பும் அற்றவர்கள் என்பதால் அவர்களை அமைதியாக கடந்து செல்வார்கள் இதனை “பரிசழிந்தாரோடு தேவரும் மாற்றல் இலர்” எனும் பழமொழி சொல்லும், அதாவது தேவர்கள் கூட பழிகொண்ட புல்லறிவுகளோடு தொடர்பு வைத்து கொள்ள் மாட்டார்கள் என்பது இதுவே […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 02

“விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல்உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்” இக்குறள் “விண நிறைந்து நின்று விளங்கும் சுடரொளி போல உள் நிறைந்து நிற்கும் சிவம்” என பிரிந்து பொருள் தரும்அ தாவது ஆகாயம் எங்கும் நிறைந்து நிற்கும் பிரகாசமான வெளிச்சம், சூரிய ஒளிச்சம் போல மனதில் ஞான வெளிச்சமாய் சிவம் பரவி நிற்கும் என்பது பொருள்சிவனை ஒளிவடிவம் என்கின்றார் ஒளவையார், ஆகாயத்தில் சூரியன் வந்தால் ஆகாயமெங்கும் வெளிச்சம் வந்து அது பூமியின் எல்லா இடங்களிலும் வெளிச்சம் கொடுப்பதை போல […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications