நாச்சியார் திருமொழி 2.4
நாச்சியார் திருமொழி 2.4 ஆண்டாள் அன்றும் சிறுமிகள் அருகில் அமர்ந்திருக்கின்றாள், அவர்கள் வீடு (சிற்றில்) கட்டி விளையாடிகொண்டிருக்கின்றார்கள், பங்குனிமாத வெயில் உக்கிரமெடுக்கின்றது வீசும் மெல்லிய காற்றிலும் வெம்மை கூடுகின்றது, ஆண்டாள் வானத்தை ஏறெடுத்து பார்க்கின்றாள், அந்நேரம் என்ன நாழிகை என காண சூரியனை பார்ப்பது அன்றைய வழக்கம் அப்படி வானத்தை அவள் ஏறெடுத்து பார்க்கும்பொழுது ஒரு கறுத்த மேகம் நகர்வதை காண்கின்றாள், அந்த கார்மேகத்தை கண்டவுடன் கண்ணன் நினைவு அவளுக்குள் பெருகுகின்றது, ஊறும் அந்த ஆனந்த லஹரியில் […]