இலங்கையில் பெட்ரோல் விலை என்ன தெரியுமா? என சீறி கொண்டிருந்த கோஷ்டிகளெல்லாம் இப்பொழுது சத்தமே இல்லை இலங்கையில் பெட்ரோல் விலை, பாகிஸ்தானில் பெட்ரோல் விலை என அளந்து கொண்டிருந்தவனெல்லாம் அந்நாடுகள் சரிந்து கிடக்கும் பொழுது பல்லி போல் சுவரோடு ஒட்டி கொள்கின்றான் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் ஆனால் அது கொடுக்கும் வசூல் இந்திய மக்களின் பொருளாதாரத்துக்கும் பாதுகாப்புக்குமேதான் திருப்பிவிட படுகின்றது தமிழக ஜவுளிகடை நகைகடை எல்லாம் சம்பாதிக்கும் காட்சிகளில், திரையரங்கும் மால்களும் நிலம் வீடுகளின் விலைவாசியின் […]
இலங்கையில் தன் மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார் என்றும் இல்லை மறைவாக இருக்கின்றார் என்றும் தகவல்கள் கசிகின்றன அவர் வேறு நாடுகளுக்கு செல்ல வாய்ப்பில்லை காரணம் 2006 போர் குற்றசர்ச்சையில் எளிதாக சிக்குவார், அது போல புலிகளின் பலம் கொண்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர் செல்லமுடியாது சீனா இம்மாதிரி விஷயங்களுக்கு கைகொடுக்காது அது உலக அரசியல் இப்போது ராஜபக்சே திரிகோணமலை அருகே இருக்கும் இந்திய பாதுகாப்பு படைகளின் காவலில் இருக்கலாம் எனும் தியரியும் […]
எம் தேசம் ஒரு காலமும் அசையாத
இலங்கையில் நடப்பது போல இந்தியாவிலும் சீரழிவுகள் நடக்கும் என அரசியல் பேசுபவனெல்லாம் நிச்சயம் நல்ல இந்தியனாக இருக்கமுடியாது இவர்களுக்கு இலங்கை போல இந்தியாவும் ஆக வேண்டும் எனும் பெரும் கேடுகெட்ட பேராசை அன்றி வேறேதும் இருப்பதாக தெரியவில்லை, அரசியல் எனும் பெயரில் மோடி வெறுப்புக்கும் நாட்டுபற்றுக்கும் வித்தியாசமில்லாமல் அரைவேக்காட்டுதனமாக புலம்பிகொண்டிருக்கின்றார்கள் பதர்கள் அரசுகள் வரும் போகும், தலைவர்களும் கட்சிகளும் வருவார்கள் போவார்கள், ஆனால் நாடு நிலையானது அதன் ஸ்திரதன்மையும் வளர்ச்சியும் முக்கியமானது மோடியின் ஆட்சியில் ஆசியாவில் எண்ணெய் […]
ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 04
“ஆதாரத் துள்ளே யறிந்து சிவனுருவைப்பேதமற வர்ச்சிக்கு மாறு” இக்குறள் “ஆதாரத்து உள்ளே அறிந்து சிவனுருவை பேதமற அர்ச்சிக்குமாறு” என பிரிந்து பொருள் தரும் இங்கு ஆதாரம் என்பது ஆறு ஆதாரமான ஆறு சக்கரங்களை காட்டுகின்றது, அந்த ஆறு ஆதாரங்களையும் துலக்கினால் சிவன் உருவை உணரலாம், அதனை வேறு சிந்தனையின்றி (பேதமற) , ஒரே மனமாக அர்ச்சித்து அதாவது பூசை செய்ய வேண்டும் என்கின்றார் ஒளவையார் யோகத்தில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூர கம், அநாகதம், விசுத்தி, ஆஞ்சை எனும் […]
குமர குருபரர் நீதிநெறி : 02
“தொடங்குங்காற் றுன்பமா யின்பம் பயக்கும்மடங்கொன் றறிவகற்றுங் கல்வி – நெடுங்காமம்முற்பயக்குஞ் சின்னீர வின்பத்தின் முற்றிழாய்பிற்பயக்கும் பீழை பெரிது” இப்பாடல் பொருள் கொண்டு பிரித்தால் இப்படி பிரியும் “தொடங்குங் கால் துன்பமாய் இன்பம் பயக்கும்மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி நெடும்காமம்முறபயக்கும் சின்னீர இன்பத்தின் முற்றி இழாய்பிற்பயக்கும் பீழை பெரிது” அதாவது தொடங்கும் பொழுது துன்பமாய் இருக்கும் பின் இன்பம் பயக்கும் அறியாமை (மடம்) கொன்று அறிவை விரிடைய செய்யும் (அறிவை அகற்றும் அதாவது அகலமாக்கும்) கல்வி காமம் […]
1857ம் ஆண்டு
முதல் விடுதலைபோர் அல்லது சிப்பாய் கலகம் என சொல்லபடும் வீரமிக்க சம்பவத்தின் நினைவு நாள் இன்று, 1857ம் ஆண்டு இதே நாளில் தொடங்கிற்று என்ன நடந்தது? ஆங்கில படைகளுக்கு எதிராக வட இந்தியாவின் மீரட்டில் தொடங்கி பல இடங்களில் சண்டை நடந்தது, கிட்டதட்ட இந்தியா வெல்லும் நிலைதான் ஆனால் ஒரே தலைவனோ இல்லை வழிநடத்த சரியான தளபதியோ இல்லாததால் அது தோற்றது எனினும் இச்சம்பவத்திற்கு பின்பே பிரிட்டன் அரசு இந்தியாவினை கிழக்கிந்திய கபெனியிடம் இருந்து பறித்தது, அதன் […]
ஜி7 நாடுகளின் கூட்டம், அதாவது அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட ஏழு வளர்ந்த நாடுகளின் கூட்டம் காணொளியில் நடந்ததுகூட்டத்தில் மிக ஆச்சரியமாக ஜஸ்டின் ட்ருடோ உக்ரைனில் இருந்து கலந்து கொண்டார், கனடிய குடிமக்களில் உக்ரைனிய மக்களும் உண்டு என்பதால் அவருக்கு அரசியல் நெருக்கடி அதிகம் இதனால் நேரடியாகவே சென்றுவிட்டார் இந்த கூட்டத்தில் ஜஸ்டின் ட்ரூடோவுடன் குபீரென உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியும் தோன்றினார், தோன்றியவர் கனடா அதிபர் சொல்ல சொல்ல உலக அமைதி, ரஷ்ய சர்வாதிகாரம் என திரும்ப […]
இலங்கையில் நடைபெற்ற தொடர்
இலங்கையில் நடைபெற்ற தொடர் போராட்டம் பெரும் வன்முறையில் முடிந்துள்ளது, பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் தன் பதவியினை துறந்துள்ளார் அந்த தீவு நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக சில வாரங்களாக நடக்கும் ஆட்சிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது, பதவி விலகமுடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிவித்த்தபின் நிலமை இன்னும் மோசமானது அதிபர் கோத்தபாய ராஜபக்சே அவசரநிலை பிரகடனம் செய்தபின்னும் நிலமை சரியாகவில்லை, நேற்று அதிபர் மாளிகை முன் நடந்த போராட்டம் ஆங்காங்கே போராட்டகாரர்களுக்கும் ஆளும்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையாயன் […]
ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 03
“உள்ளமே பீடமுணர்வே சிவ லிங்கத்தெள்ளிய ரர்ச்சிக்கு மாறு” இக்குறள் “உள்ளமே பீடம் உணர்வே சிவலிங்கம் தெள்ளியரர் அர்ச்சிக்குமாறு” உள்ளத்தை ஆலய பீடமாக கொண்டு, உணர்வில் சிவலிங்கத்தை நிறுத்தி தெளிந்த சிந்தையுடையோர் அர்ச்சிப்பார்கள் என்பது குறளின் பொருள் வழிபாடு என்பது மனமார இருத்தல் வேண்டும் என்பது மறைபொருள் இறைவனை மனதில் நிறுத்தி தியானிக்க வேண்டும், இறைவன் கோவிலில் இருப்பதாகவோ சொர்க்கத்தில் இருப்பதாகவோ இல்லை எங்கோ இருப்பதாகவோ தியானித்து வழிபடுவதை விட மனதில் இறைவன் இருப்பதை உணர்வால் நினைந்து இருத்தி […]
குமர குருபரர் நீதிநெறி : 02
“அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்புறங்கடை நல்லிசையு நாட்டும் – உறுங்கவலொன்றுற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியி னூங்கில்லைசிற்றுயிர்க் குற்ற துணை” இப்பாடல் பின்வருமாறு பிரிந்து பொருள் தரும் “அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும்புறங்கடை நல்லிசையும் நாட்டும்உறு கவலையொன்றும் உற்றுகழியும் கைகொடுக்கும்கல்வியினூங்கு இல்லை சிற்றுயிர்க்கு உற்ற துணை” கல்வி என்பது அறம், பொருள், இன்பம் எனும் பூலோக சிறப்புகளை மட்டுமல்ல வீடு என்னும் முக்தியினையும் தரும் உலகில் இருந்து ஒதுங்கி நின்றாலும் நல்ல புகழைப் பெற்றுத் தரும், வாழ்வில் கவலை […]