ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 06
“விளக்குறு சிந்தையான் மெய்ப்பொருளைக் கண்டு துளக்கற வர்ச்சிக்கு மாறு” இக்குறள் “விளக்குறு சிந்தையான் மெய்பொருளை கண்டு துளக்கற அர்ச்சிக்குமாறு” என பொருள்படும் துளக்கம் என்றால் அசையாமல் ஆடாமல் சஞ்சலபடாமல் இருத்தல் என பொருள், ஒளி என்றும் இதற்கொரு விளக்கம் உண்டு விளக்குறு சிந்தையான் என்றால் ஞானசுடர் அல்லது ஆத்மசுடர் என பொருள் யோகத்தினால் அந்த சுடர் பிராகசிக்கும் நிலையில் பரம்பொருளான சிவனை கண்டு கொஞ்சமும் மனதை ஆடவிடாமல், சஞ்சலமில்லாமல் ஏக சிந்தனையில் நிறுத்தி வழிபட வேண்டும் என்பது […]