பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

Abirami anthathi 36

“பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்துஇருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே” முதல் வரியிலே அன்னையினை “பொருளே” என்கின்றார் பட்டர், பொருள் என்றால் இங்கு செல்வம் என்றாகின்றது அன்னை செல்வம் அளிக்கும் திருமகள் அல்லவா? அன்னை எல்லா செல்வங்களுக்கும் அதிபதி அல்லவா? அதனால் அன்னையே செல்வத்தின் அதிபதியே செல்வமே என பாடி தொடங்குகின்றார் (பொருள் என்றால் […]

மயில் விருத்தம் : 02

“சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளிபட்டுக் ரவுஞ்ச சயிலந்தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழுதனிவெற்பும் அம்புவியும் எண்திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவருசித்ரப் பதம்பெயரவேசேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்திடுக்கிட நடிக்கு மயிலாம் பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரிபத்மப் பதங் கமழ்தரும்பாகீ ரதிச்சடில யோகீ சுரர்க்குரியபரம உபதேசம் அறிவிக்கைக்குச் செழுஞ்சரவ ணத்திற் பிறந்தஒருகந்தச்சுவாமி தணிகைக்கல்லார கிரியுருக வருகிரண மரகதகலாபத்தில் இலகு மயிலே” இப்பாடலின் முதல் வரி இப்படி வருகின்றது “சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளிபட்டுக் ரவுஞ்ச சயிலந்” இவ்வரி “சக்ர ப்ரசண்ட கிரி […]

இந்து மக்களின் ஞான சம்பிரதாயம்

இந்துக்களின் மரபினை போல குருவின் பெருமையினை சொன்னவர்கள் யாருமில்லை மகாபாரத்தில் துரோணரின் பெருமை முதல் ராமாயணதில் விசுவாமித்திரர் வரை குருக்களின் பெருமை கொட்டி கிடக்கின்றது ஆனானபட்ட சிவனே தன் மகனை குருவாக கொண்டு பணிந்தான் என்கின்றது சிவபுராணம் அசுரருக்கும் குரு உண்டு, தேவர்களுக்கும் குரு உண்டு என்பது ஒவ்வொரு மனிதனும் அவன் குருவால் வழிநடத்தபடுகின்றான், குரு இல்லாத வாழ்வு பாழ் என்பதை சொல்லிற்று குரு பவுர்ணமி என ஒரு கொண்டாட்டத்தையே வைத்த மதம் இந்துமதம் ஒரு காலத்தில் […]

தமிழ் சினிமாவில் அடிக்கடி ஹீரோயினை தூக்கி சுமக்கின்றான் நாயகன், இன்னும் யார் யாரோ சுமக்கின்றான் சில நேரம் வில்லன் கூட தூக்கி செல்கின்றான் சக மனுஷியினை மனிதன் சுமந்து அலையும் இந்த சமூக இழிவினை கண்டித்து தமிழக போராளிகள் போராட்டம் நடத்துவார்கள் என எதிர்பார்ப்போம்

நாச்சியார் திருமொழி 2.3

நாச்சியார் திருமொழி 2.3 அந்த மணல் பரப்பில் சிறுமியரோடு மணல் வீடு கட்டி கண்ணா இதை இடிக்கவராதே என சொல்லி சொல்லி அவனை அழைக்கும் ஆண்டாள், அன்றும் அப்படி சிறுமிகளோடு அமர்ந்து விளையாடுகின்றாள் சற்று தொலைவில் கோவில் யானை ஒன்று குளத்திற்கு நீராட வருகின்றது அது கஜேந்திர மோட்சம் எனும் கொண்டாட்டத்துக்கு தயாராகும்படி குளிக்க வந்திருந்தது, பங்குனி மாதம் கொண்டாடபடும் கஜேந்திர மோட்ச விழா அன்று மாலை கொண்டாடபட இருந்தது அக்காலத்தில் பங்குனி மாதத்தில் அந்த விழா […]

“அரசியல் புதிது” படத்துக்காக

“அந்த அரசியல் வாரிசு தலைவர் காரில் வந்து கொண்டிருக்கின்றார், மக்கள் 500 ரூபாய் வாங்கி கொண்டு கொடுக்கும் வரவேற்பில் 50 ரூபாய் வாங்கிய சிறுவனும் நிற்கின்றான் சிறுவனை கண்டதும் முன்பு செய்த ஏற்பாட்டின் படி கார் நிறுத்தபடுகின்றது, மேக் அப் சரிசெய்யபடுகின்றது தலைவர் இறங்குகின்றார், கேமரா மேன் தயாரானதும் சிரித்தபடி சிறுவன் அருகில் சென்று புன்னகைத்து பழம் கொடுக்கின்றார் தலைவர் சிறுவன் கேட்கின்றான் “அந்த கார்ல இருக்குற படம் யாரோடது? எங்க அப்பா பக்கத்துல இருக்குற படம்? […]

மோடி பிரான்ஸில்

மோடி பிரான்ஸில் சில அதிரடிகளை காட்டி கொண்டிருக்கின்றார், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா அதிகரித்த நிலையில் அமெரிக்க முகம் கறுக்கின்றது, காரணம் இந்தியாவின் மிகபெரிய எண்ணெய் தேவை ரஷ்ய ரூபிளின் மதிப்பினை நிறுத்தி தாங்கும் என்பது அமெரிக்க கணிப்பு ஆனல் மலிவு விலை எண்ணெயினை இந்தியாவாலும் விட முடியாது இப்படி சில முறுகல்கள் இருக்கும் நிலையில்தான் மோடி ஐரோப்பா சென்று ஐரோப்பிய யூனியனின் ஆதரவு இந்தியாவுக்கு இருப்பதை காட்டிகொண்டார் இந்த கடும் யுத்த நிலையிலும் ரஷ்ய எண்ணெய் […]

இலங்கை தமிழருக்கு உதவிபொருட்களை வழங்குவதாக‌ திமுக அறிவித்ததற்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே மனமுருகி நன்றி தெரிவித்திருக்கின்றார் எந்த ராஜபக்சே? திருமா, வைகோ உள்ளிட்ட திமுகவின் கூட்டணியினரால் போர் குற்றவாளி, தமிழின விரோதி என்றெல்லாம் விமர்சிக்கபட்ட அதே ராஜபக்சே போகிற போக்கில் திடீரென ரஜபக்சே அறிவாலய பக்கம் வந்தால் கூட ஆச்சரியமில்லை போலிருக்கின்றது, அப்படி வந்தால் அங்கிள் சைமன் நிலை என்னாகும் என்பதுதான் தெரியவில்லை

மிகபெரிய வெடிமருந்துகளுடன் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பஞ்சாபிய எல்லையில் கைது செய்யபடுவது கவலை அளிக்கும் விஷயம் இந்தியாவின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கள் வலுவாக இருப்பதால் பெரும் அசம்பாவிதங்கள் தடுக்கபடுகின்றன என்றாலும் மிகபெரிய தாக்குதலுக்கு எதிரிகள் தொடர்ந்து திட்டமிடுகின்றார்கள் என்பது கூடுதல் கவனத்துக்கு வழி செய்கின்றது பஞ்சாப் அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது, சர்வதேச உளவு அமைப்புக்களுடன் இந்தியா கொண்டிருக்கும் நல்லுறவால் தெய்வாதீனமாக ஒவ்வொரு ஆபத்தும் முறியடிக்கபட்டு கொண்டே இருக்கின்றது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications