பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மாரிதாஸ்

மாரிதாஸ் ஏன் கட்சியில் சேரவில்லை அல்லது சேர்க்கபடவில்லை என்பது பற்றி நமக்கு தெரியாது ஆனால் ஒரு விஷயத்தை நம்புகின்றோம் மாரிதாஸ் கட்சியில் பதவி கிடைக்கும் என நம்பி தன் பணியினை தொடங்கவில்லை, இப்படி செய்தால் பெரும் பதவி தன்னை தேடிவரும் என அவர் கருதியிருக்கவுமில்லை இப்பொழுது அவர் பிரபலமாகியிருக்கலாமே தவிர தொடக்கம் அப்படி நோக்கமானது அல்ல‌ இன்று பிரபலமாகிவிட்ட பின் கட்சியில் பதவி வேண்டும் என அடம்பிடித்தால் அவரின் இதுகால சேவை கேள்விகுறியாகும் என்பதில் சந்தேகமே இல்லை […]

தேர் விபத்தில்

தேர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு எதிர்கட்சியா இந்நேரம் இருந்திருதால் சுமார் 50 லட்சமாவது கோரியிருப்பார் அப்படியே குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கேட்டிருப்பார் எனினும் ஒரு ஆலயத்தின் தேர் எரிவது மாகாண அரசுக்கு நல்லதல்ல, ஏதோ சரியில்லை என்பது ஆன்மீக கணக்கு

ஆட்சி அதிகாரம் நோக்கி நம் பயணம் இருக்க வேண்டும், நம் ஆட்சி அமையவேண்டும் அதிகாரம் நம் கைக்கு வரவேண்டும் என சீறியிருக்கின்றார் துரை வையாபுரி அதாவது வைகோவின் கட்சி கம்பெனிக்கு புது தலைவராகியிருக்கும் வைகோவின் மகன் பொதுவாக திமுக கூட்டணி கட்சியினரின் கோஷமே “ஸ்டாலின் கரங்களை வலுபடுத்துவோம், அடுத்த பிரதமர் ஸ்டாலின், ஸ்டாலின் ஆயிரம் கருணாநிதிக்கு சமம், உதயநிதி காந்தியின் வடிவம்” என இருக்க வேண்டும் என்பது கூட்டணி தர்மம் அந்த தர்மத்தை மீறி பொங்குகின்றார் துரையார் […]

இளையரஜா

தமிழ் சினிமா இயக்குநர்களை பொளந்து கட்டியுள்ளார் இளையரஜா “நம்முடைய இயக்குனர்களிடம் உயர்வான சிந்தனை இல்லை’ எனவும், ‛நல்ல படைப்புகளை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார் தமிழக இயக்குநர்களிடம் கதைக்கு பஞ்சமாகி நடிகையின் இடுப்பு, காமம், குடி, கூத்து, கள்ளகடத்தல் என சரணடைந்துவிட்டனர், நல்ல கதையம்சம் கொண்ட இயக்குநர்கள் இப்பொழுது யாருமில்லை இப்படிபட்ட படங்கள் சில வெற்றியடைந்தால் அது சமூக ஆபத்து. அதைத்தான் சொல்ல வருகின்றார் இளையராஜா பொறுப்பு என்பது இயக்குநர்களுக்கும் வேண்டும் மக்களுக்கும் வேண்டும் என்பது […]

தஞ்சை அருகே தேர் மின்கம்பத்தில் உரசி பலர் பலி என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயம், முன்பு எங்கோ நடந்த இந்நிகழ்வு மறுபடியும் தொடர்ந்திருப்பது துரதிருஷ்டம் இனி தேர் ஊர்வலங்களுக்கு முன் எடுக்கபடும் முன் எச்சரிக்கைகள் கடுமையாக இருக்க வேண்டும் என்பது அவசியம் பல உயிர்களை பலிகொடுத்தபின்பே ஆபத்தின் வீரியம் புரிந்துகொள்ளும் துயரநிலை களையபட வேண்டும், அந்த திருவிழாவில் இறந்தோருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

பாகிஸ்தானுடன் உறவு நெருக்கமாகும் என புட்டீன் அறிவித்த சில நொடியில் பாகிஸ்தானில் குண்டு வெடித்து சில சீனர்களும் கொல்லபட்டிருக்கின்றனர் பல்கலைகழகம் ஒன்றில் அந்த குண்டு வெடித்ததாக நம்பபடுகின்றது இதெல்லாம் உலக அரசியல் மொழி, ஆனால் யாருக்கோ யாரோ எச்சரிக்கை செய்கின்றார்கள் என்பது மட்டும் நிஜம்

அமெரிக்க தொழில்முனைவோரின் சிந்தனைகள் எப்பொழுதும் வித்தியாசமானவை, இப்பொழுது அதை பூனைகுரிய உணவில் கலந்துவிட்டார்கள் இதுவரை பூனைகளுக்குரிய உணவில் மீன் மற்றும் இதர மாமிச வகைகள் இருந்தன, ஏதோ ஒரு தொழில்முனைவோர் பூனையினை கடும் ஆராய்ச்சி செய்ததில் பளீர் என பல்பு எரிந்திருக்கின்றது ஆம், எலிகறி உணவு பூனைக்கு பிடிக்கும் என்பதை கண்டறிந்து இப்பொழுது எலி உணவு அமெரிக்காவில் பூனைகளுக்கு படுஜோராக விற்பனையாகின்றது வியாபார மூளை என்றால் இதுதான், பூனைக்கு எலிபிடிக்கும் என்பது எல்லோரும் அறிந்தது ஆனால் இப்படி […]

ரஷ்ய உக்ரைன்

ரஷ்ய உக்ரைன் போர் ஒரு விபரீத திருப்பத்தை கொடுத்திருக்கின்றது இதுவரை பெரிதாக ரஷ்யாவுக்குள் அடிக்காத உக்ரைன், இப்பொழுது சண்டைக்கு தேவையான ரஷ்ய எரிபொருள் இருக்கும் குடோனை ஏவுகனை வீசி தகர்த்திருக்கின்றது, இது பெரும் அதிர்ச்சி காரணம் ரஷ்யாவின் வான்பாதுகாப்பு பலம் உலகிலே உன்னதனமாது, அதிசிறந்த வான்பாதுகாப்பு சாதனமெல்லாம் அவர்களிடம் உண்டு ஒரு நாடு ஏற்றுமதிக்கு தரம் குறைந்த ஆயுதமும் தன் சொந்த பாதுகாப்புக்கு மிக பலமான ஆயுதமும் செய்யும் என்பது உலக நியதி, அவ்வகையில் ரஷ்யாவின் வான்பாதுகாப்பு […]

ஒளவையரின் ஞானகுறள்

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அங்கி தாரணை/ குறள் : 02″ ஈரெண் கலையி னிறைந்தவமிர் துண்ணில் பூரண மாகும் பொலிந்து” இந்த குறள் “ஈரெண் கலையில் நிறைந்த அமிர்தம் உண்ணில் பூரணமாகும் பொலிந்து”” என பிரிந்து பொருள் தரும் கலை என்றால் இங்கு நாடிகள். அன்னாக்கில் ஊறும் அமிர்தத்தில் 16 நாடிகள் துலங்கும், “பன்னியிடும் மேதை, அருக்கீசம், விடகலையேபயில்விந்து, அர்த்தசந்திரன், நிரோதி நாதம்மன்னியிடும் நாதாந்தம்; சக்தி வியாபினியேவருசமனை உன்மனை, பன்னிருகலையாம் மருவும்மின்னிலகு […]

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம்- தமிழக அரசுக்கு சீமான் ஆதரவு யார் சீமான்? அவர் சற்றுமுன் புட்டீனை மிரட்டி ரஷ்ய உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்தவர் என்பது குறிப்பிடதக்கது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications