பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கியூபாவுக்கு மருத்துவம் சொல்லி கொடுத்தேன் தம்பி!

“கொரோனா உங்களுக்குத்தான் புதுசு, எங்களுக்கெல்லாம் பழசு. அண்ணன் தமிழ்செல்வன கொன்னுட்டா பிரபாகரன் பயந்து சரணடைவார்னு சிங்களன் நெனச்சான், அண்ணன் அடங்குவாரா? இதனால எங்க இருந்தாலும் சாகட்டும்னு ஒரு குண்டுல கொரோனா தூக்கி போட்டுட்டான், எல்லோருக்கும் இருமல் தொண்டவலி அண்ணன் அவசரமா வந்து ஒரு கண்டெய்னர திறந்தாரு, பூரா சுருட்டு. ஆளுக்கொண்ணு தூக்கி போட்டு குடிங்கண்ணு கத்துனாரு , நல்லா இழுத்தோம் , கொஞ்ச நேரத்துல கொரோனா அறிகுறியே இல்ல‌ எப்படிண்ணேன்னு கேட்டேன், தம்பி என்னை கொல்ல ஏகபட்ட […]

காலம் எப்படி எல்லாம் ஆடுகின்றது பார்த்தீர்களா?

1989ல் சோவியத் யூனியன் உடைந்து சிதறியது, குழப்பமான கொள்கைகளால் உற்பத்தியும் பணமும் இன்றி வீண் ஈகோவில் இருந்த அந்த வல்லரசு மொத்தமாக சிதறியது அந்நேரம் மிக மிக வறுமையில் இருந்தது ரஷ்யா, எல்லாம் கைமீறி போயிருந்தது, உக்ரைனின் செர்னோபில் அணுவுலை விபத்தால் கோதுமை வயல்களும் கைவிடபட்டு உனவுமில்லாமல் இருந்தது 1950ல் இருந்து சோவியத்துடம் மாபெரும் யுத்தம் புரிந்த அமெரிக்கா, பெரும் விபரீத யுத்த முனைகள் எல்லை வரை சென்ற அமெரிக்கா, சோவியத்தை ஒழிக்க கொரியா, வியட்நாம் இன்னும் எங்கெல்லாமோ […]

பிரதமரின் உரையினை கேட்கும் பொழுது நன்றி கண்ணீர்தான் வருகின்றது.

பிரதமரின் உரையினை கேட்கும் பொழுது நன்றி கண்ணீர்தான் வருகின்றது, கிணற்றின் ஆழத்தில் மெல்ல நீர் சுரப்பது போல நன்றியுணர்வும் பெருமிதமும் மெல்ல சுரக்கின்றது. ஆம் நாம் சொன்னபடியே பாரதம் முழுக்க விளக்கேற்ற சொல்கின்றார் மோடி. நிச்சயம் நாம் சொல்லி ஏதும் நடந்திருக்க வாய்ப்பில்லை, நாம் கூவித்தான் சூரியன் வருகின்றது இல்லையென்றால் வராது என சேவல் நினைத்தால் அது மடத்தனம் இந்த மண்ணின் தர்மம் அது, இறந்தவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவது இந்த மண்ணின் தாத்பரியம். நாம் அதைத்தான் […]

பிரபுதேவா!

அவருக்கு 47 வயதுதான் ஆகின்றது, பெரும் சாதனையாளர் என கொண்டாட இன்னும் காலமிருக்கின்றது ஆனால் குறிப்பிட்டு சொல்லவேண்டியவர் அவர் மிகசிறு வயதில் இருந்தே சினிமாவுக்கு வந்து அதிலிருந்து பிரியாமல் அதில் கலந்து வரும் கமலஹாசன் போல அவரும் ஒருவர் அவர் பிரபுதேவா சந்திரபாபு தொடங்கி வைத்த ஒருவித மேற்கத்திய நடனத்தின் பின்னாளைய வாரிசு பிரபுதேவா இவ்வளவுக்கு இவரின் தந்தை சுந்தரம் சந்திரபாபு ஆடுவது நடனமே அல்ல என விமர்சித்த காலமும் உண்டு ஆனால் இவரோ அவர் வழி […]

இந்த நெருக்கடியான நிலையில் ஒவ்வொரு மருத்துவரும் ததீசி முனிவரின் வடிவமே!

பாகவத புராணத்தில் ஒரு கதை உண்டு இந்திரன் தன் அகம்பாவத்தாலும் அலட்சியத்தாலும் பெரும் தவறிழைக்க தேவலோகம் விருத்திகாசுரன் என்பவனிடம் சிக்கிவிட்டது. விருத்திகாசுரன் கதையினை சொல்ல ஆரம்பித்தால் பெரும் புத்தகமாக வரும் என்பதால் அவனும் இந்திரனும் மோதிய காட்சியினை காணலாம் இந்திரனால் அந்த விருத்திகாசுரனை வெல்லமுடியவில்லை அவனின் வஜ்ராயுதம் கூட விருத்திகாசுரனிடம் வேலை செய்யவில்லை அஞ்சிய இந்திரன் விஷ்ணுவிடம் சரண்டைந்தான் , விஷ்ணு விருத்திகாசுரனை வெல்லும் வழியினை போதித்தார், அதாவது கொடிய விருத்திகாசுரன் யாக தீயில் தோன்றியவன், எந்த […]

ராமாயணம் பார்ப்பன நூலா?

எதிர்பார்த்தது போல் ராமன் சம்பூகன் எனும் சூத்திரனை ஏன் கொன்றான், அவன் ஆரிய பார்பானிய சண்டாளன் அவன் சூத்திரன் தவம் செய்வது பொறுக்காமல் கொன்றான் என கிளம்பிவிட்டது ஒரு கோஷ்டி முதலில் ராமனே ஒரு பிராமணன் அல்ல ஷத்திரியன், அவனிடம் சம்பூகன் மேல் பிராது கொடுத்த நாரதரும் பிராமணர் அல்ல, ஒரு வேலைக்காரியின் மகன் சம்பூகன் தவமிருந்தான், கவனிக்கவும் தவம் பிராமணுக்குரியது என யாரும் அவனை தடுக்கவில்லை எல்லா சாதியும் தவம் இருக்க அனுமதி இருந்தது ஆனால் […]

அமெரிக்கா மிகபெரும் இக்கட்டில் இருக்கின்றது.

கொரோனா விவகாரம் தன் வழக்கமான கொதிநிலையில் எரிமலையாய் பொங்கிகொண்டிருக்கின்றது, 9 லட்சத்தை தாண்டி சென்று, உயிரிழந்தோர் எண்ணிக்க்கையினை ஐம்பதாயிரமாக ஆக்க சிக்ஸர் அடித்து கொண்டிருக்கின்றது ஒன்றும் சொல்வதற்கில்லை, ஐரோப்பா தன் உச்சகட்ட போராட்டத்தை நடத்துகின்றது. அமெரிக்காவில் 2.3 லட்சம் பேர் பாதிக்கபட்டு, பலி எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டிவிட்டது ஐரோப்பியர் கண்ணீர் வற்றிவிட்டது, அவர்கள் கல்லறையும் நிரம்பிவிட்டது, இனி என்னமும் நடக்கட்டும் என்ற ஒருவித விரக்தியில் மூழ்குகின்றது ஐரோப்பா , அந்த சோகத்தில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கையும் அதிகம் […]

ராமநவமி வாழ்த்துக்கள்.

அவதாரங்கள் பலவகை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை சொல்லை வந்தவை, ஆனால் ஒரு மனிதன் எப்படி உன்னத மனிதனாக மிளிர வேண்டும் , உதாரண தத்துவ வடிவமாக வாழவேண்டும் என சொல்ல வந்த அவதாரம் ராம அவதாரம் அயனம் என்றால் வழி என பொருள், ராமன் காட்டிய வழியே ராமாயணம் ஆயிற்று கம்பன் இப்படி சொல்கின்றான் அவன் வரியில் தொடங்கலாம் “மும்மைசால் உலகுக்கெல்லாம்மூல மந்திரத்தை முற்றும்தம்மையே தமர்க்கு நல்கும்தனிப் பெரும் பதத்தை, தானேஇம்மையே, எழுமை நோய்க்கும்மருந்தினை இராமன் என்னும்செம்மைசேர் […]

பாகிஸ்தான் இந்நெருக்கடியிலும் மதவெறியின் உச்சத்தில் இருக்கின்றது.

பாகிஸ்தானும் கொரோனாவுக்கு தப்பவில்லை, ஆனால் காட்சிகள் மானிட நேயத்தை சாகடிக்கின்றன, அந்நாடு எப்படிபட்ட முரட்டு நாடு என்பது உலகுக்கு தெரிகின்றது ஆம் அங்கு மைனாரிட்டி இந்துக்களும் கிறிஸ்தவர்களும் உண்டு இப்பொழுது அங்கும் ஊரடங்கு வீட்டுக்குள் அடைப்பு, ஆனால் இஸ்லாமியருக்கு கிடைக்கும் உதவியும் உணவும் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கிடைப்பதில்லை இந்திய திருநாடு மசூதியில் அடைபட்ட கூட்டத்தையும் அவர்களில் இருந்து தப்பி ஓடியவரையும் தேடி பிடித்து நீங்களெல்லாம் இந்தியர்கள் என மத வேறுபாடு இன்றி தேடி பிடித்து காத்து கொண்டிருகின்றது […]

கர்வம் கொண்ட நாடெல்லாம் அலறி ஓய்ந்து வீழ்ந்து கொண்டிருக்கின்றன‌.

பணம், ராணுவம், பொருளாதாரம், ஒலிம்பிக், அதிகாரம் என எல்லாவற்றிலுமே முதலிடத்தில் இருக்க நினைக்கும் அமெரிக்காவினை கொரோனா விஷயத்திலும் அடித்து இழுத்து முதலிடத்தில் வைத்திருக்கின்றது கொரோனா அமெரிக்கா கதறி மிரட்டி கெஞ்சி ஓடி ஒளிந்தாலும் விடாமல் நீதான் இதிலும் நம்பர் 1 , நீயேதான் இருந்தாக வேண்டும் என மிரட்டி அந்த சிம்மாசனத்தில் கட்டி வைக்கின்றது காலதேவனின் கயிறு எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு சம்பவம் சொல்வார், பெரும் எழுத்தாளர் என அவரிடம் ஒரு கர்வம் வந்த நேரமிது, பார்ப்பவர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications