டி.எம் சவுந்திரராஜனுக்கு இன்று பிறந்த நாள்
அந்த சவுராஷ்ட்ரா இனம் வடக்கே பெருவாழ்வு வாழ்ந்தது, ஆப்கானிய படையெடுப்புக்கு பின் நிலமிழந்து வாழ்விழந்து தென்ன்ககம் வந்தது அதில் இரு பிரிவு பட்டு நெசவினை செய்தது, மதுரையினை ஆண்ட திருமலை நாயக்கருக்கு பட்டு துணி மீது படுபிரியம், அதனை நெய்து கொடுக்கவே சில சவுராஷ்ட்டிரா குடும்பங்களை கொண்டு வந்து மதுரையில் குடியமர்த்தினார், அன்னை மீனாட்சிக்கும் மன்னனுக்கும் பட்டு நெசவு செய்யும் தொழிலாகளாய் அவர்கள் மதுரையில் குடியேறினர் அவர்கள் பலுகி பெருகினர், மங்கா பல அடையாளங்கள் அதில் உருவாயினர் […]