பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திமுக காங்கிரஸ் கனவுகளை நிஜமாக்கும் ஒரே கட்சி பாஜக..

இது சமத்துவ நாடு எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் : திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் அறிக்கை அதற்குத்தான் இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டு, பொது சிவில் சட்டம் கொண்டுவந்து எல்லோரும் சமம் என காட்டபோகும் திட்டம் பரிசீலனையில் உள்ளது, அடுத்தது அதுதான் ஆக திமுக காங்கிரஸ் கனவுகளை நிஜமாக்கும் ஒரே கட்சி பாஜக..

சரி, மசோதா என்னாச்சி?

தமிழக எம்பிக்கள் பாராளுமன்றத்தை ஆட்டிவிட்டார்கள், அலற வைத்துவிட்டார்கள் அப்புறம்? ஒரே அமர்க்களம், படு சீற்றமான கேள்விகள், பாஜகவிடம் பதிலே இல்லை அப்புறம்? அமித்ஷா மிரண்டார், மோடி தலைகுனிந்தார் அப்புறம் அவ்வளவுதாம்ணே தமிழக எம்பிக்கள் மசோதாவ எதிர்த்து வாக்களித்தார்களா? இல்லண்ணே, அதுக்குள்ள வெளிய ஓடிட்டாங்க‌ சரி, மசோதா என்னாச்சி? அது போக்குல நிறைவேறி சட்டமாயிற்று.

சிறுவர் ஆபாசபடத்தை பதிவேற்றம் செய்த திருச்சிக்காரன்

சிறுவர் ஆபாசபடத்தை பதிவேற்றம் செய்த திருச்சிக்காரனை பிடித்து உள்ளே போட்டுவிட்டது காவல்துறை, அவனோடு தொடர்பில் இருந்த 150 பேர் மகா கலக்கத்தில் இருக்கின்றார்கள் இந்த விவகாரத்தை அரசு மிக கடுமையாக கருதுகின்றது, சமூக ஊடகங்களில் யாரெல்லாம் இதை பரப்புகின்றார்களோ அவர்களை எல்லாம் பிடித்து 5 வருடம் உள்ளே தள்ள சட்டம் வழிவகை செய்கின்றது இது குறித்து காவல்துறை ஆணையாளர் வாத்ஸாயணரின் பக்த கோடிகளுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியினை சொல்லியிருக்கின்றார் “அதாவது அம்மாதிரி படங்களை பார்ப்பதை தடுக்கமுடியாது, பார்ப்பவன் […]

களஞ்சியம் தாக்கபட்டதை மறுத்திருக்கின்றது இலங்கை ராணுவம்

களஞ்சியம் தாக்கபட்டதை மறுத்திருக்கின்றது இலங்கை ராணுவம், களஞ்சியம் தாக்கபட்டாரா என வரும் சர்ச்சையினை அடுத்து ராணுவம் இப்படி அறிவித்திருக்கின்றது அவரை தாக்கவில்லை எனவும் அப்படி ஒருவர் வந்ததே தெரியாது என்பது போலவும் பேசியிருக்கின்றது உண்மையில் களஞ்சியத்துக்கு அடி விழுந்தது நிஜம், எனினும் தங்கள் நற்பெயருக்கு (?) களங்கம் வராமல் இருக்க இப்படி சொல்கின்றது அந்த தரப்பு. அவர்கள் தாக்கவில்லை என்றால் வேறு யார் களஞ்சியத்தை தாக்கியிருப்பார் என்ற கேள்வியிலே எல்லாம் அடங்கிவிட்டது, இலங்கை அரசின் ரகசிய பிரிவு […]

உள்ளாட்சி தேர்தலின் முதல் ரத்தபலி

உள்ளாட்சி தேர்தலின் முதல் ரத்தபலி விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளது சாத்தூர் கோட்டையடி ஊராட்சி முதல் விக்கெட்டை சாய்த்திருகின்றது, ஆம் தேர்தல் தகறாறில் ஒருவர் கொல்லபட்டிருக்கின்றார் உள்ளாட்சி தேர்தலால் கலவரம் வந்துவிட்டது, அதனால் தேர்தல் வேண்டாம் என அடுத்த மனுவினை உச்சநீதிமன்றத்துக்கு உற்சாகமாக எழுதிகொண்டிருக்கின்றது திமுக

திமுக எப்படிபட்ட அயோக்கிய கட்சி என்பது அப்பொழுது விளங்கும்

ஆம் அதை சொல்லத்தான் வேண்டும், திமுக எப்படிபட்ட அயோக்கிய கட்சி என்பது அப்பொழுது விளங்கும் 1957 , 58ல் திமுக நாம் தமிழர் போல ஒப்புக்கு இருந்து வம்பு பேசிகொண்டிருந்தது, உருப்படியாக என்றுமே எதையுமே செய்யாதது போல அன்றும் ஒன்றும் சிந்திக்காமல் ஏதோ சொல்லிகொண்டிருந்தார்கள் அப்பொழுதுதான் 5 லட்சம் தமிழக மக்களை திருப்பி அனுப்ப சிறிமாவோ பண்டாரநாயக்கா இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ய டெல்லி வந்தார் மிகபெரும் சதியோடு வந்து ஈழதமிழரும் சிங்களரும் இணைந்தே அவர்களை வெளியேற்றுகின்றோம், 5 […]

பழைய கண்ணீர் கொடும் வரலாற்றை மறைக்கின்றது

இன்று ஈழதமிழருக்கு இந்திய குடியுரிமை கொடுக்கவேண்டும் என கொக்கரிக்கும் கூட்டம் , பழைய கண்ணீர் கொடும் வரலாற்றை மறைக்கின்றதுஅதாவது 17ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து தமிழர்களை இலங்கை தோட்ட தொழிலுக்கு கொண்டுசென்று மலையகத்தில் குடியேற்றினான் வெள்ளையன், அவர்களாலே அங்கு தேயிலை செழித்து இலங்கை மகா உச்சத்தில் இருந்ததுஅவர்கள் இங்கிருந்து சென்ற தாழ்த்தபட்ட சாதி மக்கள் என்பதால் ஈழமக்கள் அவர்களை அருகில் சேர்க்கவில்லை, அன்றெல்லாம் தமிழக தமிழனை அவர்களுக்கு பிடிக்காது, இன்றும் பிடிக்காதுஅவர்கள் அறிவார்ந்த தமிழராம், நாமெல்லாம் நாய்தமிழர், […]

அந்த இணைப்பு மட்டும் நடந்திருந்தால் இவ்வளவு அழிவு ஈழத்தில் நடந்திருக்காது

இந்தியாவினை பிடித்த வெள்ளையருக்கு கல்கத்தாவே தலைநகரமாக இருந்தது, முதல் கோட்டையினை அங்குதான் கட்டினர் முதல் வெற்றியினை கிளைவ் அங்குதான் பெற்று ஆட்சியில் அமர்ந்தான், கிழக்கு பகுதி வாணிக மையம் உட்பட பல அனுகூலங்கள் இருந்ததால் கல்கத்தாவினை தலைநகரமானது 1911 வரை அது அப்படித்தான் நீடித்தது, பின் பரந்த இந்தியா ஆப்கனை கைபற்றும் முயற்சி என பல காரணங்களுக்காக அது டெல்லிக்கு மாற்றபட்டது அது இந்நாள்தான், இந்த டிசம்பர் 12ல்தான் டெல்லி இந்தியாவின் தலைநகர் ஆனது இன்றோடு 107 […]

வங்க வெற்றி இங்கு மறைக்கபட்டது

வங்கப்போரின் வெற்றி தேசத்தின் பெருமையினை உலகுக்கு சொன்னது, தேசம் முழுக்க பெரும் எழுச்சியும் இந்திய உணர்வும் பொங்கிற்று 1947ல் இருந்த அந்த எழுச்சி தமிழகத்திலும் வந்தது, இது திராவிட இயக்கங்களுக்கு பெரும் கவலையினை கொடுத்தது, தமிழர் தங்களை இந்தியராக கருதிவிடுவரோ என்ற பேரச்சம் ஏற்பட்டது அவர்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் இருந்தது, அண்ணாவுக்கு பின்னரான அந்த சட்டமன்ற தேர்தல் 1971 மார்ச்சுக்கு பதிலாக 1972ல் நடந்திருக்குமானால் வங்க வெற்றியில் இங்கு காங்கிரஸே ஆட்சிக்கு வந்திருக்கும் ஈட்டிக்கு தப்பியவனாக சுதாரித்து […]

பள்ளிகட்டு சபரிமலைக்கு பெரியார் கொள்கை காலுக்கு மெத்தை..

பள்ளிகட்டு சபரிமலைக்கு பெரியார் கொள்கை காலுக்கு மெத்தை.. பெரியார் குத்து தப்பய்யா பெரியார் கோஷ்டி வேண்டாம்யா திராவிட கோஷ்டி அய்யய்யோ திராவிடம் என்பது பொய்யய்யோ… சாமியே மன்னிப்பாய்.. மன்னிப்பாய் சாமியே. (இவர் சபரிமலைக்கு செல்லும் நேரம் அந்த அம்மணி காதலுடன் திருச்செந்தூர் கன்னியாகுமரி ஆலயம் செல்வது இவரை வெறுப்பேற்றவா என கேட்டால் நம்மிடம் பதில் இல்லை..).

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications