பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அணிலுக்கு ராமன் 3 கோடு போட்டான் என எதில் சொல்லபட்டுள்ளது என்பதுதான் தெரியவில்லை

அணிலுக்கு ராமன் 3 கோடு போட்டான் என எதில் சொல்லபட்டுள்ளது என்பதுதான் தெரியவில்லை அந்த சம்பவம் வால்மீகி ராமாயணம், துளசிதாசர் ராமாயணம், கம்ப ராமாயணம் என எதிலுமே இல்லை எவனோ எங்கோ இந்த ஜெயமோகன் அவர் போக்கில் மகாபாரதம் எழுதுவது போல சொல்லி வைத்த கதையினை பிடித்து கொண்டு ராமன் அணிலை தடவினான், சீதையின் முதுகில் ஏன் கோடு இல்லை என்பதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியதனம் இதை தொடங்கி வைத்தது யாரென்றால் திராவிட கும்பல்கள் அவர்களுக்கு சுய அறிவே […]

திமுக தலமைக்கு மிக சரியாக பொருந்தும் போலிருக்கின்றது

“சிலம்பிக்குத் தன் சினை கூற்றம்; நீள் கோடு விலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான் வலம் படா மாவிற்குக் கூற்றம் ஆம்; ஞெண்டிற்குத் தன் பார்ப்பு; நாவிற்கு நன்று அல் வசை.” அதாவது சிலந்திப் பூச்சிக்கு அதன் முட்டையும், மிருகங்களுக்கு அவற்றின் நீண்ட கொம்புகளும், கவரிமானுக்கு அதன் மயிரும், நண்டுக்கு அதன் குஞ்சுகளும், மனிதனுக்கு அவனின் நாக்கும் ஆபத்தானதாகும் இது திமுக தலமைக்கு மிக சரியாக பொருந்தும் போலிருக்கின்றது

தவறு மனிதனின் சோம்பலிலும் சரியான திட்டமிடாதலிலும் இருக்கின்றது

ஆளாளுக்கு வெங்காய விலை கூடிவிட்டதாக ஒப்பாரி, சரி வெங்காய விலை குறைய இவர்கள் எந்த வெங்காயத்தை விளைய வைத்தார்கள் என்றால் ஒன்றுமில்லை தமிழ்நாட்டுக்கான வெங்காய உற்பத்தி இங்கு அதிகம் கிடையாது, வரவேண்டியதெல்லாம் வடக்கே இருந்துதான் வரும். அங்கே மழை உட்பட பல காரணங்களால் உற்பத்தி பாதிப்பு ஏதோ மோடியும் அமைச்சரவையும் வெங்காய உற்பத்திக்கு அனுப்பபட்டவர் போலவும் அவர்கள் சரியாக விளைவிக்கவில்லை போலவும் ஏக பிதற்றல்கள் தமிழகம் வெங்காயத்துக்கும் அடுத்த மாநிலத்தை அண்டியிருக்கின்றது என்பதை ஒப்புகொள்ள ஒரு பயலும் […]

காவல்துறை நாடுமுழுக்க வலுவாகியுள்ளது

இப்பொழுதெல்லாம் காவல்துறை நாடுமுழுக்க வலுவாகியுள்ளது, பொதுவாக ராணுவம் போல் காவல்துறையும் மத்திய அரசின் கட்டுபாட்டுக்கு வரவேண்டும் என்ற குரல் நெடுங்காலமாக உண்டு மோடி அரசு அந்த திட்டத்தில் இருப்பதால் என்னவோ எல்லா மாநில காவல்துறையும் தங்களை வலுபடுத்திகொள்கின்றன‌ தமிழக காவல்துறை பாத்ரூம் தளத்தினை சரியாக வைத்து குற்றவாளிகளை தண்டிக்கின்றது, ரவுடிகள் ஆட்டம் தமிழகத்தில் இப்பொழுது குறைவு தெலுங்கானாவில் நடந்த மகா கொடூர சம்பவமான அந்த மருத்துவரை கொன்ற விவகாரத்தில் 4 பேரையும் சுட்டு கொன்று அதிர வைத்திருக்கின்றது […]

முகநூலில் உண்மை உரைப்பதும், உரைத்துவிட்டு ஐடியினை காப்பதும்?

“யானைஇல் மன்னரைக் காண்டல் நனி இன்னா; ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா; தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா; ஆங்கு இன்னா, கான் யாறு இடையிட்ட ஊர்… சிறை இல்லா மூதூரின் வாயில் காப்பு இன்னா; துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா; அறை பறை அன்னர் சொல் இன்னா; இன்னா, நிறை இலான் கொண்ட தவம..” அதாவது யானைப் படையில்லாத அரசரைப் பார்த்தல் மிகவும் துன்பமாகும். உடலைத்தின்று உடல் வளர்ப்பது மிகவும் துன்பமாகும். […]

பார்ப்பான் என்றால் யார்

பார்ப்பான் என்றால் யார் என்பதற்கு சங்க கால நான்மணிக்கடிகை சொல்லும் விளக்கம் இதுதான் எருது உடையா வேளாளன்; ஏலாதான் பார்ப்பான், ஒரு தொடையான் வெல்வது கோழி; உருவோடு அறிவு உடையாள் இல்வாழ்க்கைப் பெண் என்ப; சேனைச் செறிவு உடையான் சேனாபதி. எல்லோரையும் ஒன்றாக நடத்தி, எவரோடும் மாறுபடாது ஒற்றுமையுடன் வாழ்பவன் பார்ப்பனன். மந்தையின் சேவல் போல அவன் எல்லோருக்கும் வழிகாட்டியாய் இருப்பான்.

ஜெயலலிதாவின் வாழ்க்கையினை பற்றி வரும் படங்களில் ரம்யா கிருஷ்ணின் குயின் படமும் ஒன்று

ஜெயலலிதாவின் வாழ்க்கையினை பற்றி வரும் படங்களில் ரம்யா கிருஷ்ணின் குயின் படமும் ஒன்று நிச்சயம் ரம்யா கிருஷ்ணன் மிக சிறந்த நடிகை, அதுவும் பொறுப்பு மிக்க கனமான வேடங்களை தன் கண் ஒன்றினாலே கடந்து செல்லும் அசாத்திய நடிகை நிச்சயம் ரம்யா கிருஷ்ணனின் திறமை இன்னொரு நடிகைக்கு சாத்தியமில்லை 1985ல் இருந்து 35 வருடமாக களத்தில் இருப்பதெல்லாம் பெரும் விஷயம் அந்த கண்களில் எல்லா உணர்ச்சியினையும் அவரால் கொண்டுவரமுடிகின்றது, தமிழக நடிகைகளில் யாருக்கும் இல்லா சிறப்பு அதுதான், […]

உண்மை இருக்கும் இடத்தில் ஒரு தீர்க்கம் இருக்கும், ஒரு உறுதி இருக்கும்

உண்மை இருக்கும் இடத்தில் ஒரு தீர்க்கம் இருக்கும், ஒரு உறுதி இருக்கும் அது காமராஜரிடம் இருந்தது, இந்திராவிடம் இருந்தது இப்பொழுது நிர்மலா சீத்தாரமனிடமும் இருக்கின்றது, அதுதான் ஆணவம் என்றால் அது ஆணவமாகவே இருக்கட்டும் பொய் இருக்குமிடமெல்லாம் ஒரு கள்ளதனம் இருக்கும், யார் காலிலும் கூச்சபடாமல் விழும் நடிப்பு இருக்கும், மானம் வெட்கம் இன்றி யாரிடமும் கூட்டணி சேரும் ஒருவித திருட்டுதனம் இருக்கும், பசப்பு வார்த்தைகள் இருக்கும் அவர்களுக்கு தன் நலமும் தன் வருங்கால இருப்புமே முக்கியம், வேறு […]

எதிர்கட்சிகள் வெங்காயத்தை உரித்து அழுதுகொண்டிருக்கின்றன

தமிழ்நாட்டில் கருணாநிதி என்றொருவர் இருந்தார், கடவுள் மறுப்பு கொள்கையாளர். வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் இந்துமதத்தை சீண்டிகொண்டே இருந்தார், சில இடங்கள் மகா மட்டமானவை ஆனால் கருணாநிதி மேல் யாரும் பொங்கியதில்லை, கோடிகணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார், இவரெல்லாம் முதல்வராக தகுதியானவரா என்றெல்லாம் கேள்விகள் இல்லை இதெல்லாம் ஒருவரின் தனிபட்ட நம்பிக்கை என சொல்லி தந்திரமாக குனிந்துகொண்டார்கள் பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது, வெங்காயம் பற்றி கேள்வி எழுப்பினார்கள். எகிப்தில் இருந்தும் இன்னும் பல தேசத்தில் இருந்தும் வெங்காயம் இறக்குமதி […]

சாமி மறுபடி இந்தியா வருவார் என்பது மட்டும் பொய்..

நித்திசாமி கோஷ்டி அதாவது நித்திசாமி அல்ல ஆனால் அவரின் சீட கோடிகள், சாமி தனிநாடு எல்லாம் அமைக்கவில்லை அவர் சொல்வது எல்லைகளற்ற ஆன்மீக உலகம், இந்த இணையம் போன்ற ஒரு உலகம் அதைத்தான் அமைக்க விரும்பி கைலாசா என பெயரிட்டிருக்கின்றார், மற்றபடி பரப்பபடுவது பொய்தகவல் என சொல்லிகொண்டிருக்கின்றது ஒருவேளை சாமி நாடு அடைந்தது பொய்யாக இருக்கலாம் சாமியின் எதிர்தரப்பு கட்டிவிடும் கதையாக இருக்கலாம் என்றாலும் சாமி ஐநாவுக்கு கடிதம் எழுதினார் என அடுத்த செய்தி வருவது இன்னொரு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications