எதிர்கட்சிகள் வெங்காயத்தை உரித்து அழுதுகொண்டிருக்கின்றன
தமிழ்நாட்டில் கருணாநிதி என்றொருவர் இருந்தார், கடவுள் மறுப்பு கொள்கையாளர். வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் இந்துமதத்தை சீண்டிகொண்டே இருந்தார், சில இடங்கள் மகா மட்டமானவை ஆனால் கருணாநிதி மேல் யாரும் பொங்கியதில்லை, கோடிகணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார், இவரெல்லாம் முதல்வராக தகுதியானவரா என்றெல்லாம் கேள்விகள் இல்லை இதெல்லாம் ஒருவரின் தனிபட்ட நம்பிக்கை என சொல்லி தந்திரமாக குனிந்துகொண்டார்கள் பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது, வெங்காயம் பற்றி கேள்வி எழுப்பினார்கள். எகிப்தில் இருந்தும் இன்னும் பல தேசத்தில் இருந்தும் வெங்காயம் இறக்குமதி […]