பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கியது உறுதி செய்யபட்டுள்ளது

விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கியது உறுதி செய்யபட்டுள்ளது கடந்த செப்டம்பரில் நிலையில் இந்திய விஞ்ஞானிகள் தரையிரக்க முயன்ற விக்ரம் லேண்டர் கடைசி கட்டத்தில் காணமல் போனது, அதை எல்லா நாட்டு வானியல் நிலையங்களும் தேடின‌ இப்பொழுது அது உடைந்து சிதறி இருப்பது தெரிகின்றது, ஆக இன்னமும் நிலவில் தரையிற‌க்கல் விஷயத்தில் மிக அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் என்ற பாடத்தை இஸ்ரோ படித்துகொண்டது

நித்திசாமி தன் உச்சகட்ட திருவிளையாடலை ஆடிகொண்டிருக்கின்றார்

நித்திசாமி தன் உச்சகட்ட திருவிளையாடலை ஆடிகொண்டிருக்கின்றார் அன்னார் நீண்டகாலமாகவே திட்டமிட்டு தனக்கொரு தேசம் வேண்டுமென ஆசைபட்டிருக்கின்றார், இந்தியாவில் சாத்தியமில்லை, இந்தோனேஷியா தீவுகள் என்றால் இஸ்லாமிய நாடு. இதனால் ஈக்குவெடார் நாட்டை குறிவைத்திருக்கின்றார் சாமி 5 ஆண்டுகளுக்கு முன்பே மெல்ல அங்கு ஊடுருவி தங்கத்தை கடத்தி ஈக்குவெடார் நாட்டிடம் அந்த தீவை பெற்று பல கட்டுமானங்களை செய்திருக்கின்றார், சாமி கடத்தி சென்ற தங்கம் மட்டும் 6 ஆயிரம் கிலோ அமெரிக்காவிலும் சாமிக்கு சில நிலையங்கள் உண்டு அவற்றின் தலமையகமாக […]

இந்தியாவிற்கு கிறிஸ்துவினை சொல்லவந்த முதல் துறவி அந்த பிரான்சிஸ் சவேரியாரே

“மச்சம் பிடிப்பவர் வாழ்வில் மிச்சம் இல்லை” என்பதும் “உழுதவன் கணக்கு பார்த்தால் உளக்கும் மிஞ்சாது” என்பதும் பழமொழி கடல் தொழில் ஒரு தனி உலகம், அவசரத்திற்கு படகில் இருந்து இளைப்பாற இறங்ககூட முடியாத தொழில் அது, மகா விழிப்பு, உழைப்பு, நொடிப்பொழுதும் அயராத எச்சரிக்கை, உயிரை பணயம் வைக்கும் சவால் இவை எல்லாம் இல்லாமல் மீணவதொழில் இல்லை. அக்காலத்தில் இன்று உள்ளதுபோல போக்குவரத்து இல்லை, பிடிக்கும் மீன்களை விற்பனை செய்ய அவர்களின் சவால் மிக பெரிது. அதனால் […]

தும்பிகளின் மிரட்டலால் நிறுத்தபட்டது என்கின்றார்கள்

அங்கிள் சைமனை கலாய்த்து நியூஸ் 7 தொலைகாட்சி ஏற்பாடு செய்த ஒளிபரப்பு நிகழ்ச்சி தும்பிகளின் மிரட்டலால் நிறுத்தபட்டது என்கின்றார்கள் இதில் தும்பிகள் மிரட்டி நிகழ்ச்சி நிறுத்தபட வாய்ப்பில்லை , தும்பிகளை அரையறிவு ஜீவன்களாக கூட யாரும் கருதவில்லை, விஷயம் வேறுமாதிரியானது அதாவது அங்கிள் சைமன் ஒரு கூலிகுரலாளி, யாரும் காசு கொடுத்தால் அவர்களுக்கு அந்த காசுக்கு ஏற்ப கடுமையாக கத்துவார், அவரின் தொழில் அது அவரை முதலில் நியூஸ்7 தொலைகாட்சிதான் வளர்த்தது, அதுவும் கருணாநிதிக்கு எதிராக அவரை […]

மேட்டுபாளையத்தில் அந்த சோகம் நிகழ்ந்திருக்கின்றது

மேட்டுபாளையத்தில் அந்த சோகம் நிகழ்ந்திருக்கின்றது, நிலசரிவு ஆபத்து வாய்ப்பு இருந்த அந்த இடத்தில் ஒரு பணக்காரன் வளாக சுவர் கட்டியிருக்கின்றான், அது அடுத்திருக்கும் வறிய மக்கள் வீட்டை ஒட்டி இருந்திருக்கின்றது அதை கட்டும் பொழுதே சர்ச்சை வந்திருக்கின்றது, ஆனால் ஏழைகள் என்ன செய்யமுடியும்? விதி என இருந்துவிட்டார்கள் அந்த விதி மழைநேரத்தில் சரியாக இடிந்து அவர்கள் வீடுகள் மேல் சரிந்து 4 வீடுகளோடு 17 பேரை பலிவாங்கிற்று இது அனுமதி வழங்கும் அதிகாரிகள் மற்றும் அந்த சுவரை […]

ஒரு உளவாளியினை கூட உருப்படியாக வைக்க தெரியாதவராகிவிட்டார் சர்வாதிகாரி

தமிழக பாஜகவும் காங்கிரசும் திமுக மற்றும் அதிமுகவின் பினாமிகளால் நிறைந்தவை. இரு கட்சிகளுமே இரு கட்சிக்குள்ளும் தங்கள் கருப்பு ஆடுகளை ரகசியமாய் புகுத்தி அரசியல் செய்யும் இது காலம் காலமாக நடக்கும் விஷயம் ஆனால் சர்வாதிகாரியினை ஒரு கருப்பு ஆடு காட்டி கொடுக்கின்றது, அந்த கருப்பாட்டை கண்ட பாஜகவினர் எந்திரன் ரஜினி போல “ம்மேம்மே..” என சந்தோஷமாக கத்திகொண்டிருக்கின்றனர் ஒரு உளவாளியினை கூட உருப்படியாக வைக்க தெரியாதவராகிவிட்டார் சர்வாதிகாரி

முதலைகள் அலற தொடங்கி இருப்பது குளம் சுத்தமாகின்றது என்பதற்கு சாட்சி

சுதந்திரம் வாங்கியவுடன் புதிய இந்தியாவினை கட்டி எழுப்ப தயாரானது இந்தியா, ஆனால் கஜானா காலி. இந்நாட்டை விவசாய அடிப்படை நாடாகவும், தொழிலதிபர்களை கட்டுபடுத்தும் சோஷலிச நாடாகவும் அமைக்க பட்டேல் போன்றவர்களுக்கு ஆசை இருந்தது ஆனால் நேரு போன்றோர் விவசாயம் போன்ற உற்பத்திகளை விட தொழில்துறை மகா அவசியம் என்றார், அதில் தவறேதுமில்லை. தேர்தல் உட்பட பல விஷங்களுக்கு நிதி தேவையாய் இருந்தது அன்றைய டாட்டா போன்றோர் அள்ளி கொடுத்துவிட்டு இந்நாட்டின் சட்டம் தொழிலதிபர்களுக்கு சாதகமாய் இருக்குமாறு பார்த்து […]

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடிக்க வந்துவிட்டார்

எதிர்பார்த்தபடியே சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடிக்க வந்துவிட்டார், அவரே தயாரித்து அவரே நடிக்க போகின்றாராம் அப்படியே அவரே படத்தையும் பார்த்துவிட்டால் நல்லது சிந்தாமணி செல்வம் என்றொரு சிறுநூல் உண்டு, அதிலொரு பாடல் இப்படி வரும். பரத்தை தோழியிடம் கேட்பாள் அன்னையே அனைய தோழி! அறந்தனை வளர்க்கும் மாதே! உன்னையோர் உண்மை கேட்பேன் உரைதெளிந்து உரைத்தல் வேண்டும் என்னையோ புணருவோர்கள் எனக்குப் பேரின்பம் நல்கி பொன்னையும் கொடுத்துப் பாதப் போதினில் வீழ்வ தேனோ? அதாவது ஏ தோழியே, நீ […]

அதிர்ச்சி அளிக்கின்றது

தெலுங்கானா அதிர்ச்சி தீருமுன்பே கோவையில் பள்ளி மாணவியினை ஒரு கோஷ்டி பாலியல் வல்லுறவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது இப்பொழுதெல்லாம் காதலர்கள் தனியாக ஒதுங்குவதும், அதை கவனிக்கும் சமூக விரோதிகள் அவர்கள் வீட்டில் சொல்ல அஞ்சுவார்கள் என கணித்து அந்த பெண்ணை நாசமாக்குவதும் தொடர்கதையாகின்றது கல்லணையில் ஒருவனை கொன்றே விட்டார்கள் ஓரிரு சம்பவம் வெளிதெரிகின்றதே தவிர நிறைய தெரிவதில்லை என்பதுதான் நிஜம், மிரட்டியே காரியம் சாதிக்கும் கும்பல் அதிகபட்டுவிட்டது போதாகுறைக்கு வீடியோ எடுத்தும் மிரட்டுகின்றார்கள் இதெல்லாம் தடுக்க தனி […]

ராதாரவி பாஜக பக்கம் வந்திருப்பதுதான் காலத்தின் கோலம்

கடவுளே இல்லை என அழிச்சாட்டியம் செய்து, பெரியார் எனும் மந்திரவாதி ஏற்றிவிட உச்சி மரத்தில் ஆட்டம் போட்ட எம்.ஆர் ராதாவின் மகன் ராதாரவி பாஜக பக்கம் வந்திருப்பதுதான் காலத்தின் கோலம் ராமாயணம் கீமாயணம் என நாடகமெல்லாம் நடத்திய ராதாவின் மகன் ராமர் கட்சிக்கு வந்திருப்பது என்பது ஆத்திகத்தின் வெற்றி, நாத்திகத்தின் படுதோல்வி.. தந்தை செய்தது எல்லாம் தவறு என ஒப்புகொண்டு வந்திருக்கும் ராதாரவிக்கு வாழ்த்துக்கள், இன்னொரு நாளில் உதயநிதியும் ஓடி வரலாம்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications