பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

என்னமோ போடா…

டேய் மாதவா.. எவ்வளவு சிக்கல் வந்தாலும் பிரிச்சி மேய்ஞ்சிரியேடா..ஒரு பயலாலும் உன்ன ஒண்ணுமே பண்ணமுடியலியேடா.. எப்படிடா உன்னால மட்டும் முடியுது? என்னமோ போடா…

அசுரர்கள் பேய்களா

அசுரர்கள் பேய்களா என்றால் அது கொஞ்சம் விவாதத்துக்குட்படது எல்லா மதங்களிமே நன்மை தீமை என மட்டுமே போதிக்கும், பைபிளில் கடவுள் நல்லவர் சாத்தான் மோசமானவன் யூத மதத்திலும் அதன் தாக்கத்தில் உருவான எல்லா மதத்திலும் அதுதான் பிரதானம் இந்து மதம் இதில் கொஞ்சம் வித்தியாசமானது அதன் கடவுள் நன்மைக்கும் தீமைக்கும் அப்பாற்பட்டவராய் இருப்பார். நல்லவரோ தீயவரோ எல்லோரும் அவருக்கு ஒன்றே, யார் என்ன வரம் வேண்டும் கேட்டாலும் அவர்கள் பக்திக்கு பதிலாக தருவார் பின் அக்கிரமம் தலைவிரித்தாடும் […]

அதன் மூலம் சுவாரஸ்யமானது

நேற்று ஹாலோவின் டே என உலகெல்லாம் கொண்டாடினார்கள் குறிப்பாக ஐரோப்பாவும் அவர்களின் குடியேற்றமான அமெரிக்கா கனடாவும் கொண்டாடி தீர்த்தது அதன் மூலம் சுவாரஸ்யமானது அதாவது உலகம் மனிதர்களால் மட்டுமல்ல பேய்களாலும் நிரம்பியது என்பது எக்காலமும் உள்ள நம்பிக்கை, மனிதன் இருக்குமிடமெல்லாம் அதுவும் இருக்கும் சீனர்கள் அதை வெடிவெடித்தும் இன்னும் பல வகைகளில் தாஜா செய்தும் விரட்டி பண்டிகை கொண்டாடுவார்கள், கிறிஸ்தவ காலடிபடாத சீனாவில் அது வழக்கில் உண்டு ஐரோப்பாவில் அக்கால பேய்கள் இந்த ஐப்பசிமாதம் வந்து பயமுறுத்துமாம்,அது […]

கண்டம் விட்டு கண்டம் பாயும் நீர்மூழ்கி ஏவுகனை

ரஷ்யா நேற்று அதிரடியான காரியத்தை செய்திருக்கின்றது, அதாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் நீர்மூழ்கி ஏவுகனையினை பரிசோதித்திருக்கின்றதுஇது கொஞ்சம் அல்ல நிறையவே ஆபத்தான ஆயுதம்பொதுவாக ஏவுகனை என்பது தரை, கப்பல் அல்லது விமானத்தில் இருந்து ஏவபடும். விமானத்தை நொறுக்கினால் அல்லது கப்பல் மற்றும் தரையில் அது ஏவபடும் இடத்தை நொறுக்கினால் முடிந்தது விஷயம்ஆனால் நீர்மூழ்கியில் இருந்து ஏவினால் கொஞ்சம் சிக்கல், கடல் அவ்வளவு பெரும் பாதுகாப்புசில நாடுகளிடம் நீர்மூழ்கியில் இருந்து ஏவபடும் டார்பிடோ ரக ஏவுகனைகள் உண்டு […]

பாகவதர்

1940களுக்கும் 1955களுக்கும் இடைபட்ட காலங்களை ஆட்டிவைத்தவர் அவர், அன்றே அரசியலில் சினிமா கலந்திருக்குமானால் ராஜாஜி,காமராஜர் என்ற தலைவர்கள் எல்லாம் காணாமலே போயிருப்பார்கள். சுமார் 20 ஆண்டு காலம் தமிழகத்தை கட்டிவைத்தவர் எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ் சினிமாவின் முதல் வசூல் மன்னன். நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை. பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர். பிண்ணணி பாடலே படத்திற்கு பிரதானம் […]

ஹாலோவின் டே..

உலகின் பண்டைய இனங்கள் எல்லாம் பேய்களுக்கு அஞ்சி இருக்கின்றன, அதற்காக பல சடங்குகளை செய்திருக்கின்றன‌ அதன் தொடர்ச்சி இந்த விஞ்ஞான காலத்திலும் உண்டு இந்துக்கள் சில மாதங்கள் ஒரு மாதிரி என குறிப்பிட்டு வைத்திருக்கின்றார்கள், சீனர்களுக்கு செப்டம்பர் மாதம் நரகம் திறந்து பேய்கள் வெளிவரும் மாதம் அதை வெடிபோட்டு விரட்டுவார்கள் உலக பொதுவான பேய் நம்பிக்கை இப்படி உண்டு, அவ்வகையில் ஐரோப்பாவிலும் இருந்தது, கிறிஸ்துவத்திற்கு முன்னதான ஐரோப்ப்பா காட்டுமிராண்டிதனமாகவே இருந்தது அங்கும் ஏகபட்ட இனங்கள் உண்டு, இதில் […]

பெரும் மோசமான‌ பின்விளைவுகள கொண்டுவரும்

தேவர் குருபூஜைக்கு அந்த பகுதியில் அழிச்சாட்டியம் அதிகம் என்கின்றார்கள், சாலைகளை மறிப்பது காவல்துறை முன்னால் ஆடுவது இதுபோக ஏக இம்சைகள் இவ்வளவுக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்ட பகுதி ஒரு அரசியல்வாதி இதை கண்டிப்பார் என நினைக்கமுடியும்? முதல்வர் , துணைமுதல்வர் எதிர்கட்சி தலைவர் என எல்லோரும் ஒருசேர மண்டியிடும் இடத்தில் என்ன நடவடிக்கை இருக்க முடியும்? வாக்குகளுக்காக செய்யபடும் அனுசரிப்பு பெரும் மோசமான‌ பின்விளைவுகள கொண்டுவரும்.

முள்ளை முள்ளால் எடு

முள்ளை முள்ளால் எடு, பயங்கர விஷயங்களை பயங்கர ஆயுதத்தால் முடி என்பது பழமொழி அப்படி பொய்யினை பொய்யால் முறியடி என அங்கிள் சைமனை நோக்கி பாய்ந்துவிட்டார்கள். அவரின் சொத்துமதிப்பு என பெரும் பட்டியல் வாசிக்கபடுகின்றது அது முழுக்க உண்மை இல்லை எனினும் பாதி உண்மை இருப்பதால் அங்கிள் மவுனம், ஆனாலும் அவர்களின் அடிப்பொடிகள் ஆதாரம் உண்டா என குதிக்கின்றன‌ இதற்காகவே காத்திருந்த தமிழகம் “ஏண்டா, எவ்வளவு பேசினீர்கள் நீங்களும் உங்கள் நொண்ணணும் ஆதாரம் உண்டா? அதை கொடுத்துவிட்டு […]

ஹேக்கிங் நடந்ததா

கூடங்குள அணுவுலையில் சைபர் அட்டாக் எனப்படும் ஹேக்கிங் நடந்ததா என பலத்த சர்ச்சை இப்பொழுதுதான் கிளம்புகின்றது நாம் இதை நேற்றே சொல்லியிருந்தோம் , அதை தொடர்ந்து பல கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பினார்கள். முக ஸ்டாலினும் அதுபற்றி கேட்டிருந்தார் அதுவரை அமைதிகாத்த அணுமின் நிலையம் நேற்று மெதுவாக அணுவுலைக்கு வெளியில் இருந்த வாட்ச்மேன் வைத்திருந்த கருப்பு வெள்ளை கம்பியூட்டரில் வைரஸ் புகுந்தது அவ்வளவுதான் என்ற ரீதியில் முடித்துவிட்டார்கள் நிச்சயம் அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக விளக்கமாட்டார்கள், உண்மையினை சொல்லவும் […]

சர்தார் வல்லபாய் பட்டேல்

சுதந்திர இந்தியாவில் மறக்கமுடியாத மனிதர் அவர், இன்று இந்தியா சுல்தான்கள், மன்னர்கள், நவாப்கள் இம்சையின்றி ஜனநாயக நாடாக இந்தியா இருக்க அவர்தான் முதல் காரணம், இந்தியாவின் பெரும் அடையாளம் அவர். சர்தார் வல்லபாய் பட்டேல் காந்தி பிறந்த குஜராத்தில்தான் அவரும் பிறந்தார். மிக கடினமான சூழலில் வளர்ந்தார். இரவல் சட்டபுத்தகங்களிலே வழக்கறிஞனர் ஆன உழைப்பாளி அவர். காந்திக்கும் அவருக்கும் முதலில் பொருந்தவில்லை. அதற்கான சந்தர்ப்பம் ஒரு வறட்சியின் உருவில் வந்தது. குஜராத்தின் “கேடா” மாவட்டத்தில் கடும் வறட்சி, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications