பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ராகுலும் அதற்கு தப்பவில்லை

எதையுமே தாமதமாக புரிந்து கொள்வது காங்கிரசின் பலவீனங்களில் ஒன்று, ராகுலும் அதற்கு தப்பவில்லை காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் பாகிஸ்தான் அதில் தலையிட உரிமை இல்லை எனவும் , காஷ்மீர் கலவரத்துக்கு பாகிஸ்தானே காரணம் எனவும் சொல்லியிருக்கின்றார் எல்லோரும் ஒப்புகொள்ளும் விஷயத்தை கடைசியாக ஒப்புகொள்வது காங்கிரஸ் கொள்கை போல‌ நம்மை சங்கி என்பார்கள் சில அங்கி மற்றும் மங்கி கோஷ்டிகள் காங்கிரஸ் பெருந்தலைகளான சசிதரூரும், ஜெய்ராம் ரமேஷும் சில நல்லவிஷயங்களை சொல்கின்றார்கள் அதாவது மோடி சில […]

இருவரும் ஒரே வீட்டில் இருக்கும்பொழுது எதற்கு கடிதம்?

இந்த ஷோபா சந்திரசேகர் என்பவர் தன் விஜய்க்கு கடிதம் எழுதியிருக்கின்றாராம் இருவரும் ஒரே வீட்டில் இருக்கும்பொழுது எதற்கு கடிதம்? இதை எல்லாம் பார்க்கும் பொழுது கலைஞர் கருணாநிதியும் தயாளு அம்மாளும் வணங்கதக்க தெய்வங்கள் அதில் அம்மணி என்ன எழுதியிருக்கின்றது என்றால் “எம்கே தியாகராஜ பாகவதர், ராமசந்திரன், ரஜினி வரிசையில் உன்னை கொண்டாட உலகம் காத்திருக்கின்றது எம்பாவாய்..” என எழுதியிருகின்றது அம்மணி சூப்பர் ஸ்டார் வரிசை என சொன்னாலும் அந்த முன்சொன்ன மூவருக்கும் இன்னொரு பரிதாப வரிசையும் உண்டு […]

சூப்பர் மூன்

தமிழனுக்கு எப்பொழுதும் தனி கவலை 1960களில் திமுக தொடங்கி வைத்த கவலை அது புரட்சி நடிகன் என்றும் முக முத்து பாசறை என்றும் தொடங்கி தமிழகத்தை திசை திருப்பினார்கள் அது புரட்சி தலைவன் யார்? தலைவி யார்? என்பது வரை சென்றது திமுக தலமையும் சளைக்காமல் இதோ கலைஞானி, இதோ புரட்சி கலைஞர், இதோ சூப்பர் ஸ்டார் , இதோ இசைஞானி என ஆளாளுக்கு பட்டம் கொடுத்து வளர்த்தது காவேரி தந்த கலைசெல்வி எனும் அடைமொழி ஜெயாவுக்கு […]

இருவரும் சொல்லி வைத்து ஒரே நேரத்தில் இயக்கிவிட்டார்கள்

முதல் முறையாக ரஷ்யாவின் எந்திரமனிதன் விண்ணில் சர்வதேச மையத்தில் இறங்கியது முதல்முறையாக வெளிநாடு செல்கின்றார் எடப்பாடி பழனிச்சாமி ஆக ரஷ்ய தொழில்நுட்பபடி மோடியும் ஒரு ரோபோ தயாரித்திருக்கின்றார், இருவரும் சொல்லி வைத்து ஒரே நேரத்தில் இயக்கிவிட்டார்கள்

யார்டா அந்த பிக்பாஸ் கவின்?

யார்டா அந்த பிக்பாஸ் கவின்? அவனை பற்றிய பத்திரிகை செய்திகளை படித்தால் சனியனை போக்ஸோ சட்டத்திலும் இன்னும் பல சட்டத்திலும் உள்ளே தள்ளவேண்டும் போலிருக்கின்றது நடக்கும் காட்சிகளை அவர் பார்ப்பாரா என தெரியவில்லை பார்த்துவிட்டால் ஆத்திரத்தில் உள்ளே சென்று “யார்டா நீ?,இதெல்லாம் என் ஏரியா, உள்ளே வராதே..” என சொல்லி அவனை தூக்கி போட்டுமிதிக்கவும் வாய்ப்பு இருக்கின்றது ஆம் சிம்புதான் அந்த அவர் அவரிடம் இவனை பற்றி எடுத்து சொன்னால் தீர்ந்தது விஷயம்

விருதுநகரிலும் புரட்சி பெண்கள்

கன்னியாகுமரியினை தொடர்ந்து விருதுநகரிலும் புரட்சி பெண்கள் பெரும் காரியம் செய்திருக்கின்றன‌ அந்த கயவன் மாவட்ட கலெக்டர் அலுவலக காரிய தரிசி எனவும் தன்னால் யாருக்கும் வேலைவாங்கி தரமுடியுமென்று சில இளைஞர்களிடம் பணமும் சில இளம்பெண்களிடம் பாலியல் சேட்டையும் செய்திருக்கின்றான் பல பெண்கள் அதை வெளிசொல்லாமல் அழுதிருக்கின்றார்கள், ஒரு பெண்ணுக்கு அவனை சும்மா விட கூடாது என வன்மம் வந்திருக்கின்றது அவள் தோழி மூலம் அவனிடம் பழக சொல்லியிருகின்றாள், அவனும் கலெக்டர் வேலையே என்னால் வாங்கிதரமுடியும் என அதே […]

பெரும் அறிவு ஜீவிகள்

இந்த யூடியூப் சேனல் பக்கம் சென்றால் பெரும் அறிவு ஜீவிகள் எல்லாம் அங்குதான் இருக்கின்றார்கள் இந்தியாவிடம் எஸ் 400 சிஸ்டம் உள்ளதாம், அதை பார்த்து உலகமே மிரள்கின்றதாம், அலறுகின்றதாம் குறிப்பாக சீனா நூடுல்ஸ் கூட சாப்பிடாமல் அஞ்சி இந்தியா நோக்கி கதறுகின்றதாம் இந்த பைத்தியகார வீடியோவினை பல்லாயிரம் பேர் பார்த்து கைதட்டி இருகின்றார்கள் என்பதுதான் சோகம் எஸ் 400 சிஸ்டம் ரஷ்ய தயாரிப்பு, அதை என்றோ வாங்கிவிட்டது சீனா பின் துருக்கி உட்பட பல நாடுகளில் உண்டு, […]

அந்த மர்மத்தை முதலில் சொல்லட்டும்

பழனிச்சாமியின் வெளிநாட்டுப் பயணத்தின் மர்மங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்: முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் இவரும் அடிக்கடி வெளிநாடு செல்வார் அந்த மர்மத்தை முதலில் சொல்லட்டும் பார்க்கலாம் பழனிச்சாமி ஒரு முதல்வர், அதுவும் பகிரங்கமாக சொல்லிவிட்டு செல்கின்றார் இவர் என்றாவது தன் பயணத்தை பகிரங்கமாக சொன்னாரா இல்லை சென்றுவந்தபின்புதான் “டிராவல் ரிப்போர்ட்” கொடுத்தாரா? பிரிட்டன் தூதர் இவரை சென்னையில் சந்திப்பதையும் இவர் அடிக்கடி லண்டன் செல்வதையும் கொண்ட மர்மத்தை இவரால் விளக்கமுடியுமா?

அங்கு உள்ளே விடுவார்களா?

அவர் என்ன ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கா காஷ்மீர் பற்றி பேச‌ போகின்றார்,? அங்கு உள்ளே விடுவார்களா? இல்லை போர்குற்ற விசாரணை என சென்று ராஜபக்சேவினை உள்ளே தள்ள போகின்றாரா? அது உருப்படியான அவை ஒன்றுமில்லை, காசு கொடுத்தால் பேசிவிட்டு வரும் கிளப் அது இந்த ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா பரதநாட்டியம் ஆடினார் அல்லவா? அதை தொடர்ந்து அருமையான காட்சி நமக்கு அரங்கேற இருகின்றது

நாட்டின் உபரிபணம்

ரிசர்வ் வங்கியின் உபரி நிதி 1 லட்சத்து 75 ஆயிரம் கோடியினை, ஆம் அதே அந்த தொகைதான் மத்திய அரசு பெற்றிருப்பது விவாதமாகின்றது ரிசர்வ் வங்கியின் உபரிநிதி என்பது அவசர தேவைக்காக கையிருப்பில் வைக்கும் தொகை போர்காலம் இன்னும் பேரிடர் காலத்தில் அதை பயன்படுத்துவார்கள் காங்கிரஸ் அரசு கூட சிலமுறை கோரியது எனினும் இது பெரும் தொகை என்பதால் ஆளாளுக்கு ஆலோசனை எச்சரிக்கை என கிளம்பிவிட்டார்கள் அந்த பணத்தை மோடியோ நிர்மலாவோ எடுத்து கொண்டு ஓடபோவதில்லை, நாட்டுபணம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications