பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பச்ச மண்ணா இருக்கு

ஏதோ விவரமுள்ள புள்ளன்னு நினைச்சா பச்ச மண்ணா இருக்கு அம்மா, ஏற்கனவே ராணுவத்தை குவிக்காமலே கச்சதீவு போய்,காவேரி போய் இன்னும் என்னவெல்லாமோ போய்விட்டது எப்பவோ மெட்ராஸ் ஸ்டெட்டை பிரிச்சி 4 மாநிலம் ஆக்கியாச்சி தெரியுமா? தெரியாதா? ஏற்கனவே இங்கே புதுச்சேரி காரைக்கால் எல்லாம் இருக்கு அங்காவது ராணுவத்தை குவித்து செய்யவேண்டும், இங்கு ராணுவத்தை குவிக்காமலே செய்யலாம் எப்படி இருந்த சோதிமணி இப்படி ஆயிட்டு பாவம்.. ராகுல் சீட் கொடுத்தபுள்ள எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்

கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த

நமக்கு மோடி இருக்காக, அமித்ஷா இருக்காக‌ எல்லாவற்றுக்கும் மேல நம்ம ஆட்சிய காப்பாற்ற முக ஸ்டாலின் இருக்காக, அவுக கொல்லைபுறமா எல்லாம் நம்மள கவுக்கமாட்டாக. நம்ப ஆட்சியே அவராலத்தான் ஓடிட்டு இருக்கு அதனால நம்ம தலைவர் ராமசந்தர் பாடுன விவசாயி.. பாட்டை ஓடவிட்டு நாமெல்லாம் உழைக்கலாம் தாயீ “கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த…”

விஜயலட்சுமி வீடியோ மறுபடியும் சுற்றுகின்றது

அந்த நடிகை விஜயலட்சுமி வீடியோ மறுபடியும் சுற்றுகின்றது அவரை நடிகை விஜயலட்சுமி என்றால் யாருக்கும் தெரியாது, அங்கிள் சைமனால் ஏமாற்றபட்ட நடிகை விஜயலட்சுமி என்றால் எல்லோருக்கும் தெரியும் வீடியோவில் அம்மணி தான் நெல்லை மாவட்ட பூர்வீகம் என்பதும், சைவ பிள்ளைமார் என்றும் சொல்கின்றது அம்மணி தனக்கு எதிரியால் தொல்லை என்றும், ரஜினிகாந்தினை சந்திக்க அவசியம் இருப்பதாகவும் அழுகின்றது ரஜினிக்கும் சைமனுக்கும் ஆகாது என்பதும், விஜயலட்சுமிக்கு சைமனை விட்டால் எதிரியில்லை என்பதும் உலகறிந்தது ஆக தமிழ்வளர்த்த நெல்லையின் சுத்த […]

அறிவு சாதுர்யம் என்பது அதுதான்

இந்த திமுகவினரை நினைத்தால் பரிதாபகமாகத்தான் இருக்கின்றது பராசக்தி கலைஞரின் சொந்த கதையாம், பகுத்தறிவுக்காக பராசக்தி என வேண்டுமென்றே பெயரிட்டாராம், இப்படி எல்லாம் கத்தி திரிகின்றன அந்த கூட்டம் உண்மையில் இது பெரும் திரிபு கடுமையான வரலாற்று புரட்டல் தமிழ்சினிமாவினை எல்லிஸ் ஆர் டங்கன் தொடங்கிவைத்தபின் புராண படங்களே வந்தன, அதன் பின் தியாராஜ பாககதர் போன்றோர் பாடிகொண்டிருந்தனர் புது கதைகள் தேவைபட்டபொழுது சினிமா முதலாளிகள் நாடகங்களை தேடி ஓடினர், நாடக கம்பெனிகள் அப்பொழுது அற்புதமான கதைகளை கொண்டிருந்தன‌ […]

பழனிச்சாமி இதை எப்படி கடக்க போகின்றார்

முன்பெல்லாம் ஜெயா ஆட்சியில் ஒவ்வொரு அம்மாவசையன்றும் அமைச்சர்கள் ஆடிகொண்டிருப்பார்கள், தூங்கவே மாட்டார்கள், நொடிக்கொரு தரம் பி.ஏவிடம் நான் அமைச்சர்தானே? என கேட்டுகொண்டே இருப்பார்கள் அம்மாவாசை முடியும்வரை அவர்களின் குடும்பங்களும் கடும் பதற்றத்தில் உண்ணாமல் உறங்காமல் தவிப்பார்கள் சில அமைச்சர்கள் மருத்துவர் சகிதம் அமர்ந்து நாடிதுடிப்பு உட்பட பரிசோதித்து கொண்டிருப்பார்கள், பிஏ அவர்கள் காதோரம் குனிந்து நீர் இன்னும் அமைச்சர் என சொல்லிகொண்டே இருப்பார்கள் இன்னொருபுறம் கட்சியினர் நாம் அடுத்த அமைச்சர் ஆவோமா? என எதிர்பார்ப்பில் அவர்களும் தூங்காமல் […]

சும்மா கத்திகொண்டிருகின்றது திமுக

திமுகவினர் காஷ்மீருக்காக குதியோ குதி என குதிக்கும் நிலையில் அவர்கள் ஒன்றை மறைக்கின்றார்கள் எதிர்கோஷ்டியும் அதை தோண்டி எடுக்கவில்லை விஷயம் இருக்கின்றது, கலைஞரும் ஷேக் அப்துல்லா பரூக் அப்துல்லாவும் உறவாக இருந்த காலத்தில் திமுக உறுப்பினர்கள் காஷ்மிர் செல்லும் காட்சிகள் உண்டு அப்படி சென்றவர்களில் தா.கிருட்டினனும் ஒருவர். காஷ்மீரத்து மலைசரிவுகளில் அவர் அப்துல்லா குடும்பத்தினருடன் சுற்றிபார்த்த காலங்கள் உண்டு இப்பொழுது அதை எல்லாம் பேசினால் தா.கிருட்டினன் பற்றி பேசவேண்டும், பேசினால் ஏன் கொன்றீர்கள் என பதில் கேள்வி […]

பொதுகட்டங்கள் எப்படி பெரும் ஊழலில் கட்டபடுகின்றன

கோவை ரயில் நிலைய பார்சல் அலுவலக மேற்கூரை சுவர் இடிந்து விபத்து – 2 பேர் உயிரிழப்பு விமான நிலையம், பேருந்து நிலையங்களை தொடர்ந்து ரயில் நிலையமும் உயிர்கொல்லியாக மாறியாயிற்று பொதுகட்டங்கள் எப்படி பெரும் ஊழலில் கட்டபடுகின்றன என்பதற்கான அடையாளங்கள் இவை..

இந்தியாவிற்கு சுதந்திரம் நெருங்க இந்த நாளிலே தான் அச்சாரம் இடபட்டது

இந்தியாவினை வெள்ளையன் ஆக்கிரமிக்க தொடங்கியதிலிருந்தே எதிர்ப்பு கிளம்பிகொண்டே தான் இருந்தது, அது சிப்பாய் புரட்சி, வேலூர் கலகம் , பகத்சிங் காலம், சென்பகராமன் காலம் என பல இருந்தாலும் பெரும் முன்னேற்றமில்லை காரணம் அன்றைய 40 கோடி மக்களுக்கும் ஒரே தலைவர் இல்லை, பஞ்சாப் முதல் குமரி வரை, பலுசிஸ்தானில் இருந்து டாக்கா வரை பரந்திருந்த இந்த பெரும் நாட்டிற்கு ஒன்றுபட்ட தலைவர் இல்லை, ஒவ்வொரு மூலையிலும் ஒரு குரல் கேட்கும் எளிதாக அடக்கினான் வெள்ளையன், இன்னொன்று […]

இந்திய தூதரை பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றிவிட்டது அந்நாட்டு அரசு

காஷ்மீர் விவகாரத்தை அடுத்து இந்திய தூதரை பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றிவிட்டது அந்நாட்டு அரசு, அதாவது இந்தியாவோடு உறவினை குறைக்கின்றார்களாம் மேற்கொண்டு வியாபார ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைத்தாயிற்று இதற்கும் ஒருபடி மேல் சென்று பாகிஸ்தான் தன் வான் எல்லைகள் மேல் இந்தியா விமானங்கள் பறக்கமுடியாதபடி தடை செய்துவிட்டது இந்தியா மெதுவாக புன்னகைத்து “சரி நமக்குள் என்று உறவு வலுவாக இருந்தது? எந்நாளும் நமக்குள் சண்டைதானே சகோதரா என் தூதர் இங்கு வந்துவிட்டால் உங்கள் தூதர் இங்கு எதற்கு? அவர் […]

அதுதான் மாநில சுயாட்சி

மாநில சுயாட்சி பறிக்கப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது – மு.க.ஸ்டாலின் எப்பொழுது முழு மாநில சுயாட்சி இங்கு இருந்தது? இல்லாத ஒன்றை எப்படி பறிப்பார்கள்? இந்த மாநில சுயாட்சி என்றால் என்ன? காங்கிரஸ் ஆதரவில் தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்தபொழுது அதை அமைச்சரவையில் சேர்க்காமல் அதே நேரம் டெல்லி மத்திய காங்கிரஸ் அரசில் திமுக பசையான பதவிகளை வாங்கிகொண்டு அமர்ந்திருந்தத‌ல்லவா? அதுதான் மாநில சுயாட்சி

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications