அட்ட வீரட்டானத் தலங்கள் 5
திருவிற்குடி – ஏலவார் குழலி சமேத ஜலந்தரவத மூர்த்தி அட்ட வீராட்டன தலங்களில் ஐந்தாம் தலம் திருவிற்குடி ஆலயம், இது நாகப்பட்டினம் அருகே அமைந்துள்ளது. தேவாரம் பாடப்பெற்ற மிக மிகப் பழமையான ஆலயம் இது. சம்பந்தர் இப்படி முதல் பாடலைத் தொடங்கி ஒரு பதிகமே பாடினார். “வடிகொள் மேனியர் வானமா மதியினர் நதியினர் மதுவார்ந்தகடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர் உடைபுலி யதளார்ப்பர்விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை விற்குடி வீரட்டம்அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை அருவினை யடையாவே.” அப்பர் […]