தேவி மஹாமித்யம் : 06 / 13 – தேவீ தூத ஸம்வாதம் (தூதனுடன் உரையாடல்)
“மஹாஸரஸ்வதீ தியானம்” மணி, சூலம், கலப்பை, சங்கம், உலக்கை, சக்கரம், வில் அம்பு ஆகியவற்றைத் தனது தாமரைக் கைகளில் தரிப்பவளும், மேகத்திடை விளங்கும் குளிர்ந்த சந்திரனைப் போன்ற பிரபையுடன் பிரகாசிப்பவளும், கௌரியின் தேகத்திலுதித்தவளும், மூவுலகிற்கும் ஆதாரமாகியவளும், அபூர்வ வடிவினளும், சும்பன் முதலிய அசுரர்களை நாசஞ் செய்தவளும் ஆகிய மஹா ஸரஸ்வதியைத் தியானிக்கின்றேன். முன்னொருகால் சும்பன், நிசும்பன் என்ற அசுரர்களால் இந்திரனுடைய மூவுலக ஆட்சியும் யஜ்ஞபாகங்களும் பலத்தாலும் கொழுப்பாலும் அபகரிக்கப்பட்டன. சூரியன், சந்திரன், குபேரன், யமன், வருணன் முதலியோருடைய […]