பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திருவிளையாடல் புராணம் 40 : குலபூஷணனுக்கு பொற்கிழி தந்த படலம்.

திருவிளையாடல் புராணம் 40 : குலபூஷணனுக்கு பொற்கிழி தந்த படலம். அப்போது பாண்டிய நாட்டை குலபூஷண பாண்டியன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவன் மாபெரும் சிவபக்தன், சிவனைப் பாண்டிய தேசத்தின் மன்னராக முன்னிறுத்தி தான் ஒரு சேவகனாக நின்று பாண்டிய நாட்டை திறம்பட ஆட்சி செய்து வந்தான். பாண்டிய நாடு வளம் கொழித்தது. பெருகி வரும் வைகையும், அது கொடுத்த பெரும் விளைச்சலும் எல்லா வகை நிலத்தின் செல்வமும் கொடுத்தன. வைகை தாமிரபரணியின் பெருக்கால் நெல் உள்பட […]

திருவிளையாடல் புராணம் 39 : மாய பசுவினை வதைத்த படலம்.

திருவிளையாடல் 39 : மாய பசுவினை வதைத்த படலம். பாண்டிய தேசத்தில் சைவத்தை ஒழித்து சமணத்தை நிலைநாட்டியே தீரவேண்டும், சைவம் கொஞ்சமும் அடையாளமின்றி அழியவேண்டும் என மிகுந்த ஆவேசத்தை மனதில் கொண்ட சமணர்கள் காஞ்சிபக்கம் இருந்து மீண்டும் மீண்டும் பாண்டியநாட்டுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அந்த முயற்சியில்தான் ஒருமுறை மாய யானை, இன்னொருமுறை நாகம் என ஏவி விட்டார்கள். அவர்களின் இலக்கு பாண்டிய தேசத்தை மன்னன் இல்லாத் தேசமாக திண்டாடவிட்டு அந்தக் குழப்பத்தில் மக்களைக் குழப்பலாம் புதிய […]

திருவிளையாடல் புராணம் 38 : நக்கீரனுக்கு தமிழ் இலக்கணம் உபதேசித்த படலம்.

திருவிளையாடல் புராணம் 38 : நக்கீரனுக்கு தமிழ் இலக்கணம் உபதேசித்த படலம். நக்கீரனைக் கொண்டு சிவபெருமான் செய்த திருவிளையாடல் மூன்று கட்டமாக வருகின்றது. முதலில், தருமிக்காக அவனுடன் வாதிட்டு அதன் முடிவில் அவரைப் பொற்றாமைரைக் குளத்தில் தள்ளியது. இரண்டாவது, பொற்றாமரைக் குளத்தில் இருந்து அவரை மீட்டருளியது. மூன்றாவது, அவருக்கு பெரும் இலக்கண ஞானம், தமிழ் அறிவு கொடுத்தது. அதுதான் இந்தத் திருவிளையாடல். நக்கீரனைச் சிவபெருமான் சோதித்து பின் ஆச்சரியமாகக் காத்து மீட்டபின் வழக்கம் போல அவர் தமிழசங்கத்தில் […]

திருவிளையாடல் புராணம் 37 : மாபாதகம் போக்கிய புறந்தொட்டித் தீர்த்தம்.

திருவிளையாடல் 37 : மாபாதகம் போக்கிய புறந்தொட்டித் தீர்த்தம். அன்றைய அவந்தி தேசத்தில் ஒரு அந்தணத் தம்பதியர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த அந்தணன் வேத சாஸ்திரங்களில் சிறந்தவன் பெரும் ஞானமும் வேத அறிவும் கொண்டவன். அவன் தர்மவான் அறத்துக்கு உட்பட்ட வாழ்க்கையினை அதுவும் வேதம் ஓதுபவன் வாழவேண்டிய கட்டுப்பாடான வாழ்க்கையினைத் தெய்வத்துக்கு அஞ்சி மிக சரியாக வாழ்ந்து வந்தான். அவந்தி என்றால் இன்றைய மத்திய பிரதேச பக்கமுள்ள நாடாக இருந்தது. அவன் மனைவி பெரும் அழகி. நல்லபடியாக […]

திருவிளையாடல் புராணம் 36 : அரவம் கொன்ற படலம்.

திருவிளையாடல் புராணம் 36 : அரவம் கொன்ற படலம். அக்காலத்தில் குலோத்துங்கனின் மகன் அனந்த குணபாண்டியன் மதுரையினைச் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவனும் பாண்டிய வம்சத்தவனாகையால் சந்திரகுல வழமைப்படி மிகப்பெரிய சிவபக்தனாய் இருந்து மக்களுக்கும் வழிகாட்டி ஒரு அடியார்போல் வாழ்ந்து வந்தான். “மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி” என்பதால் நாட்டில் மக்களும் சிவபக்தியில் மிகுந்த ஈடுபாடோடு இருந்தார்கள். நல்ல பக்திமுறையும், முறைநெறி வாழ்வும் கொண்ட தேசம் எப்போதும் பெரும் வாழ்வு வாழும். அப்படிப் பாண்டியநாடும் […]

திருவிளையாடல் புராணம் 35 : ஊமை, சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்.

திருவிளையாடல் 35 : ஊமை, சங்கத்தார் கலகம் தீர்த்த படலம். அப்போது மதுரையினை ஆண்ட வரகுண பாண்டியனுக்கு ஒரு ஆசை வந்தது, அது பெரும் ஆசையானது. அதாவது, வடமொழியில் முருகப்பெருமான் அருளிய “கெளமார வ்யாகரணம்” நூல் உண்டு. அப்படி ஒன்று தமிழுக்கும் வேண்டும் என விரும்பினான் மன்னன். ஆலவாய் நாதனிடம் அதுபற்றி வேண்ட செப்புத் தகட்டில் எழுதப்பட்ட சூத்திரத்தை சிவன் கொடுத்து மறைந்தார். இதற்கு யாரை வைத்து பொருள் எழுதுவது, சிறந்த புலவர் யார் என்பதில் குழப்பம் […]

திருவிளையாடல் புராணம் 34 : கீரனுக்கு கைதந்து சிவன் கரையேற்றிய படலம்.

திருவிளையாடல் 34 : கீரனுக்கு கைதந்து சிவன் கரையேற்றிய படலம். சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து கீரனை எரிக்க அந்த வெம்மை தாளாமல் நக்கீரர் பொற்றாமரைக் குளத்தில் விழுந்தார் என்பதோடு அந்தத் திருவிளையாடலின் அதாவது தருகிக்குப் பொற்கிழி கொடுத்த படலம் முடியும். அதன் தொடர்ச்சித்தான் இந்தத் திருவிளையாடல். பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்த கீரன் தவித்துப் போய்க்கிடந்தார். அவரால் வெளிவரமுடியவில்லை. குளத்தினைக் கடக்க எழுந்தாலே பெரும் வெப்பம் அவரை வாட்டத் தொடங்கிற்று, இதனால் நீரிலே அமிழ்ந்து கிடந்தார், அவருக்குத் […]

திருவிளையாடல் புராணம் 33 : சிவன் வேடனாக வந்த படலம்

திருவிளையாடல் புராணம் 33 : சிவன் வேடனாக வந்த படலம். அந்நாட்களில் மதுரையினை விக்கிரமபாண்டியன் ஆட்சி செய்துகொண்டிருந்தான். சீரும் சிறப்புமாக மதுரையினை அவன் சைவ பூமியாக சிவனின் பிரதிநிதியாக ஆட்சி செய்து கொண்டிருந்தான். சிவன் சாட்சியாக அவன் ஆட்சி சிறந்திருந்ததால் எல்லாத் தேவதைகளும் நவக்கிரகங்களும் அங்கு எல்லா நலன்களையும் அருளின‌. மக்கள் நல்ல மனத்தெளிவும் நிரம்ப ஆரோக்கியமும் பெற்றிருந்தார்கள். மக்கள் சரியாக இருக்கும் நாடு எப்போதும் பெரும் வாழ்வு வாழும். பழக்கிய யானைகளைக் கட்டுபடுத்துவது எளிது என்பது […]

திருவிளையாடல் புராணம் 32 : கால் மாற்றி ஆடிய படலம்.

திருவிளையாடல் 32 : கால் மாற்றி ஆடிய படலம். அது மதுரையினை விக்ரம பாண்டியனின் மகன் இராஜசேகர பாண்டியன் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். ஆட்சி, போர், நிர்வாகம் தாண்டி நுணுக்கமான‌ கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த அவன் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவன் சிவபக்தன். முழு அடியாரான சிவபக்தன் ஆலவாய் நாதனை மிகுந்து போற்றி நின்ற பூரண பக்தன். அப்படியானவன் கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். அந்தக் கலைகளை அவன் போற்றி நிற்க காரணம் சிவனை […]

திருவிளையாடல் புராணம் 31 : கணையில் பெயர் பொறித்த படலம்.

திருவிளையாடல் புராணம் 31 : கணையில் பெயர் பொறித்த படலம். வங்கி சேகரன் மதுரையில் கோட்டைக்கட்டி, சிவனின் நாகம் காட்டிய எல்லைப்படி கோட்டைக்கட்டி பெருவாழ்வு வாழ்ந்தான். ஒரு மன்னன் பெரும் செல்வத்தோடு வாழும் போது எதிரிகள் பெருகுவது இயல்பு. அப்படி பாண்டியனுக்குச் சோழன் விக்ரமன் என்பவன் எழுந்தான். அவனுக்கு மதுரையின் பெரும் செல்வத்தைக் கொள்ளையிட்டுச் செல்வம் கொழிக்கும் நாட்டில் தன் ஆட்சியினை நிறுவும் ஆசை எழுந்தது‌. ஊழிக்காலம் முடிந்து மானுட இனம் புதிதாக எல்லாம் உருவாக்கிய காலத்திலும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications