பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆறுமுக நாவலர்

ஓலைசுவடியில் இருந்த தமிழை அச்சுக்கு கொண்டுவந்தவர் உ.வே சாமிநாதய்யர் என்றாலும் அதற்கு சில முன்னோடிகள் இருந்தார்கள் அதற்கு காரணமும் இருந்தது தமிழகமும் இலங்கையும் இரட்டை சகோதரர்கள் என்றாலும், மூவேந்தர்களுக்கும் தென்னிலங்கை வட இலங்கை மன்னர்களுக்கும் மண உறவுகள் இருந்தன என்றாலும், பாண்டிய சிங்கள தொடர்ச்சியாக நாயக்க சிங்கள தொடர்புகள் இருந்தன என்றாலும் ஒரு கட்டத்தில் அந்த தொடர்பு அறுந்தது 17ம் நூற்றாண்டின் சில அரசியல் சூழலும் மேவேந்தர் கால தமிழக கப்பல்படை இல்லாததும் அதற்கு காரணம் அந்த […]

அபிராமி அந்தாதி : 62

அபிராமி அந்தாதி : 62 “தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மதவெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன், மெய் அடையக்கொங்கைக் குரும்பைக் குறியிட்டநாயகி கோகனகச்செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே” இந்த பாடலை புரிந்து கொள்ளுமுன் சிவபெருமான் செய்த முக்கிய வதங்களையும் அவற்றின் ஆலயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் இப்பாடல் எளிதாக பிரியும் சிவபெருமானின் திருவிளையாடல்களில் வீரம் காட்டிய அந்த சம்பவங்கள் வீராட்டானம் என அழைக்கபடும் சிவபெருமான் செய்த சம்ஹாரங்களில் முக்கியமானவை எட்டு, […]

கந்தர் அனுபூதி : 05

கந்தர் அனுபூதி : 05 “மக மாயை களைந்திட வல்ல பிரான்முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனேஅகம் மாடை மடந்தையர் என்ற‌ அயரும்செகமாயையுள் நின்று தயங்குவதே” இந்த பாடலின் வரியினையும் பொருளையும் ஒவ்வொன்றாக காணலாம் “மக மாயை களைந்திட வல்ல பிரான்” என்பது முதல் வரி, மகம் என்றால் மிகபெரிய மிக அதிகாரமும் வல்லமையும் கொண்ட வெளிப்பாடானது என பொருள், அப்படிபட்ட பெரிய மாயை என பொருள், களைதல் என்றால் நீக்குதல். அப்படியான பெரிய மாயைகளையும் நீக்க வல்லவரான […]

பாண்டித்துரை தேவர்

ச‌ங்கம் வைத்து தமிழ்வளர்த்த நகரம் மதுரை, அதுவும் ஞானமுனி அகத்தியனும் ஞானகுரு முருகனும் தெய்வீக கவியான அவ்வை மாதரசியும் இணைந்து தமிழ் வளர்த்த இடம் மதுரை கூடவே அன்றைய மதிப்பிலே லட்ச ரூபாய் கொடுத்தார் அந்த ஆலவாய் நாதனின் ஆலயம்தான் தமிழ் சபையாயிற்று, சிவன் உருவாக்கிய தமிழ்மொழியின் சங்கம் அந்த சிவாலயத்தில்தான் தொடங்கிற்று பின்னாளில் மதுரைக்கான அம்மனான மீனாட்சி அம்மன் கொண்டாடபட்டு அந்த ஆலயம் மீனாட்சி அம்மன் ஆலயம் என உருவானானும் தமிழ்சங்கம் அங்குதான் நடந்தது சிவன் […]

நாச்சியார் திருமொழி : 27

நீரிலே நின்றயர்க் கின்றோம் நீதியல் லாதன செய்தாய்… தோழியுடன் நீராட சென்றாள் ஆண்டாள், இப்பொழுதெல்லாம் கண்ணன் வருவதில்லை, அவள் ஆடையினை திருடுகின்றான் எனும் பழியினை அவன் தவிர்த்துவிட்டான், ஆண்டாளுக்கு அவன் வருவதில்லை என்பது சோகம் என்றாலும் வெளிகாட்டவில்லை எப்பொழுதும் கண்ணன் நினைவாக இருந்தவள் நீராடும் பொழுதும் அவன் நினைவினிலே நீராடினாள், சுற்றி பார்த்து கொண்டே இருந்தாள், கண்ணன் வருவான் என கண்கள் பூக்க பார்த்து கொண்டிருந்தாள், கரையில் இருந்த ஆடைகள் காணமல் போகாதா? அவனை நோக்கி பாடி […]

அபிராமி அந்தாதி : 61

அபிராமி அந்தாதி : 61 “நாயே னையும்இங் ஒருபொருளாக நயந்துவந்துநீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய்நின்னை உள்ளவண்ணம்பேயேன் அறியும் அறிவுதந் தாய்என்ன பேறுபெற்றேன்தாயே மலைமக ளேசெங்கண் மால்திருத் தங்கைச்சியே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து வரும் “நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்துநீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய், நின்னை உள்ளவண்ணம்,பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்தாயே மலைமகளே செங்கண் மால் திரு தங்கச்சியே” அபிராமி பட்டர் மிக இழிவான மானிட‌ பிறவியான தனக்கும் அன்னை தேடி வந்து அருள்பாலிக்கும் […]

கந்தர் அனுபூதி : 04

கந்தர் அனுபூதி : 04 “வளைபட் டகைம் மாதொடு மக்க ளெனுந்தளைபட் டழியத் தகுமோ தகுமோகிளைபட் டெழுசூ உரமுங் கிரியுந்தொளைபட் டுருவத் தொடுவே லவனே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும் “வளைபட்ட கைம் மாதொடு மக்கள் எனும்தளைபட்டு அழியத் தகுமோ தகுமோகிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,தொளைபட்டு உருவத் தொடு வேலவனே” “வளைபட்ட கைம் மாதொடு ” என்பது வளையல் அணிந்த கைகளை உடைய மனைவி எனும் பெண்ணோடு என பொருள்படும், மனைவி எனும் பந்தம் […]

ஜெகதீஷ் சந்திரபோஸ்

இந்தியாவின் ஞான மரபிலும் இந்து ஆன்மீக மரபிலும் கலந்து உலகம் வியக்கும் கருத்துக்களை இந்த நூற்றாண்டில் கொடுத்தவர் பலர் அந்த வரிசையில் இந்து மதத்தில் பொதிருந்திருக்கும் அதிசயங்களை இன்றைய விஞ்ஞானத்தோடு பொருத்தி உலகை அதிசயவைத்தவர் வெகுசிலர் அவர்களில் சர்,சிவி ராமன், சீனிவாச ராமானுஜம் ,ஜெகதீச சந்திரபோஸ், சந்திரசேகர் போன்றோர்கள் மறக்கமுடியா ஞானிகள், இந்துமததத்தில் மூழ்கி விஞ்ஞான முத்தெடுத்தவர்கள் அவர்கள் அந்த ஜெகதீஷ் சந்திரபோஸ் இந்தியா கண்ட அற்புத ஞானி, விஞ்ஞானம் அவரை ஆன்மீக கண்ணோடு நோக்க சொன்னது, […]

டேன் டீ ஒரு பரிதாபமான இனத்தின் பெரும் சோக வரலாறு

டேன் டீ விவகாரம் பெரிதான நிலையில் தமிழகத்தில் எல்லா கட்சிகளும் அமைதி ஆச்சரியமாக கம்யூனிஸ்டுகளும் கம்மியான‌ யூனிஸ்டுகள் கூட அமதி டேன் டீ என்பது ஊட்டி கூடலுர் கோவை அருகே அமைந்திருக்கும் தமிழக அரசின் தேயிலை நிறுவணம், அதன் பின்னணி சுவாரஸ்யமானது 1960களில் இலங்கை அரசு ஒரு குழப்பம் அல்லது தமிழின விரோதம் செய்தது, இந்த துரோகத்துக்கு இலங்கை ஈழத்தவர்களும் துணைபோயினர், வரலாற்றின் கசப்பான காலம் அது 18ம் நூற்றாண்டில் இலங்கைக்கு தேயிலை மிக பொருத்தமான தொழில் […]

அபிராமி அந்தாதி : 60

அபிராமி அந்தாதி : 60 “பாலினும் சொல்இனி யாய்பனி மாமலர்ப் பாதம்வைக்கமாலினும் தேவர் வணங்கநின் றோன்கொன்றை வார்சடையின்மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும்மெய்ப் பீடம்ஒருநாலினும் சாலநன் றோஅடி யேன்முடை நாய்த்தலையே” இப்பாடல் கீழ்கண்டவாரு பிரிந்து பொருள் தரும் “பாலினும் சொல் இனியாய் பனி மா மலர்ப் பாதம் வைக்கமாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒருநாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே” பட்டர் அன்னையின் அன்பில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications