பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரோமன் திருச்சபைக்கு அவ்வப்போது வரும் சோதனைகள்

இந்த ரோமன் திருச்சபைக்கு அவ்வப்போது சோதனைகள் வரும், ரோமர்கள், யூதர்கள், இஸ்லாமியர், மார்ட்டின் லுத்தர், நெப்போலியன், விஞ்ஞானிகள் கம்யூனிஸ்டுகள் என அதற்கு சோதனைகள் காலம் காலமாய் வரும் இப்பொழுது விஷயம் பேய் வடிவில் வந்திருக்கின்றது பைபிளிலே இயேசு பேயினை விரட்டினார் என இருப்பதால் பேய் இருப்பதை அச்சபை நம்புகின்றது, இப்பொழுதெல்லாம் பேய் ஓட்ட தெரியாமல் பல பாதிரிகள் இருக்கின்றார்களாம், அவர்களுக்கான பயிற்சி நடைபெறும் என வாடிகன் அறிவித்தது மிகாவேல் முதல் அந்தோணியார் வரை ஏகபட்ட புனிதர்களின் பெயரில் […]

கன்னடத்தில் அச்சத்தின் உச்சியில் பாஜக இருப்பது தெரிகின்றது

தொண்டர்கள் மக்களை கை கால்களை கட்டி தூக்கி வந்து வாக்களிக்க வைக்க வேண்டும் என ஆவேசமாக பேசியிருக்கின்றார் எடியூரப்பா வாக்களித்தபின் அந்த மக்களை கொல்வதா வேண்டாமா என அன்னார் இன்னும் முடிவு சொல்லவில்லை போகிற போக்கில் இனி கழுத்தில் கத்தி வைத்து வாக்கு வாங்குவார்கள் போல‌ பாஜக ஒரு மாதிரி கட்சிதான், அதற்காக இந்த அளவிற்கு எல்லாம் மிரட்டினால் என்னாகும்? கன்னடத்தில் அச்சத்தின் உச்சியில் பாஜக இருப்பது தெரிகின்றது, கருத்து கணிப்புகளும் சங்கு என்றே சொல்கின்றன‌ ஒருவேளை […]

இன்று தந்தி டிவியில் தைரிய நாயகி, தங்க தலைவி….

இன்று தந்தி டிவியில் தைரிய நாயகி, தங்க தலைவி, தரணிவாழ் மக்களின் தனிபெரும் நாயகி குஷ்பு பேச இருக்கின்றாராம் அகில உலகம் போலவே சங்கமும் அவரின் இடி முழக்க பேச்சை கேட்க ஆர்வமாயிருக்கின்றது தெய்வம் வருவதற்கு முன் பக்தர்கள் காத்திருகும் எதிர்பார்ப்பே தனி அல்லவா? தலைவி பேச வரும்பொழுது சங்கத்திற்கு வேறு என்ன வேலை இருக்கின்றது? இப்பொழுதே டிவிமுன் அமர்ந்தாயிற்று கோடை இடியாக முழங்கபோகின்றார் தலைவி தலைவி தந்தி டிவியில் பேசபோவதால் அந்த நேரத்தில் மற்ற எல்லா […]

விஞ்ஞான வசதிகளை நீட் தேர்வு வளாகத்தில் பயன்படுத்தினால் என்ன?

தேர்தல் காலங்களில் கட்டிலில் கிடக்கும் கிழவிக்கு கையில் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்குசாவடிக்கு தூக்கி சென்று வாக்கு வாங்குவார்கள் தொண்டர்கள். எவ்வளவு தூரம் என்றாலும் சளைக்காமல் ஓடுவார்கள் தலைவர்களும் ரகசிய கூட்டம் என்ற பெயரில் அவர்களை உசுப்பிவிடுவார்கள் வீடு வீடாக சென்று அவர்கள் வாக்காள முதியவர்களை தூக்கி வரும் அழகை காண்பதற்கு அவ்வளவு ஆனந்தமாக இருக்கும், எவ்வளவு கருணை, எவ்வளவு கவனிப்பு? யாரும் கேட்காமல் அவர்களாக வந்து அப்படி உதவுவார்கள், வாகனம் முதல் எல்லாம் இலவசம் நீட்டுக்கு […]

வங்கத்து தாகூர் கொண்டாடபட்டார்.. தமிழகத்து பாரதி விரட்டபட்டார்….

இங்கு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும், வேலூர் கோட்டையும் இன்ன பல கோட்டைகள் எல்லாம் அழிந்து கிடக்கும் ஆனால் பத்மநாபபுரம் உள்ளிட்ட பல அரண்மனைகள் அப்படியே இருக்கும் எப்படி என்றால், யாரெல்லாம் வெள்ளையனை ஆதரித்தார்களோ அவர்கள் எல்லாம் வாழ்வை கொண்டாட அனுமதிக்கபட்டார்கள். யாரெல்லாம் வெள்ளையனை எதிர்த்தார்களோ அவர்கள் எல்லாம் சிதறடிக்கபட்டனர், ஓட விரட்டபட்டனர் அதில் கவிஞர்களும் விதிவிலக்கு அல்ல‌ வங்கத்து தாகூர் அப்படித்தான் கொண்டாடபட்டார், தமிழகத்து பாரதி அப்படித்தான் விரட்டபட்டார் தாகூர் பெரும் கவிஞர் சந்தேகமில்லை. வங்கத்து கவி உள்ளம் […]

யாரோ எஸ்.வீ சேகராம்.. இந்தியாவில் தலைமறைவாம்

“யாரோ எஸ்.வீ சேகராம். இந்தியாவில் தலைமறைவாம் இந்த அல்கய்தா, ஐ.எஸ், தாலிபன்,ஹக்கானி தீவிரவாதிகளை கண்காணிப்பது போல் ஒரு குழுவினை அமைத்து இந்த ஆளையும் கண்காணித்து கொள்ளுங்கள், இன்னும் அகபடவில்லை என்றால் எமபாதகன் போலிருக்கின்றது, ஒரு சாதாரண நடிகன் வல்லமை பொருந்திய தமிழக போலிஸ் மற்றும் உளவுதுறைக்கு தண்ணீர் காட்டுவது சும்மா அல்ல , ஐஎஸ் போராளியினையே தமிழகத்தில் தூக்கிய காவல்துறை இவனிடம் தோற்கின்றது அவனின் திறமையினை நாம் பயன்படுத்திகொள்ள வேண்டும் புரிகின்றதா? இல்லை என்றால் மொசாத் அவனிடம் […]

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் வெளியீடு

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் வெளியீடு தமிழகமே இருட்டு அறையில் எங்கிருந்தெல்லாமோ அடி வாங்கும் சூழலில்தான் இருக்கின்றது என்ன நடக்கின்றது, ஏது நடக்கின்றது என யாருக்குமே தெரியவில்லை, ஆனால் அடி மட்டும் சரியாக விழுந்துகொண்டே இருக்கின்றது எனினும் இந்த டைட்டிலுக்கு மிக பொருத்தமானது ஆளுநரின் நிலமை, அவருக்கு அடிப்பது யார் என தெரியாமல் விழும் குத்துகள் ஏராளம் படத்தின் பெயரை அவருக்கு அர்பணிக்கலாம்  

மகதாயி ஆறு விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது’: பிரதமர் மோடி

மகதாயி ஆறு விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது’: பிரதமர் மோடி குற்றச்சாட்டு இந்த கன்னடம் இருக்கின்றதே , அதற்கு அதனை சுற்றி இருக்கும் எல்லா மாநிலங்களுடனும் நீர் தகறாறு உண்டு. ஆந்திரம், மராட்டியம், கோவாவுடன் பல உரசல்கள் உண்டு தமிழத்துடன் கன்னடம் செய்யும் அட்டகாசங்கள் உலகறிந்தவை இப்பொழுது காவேரி போலவே கோவாவின் மகதாயி எனும் ஆறுடன் கன்னடம் முரண்டு பிடிக்கின்றது, ஆனால் இந்த விவகாரத்தில் கோவாவின் பிடி ஓங்கி இருக்கின்றது இவர்கள் மட்டும் ஒரு சொட்டு நீர் […]

நீட் போராட்டம் கல்வி வியாபாரிகள் வயிற்றில் அடித்ததால் ஏற்பட்ட ஒப்பாரி

ஒரு வழியாக நீட் வெளிமாநில சர்ச்சையும் அடிபட்டு போயிற்று, மிக குறைந்த எண்ணிக்கை அதுவும் ஆங்கில வழி மாணவர்களே வெளிமாநிலங்களுக்கு செல்கின்றார்கள் அதற்குள் 10000 மாணவர்கள் கிளம்ப வேண்டும் என கதைகட்டி விட்டுவிட்டனர் படுபாவிகள் இந்த மிகசிறிய எண்ணிக்கையினை ஒரு விமானத்திலே அனுப்பிவிடலாம், அரசு அதனை செய்யலாம் ஆனால் ஆங்கில வழியில் லட்சணக்கில் செலவழித்து படிப்பவர்களுக்கு அவர்களால் அனுப்ப முடியாதா? இங்கு காவேரி , ஸ்டெர்லைட் , மீத்தேன் தவிர‌ எல்லா போராட்டங்களும் வெற்று பலூன்கள் என்பது […]

நோபல் இலக்கியத்திற்கான பரிசு இந்த ஆண்டு வழங்கபடாதாம்

நோபல் பரிசில் இலக்கியத்திற்கான பரிசு ஒன்றும் உண்டு, அது இந்த ஆண்டு வழங்கபடாதாம் காரணம் பரிசுக்கான நபரை தேர்ந்தெடுக்கும் குழு மதுரை பல்கலைகழக நிர்மலா தேவி விவகாரம் போல பல பாலியல் புகாரில் சிக்கிகொண்டது இதனால் இந்த வருடம் விருது இல்லை என அறிவித்துவிட்டார்கள் இதனால் மனுஷ்யபுத்திரனுக்கு நோபல் இல்லை என சாரு நிவேதிதாவும், அவருக்கும் நோபல் இல்லை என்பதில் மனுஷும் மகிழ்ச்சி கொண்டிருக்கின்றனர் இருவருக்குமே நோபல் இல்லை என்பதில் ஜெயமோகனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications