பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வெளியுறவு துறை இந்தி திணிப்பு துறையாகிவிட்டது

சீனர்கள் ஹிந்தியும், இந்தியர்கள் சீன மொழியும் கற்பது அவசியம்: சுஷ்மா ஸ்வராஜ் மோடியின் சீன பயணத்திற்கு முன்பாக பிஜீங் சென்ற அம்மணி இந்த தத்துவத்தை உதிர்த்திருக்கின்றார் சீனர்கள் ஏன் இந்தி கற்க வேண்டும்? “டோக்லஹாமை விட்டு ஓடு” “அக்சாய் சின் பக்கம் விட்டு ஓடியே போ..” என சொல்வதற்கு எதற்கு அவர்களுகு இந்தி??? துப்பாக்கி தூக்கி சுட்டால் போதாதா? இதை இங்கேயே தமிழர்கள் இந்தியும், இந்திக்காரர்கள் தமிழையும் கற்பது அவசியம் என சொல்லியிருந்தால் எப்படி இருந்திருக்கும், சொல்ல […]

ஆன்மீக அரசியல் என்பது எடுப்பார் கைப்பிள்ளை

ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்தால் வரட்டும், இல்லை நல்லாட்சி தருவார் என நம்புபவர்க்கு ஆதரவு தெரிவிக்கட்டும் அதை விடுத்து, இந்த தமிழருவி மணியன், குருமூர்த்தியிடம் எல்லாம் ஆலோசனை கேட்டால் சத்தியமாக உருப்படாது தமிழருவி மணியன் எத்தனை முதல்வர்களை உருவாக்கினார்? ஒன்றுமில்லை, விஜயகாந்தையே சாய்த்தவர் அவர் இந்த குருமூர்த்தி எத்தனை முதல்வரை உருவாக்கினார்? ஒரு வார்டு கவுன்சிலர் கூட அவரால் உருவாகியிருக்க முடியாது ரஜினி என்பவர் தனிபலம் உள்ளவர், அவர்தான் அடையாளம், அந்த சொல்தான் ரசிகர்களின் துடிப்பு பலம் […]

மோடி ஆட்சியில் விலைவாசி உயர்ந்தது என்றார்கள்

மோடி ஆட்சியில் விலைவாசி உயர்ந்தது என்றார்கள், யார் ஆட்சியில் உயரவில்லை. அது அப்படித்தான் உயர்ந்துகொண்டேதான் போகும் பாஸ்போர்ட்டுக்கான தொகையினையும் கணிசமாக உயர்த்திவிட்டார்கள், இந்திய தூதரக வாசலில் அவனவன் கதறுகின்றான் வெளிநாட்டுக்கு செல்பவன் எல்லாம் அள்ளுபவன் அல்ல, கூலி வேலைக்கு செல்பவர்களும் ஏராளம். அவர்களை எல்லாம் கணக்கில் கொள்வதில்லை பத்துவருடத்திற்கு ஒருமுறைதான் செலவு என்பதால் சகிக்கலாம் எனினும் இவ்வளவு அதிகரித்தரிக்க கூடாது கேட்டால் பாதுகாப்பு அம்சங்கள் சேர்த்திருக்கின்றார்களாம், என்ன பாதுகாப்போ தெரியவில்லை வெளிநாட்டில் தூதரகம் நடத்தவும் பெரும் செலவு […]

பத்திரிகை விவாதங்கள்

ஊழல் பற்றி பேச திமுகவிற்கு அருகதை இல்லை :ஜெயக்குமார் கோபம் ஆமாம், ஊழல் குற்றவாளி என தீர்பிடபட்ட ஜெயாவின் படத்தை வணங்கும் அவர்களுக்குத்தான் ஊழல்பற்றி பேச‌ முழு அருகதை இருக்கின்றது திமுகவிற்கு எங்கே இருக்கின்றது அவர் கோபத்திலும் நியாயம் இருக்கின்றது, நீங்கள் இன்னும் அதிகமாக கோபபடுங்கள் ஜெயகுமார்  “கடல் வத்தி கருவாடு சாப்பிடலாம் என்று குடல் வத்தி செத்ததாம் கொக்கு” என்பது தான் ஸ்டாலினின் நிலைமை : அமைச்சர் ஜெயக்குமார் இதை திருப்பி சொல்ல முக ஸ்டாலின் […]

ஜி.யு போப் பிறந்தநாள்

  அவர் பெயர் ஜார்ஜ் உக்ளோ போப், கனடாநாட்டுக்காரர். பெயர்தான் போப் தவிர போப்பாண்டவர் அல்ல‌ பிரிவினை கிறிஸ்தவ வழி 1839ல் தன் 20ம் வயதிலே கிறிஸ்துவினை போதிக்க இந்தியா வந்தார். அதை சொல்வதில் தயக்கமே இல்லை. அவர் கிறிஸ்துவத்தை போதிக்கவே வந்தார் அந்நாட்களில் ஐரோப்பியர் மனநிலை அப்படி இருந்தது, இந்திய சூழலும் இங்கிருந்த பல வர்க்க வேறுபாடும் சாதியும் அவர்களை “இந்து தேச மாது சிரோ மணிகளை விந்தை ஒளிக்குள் வரவழைப்போம்” என உற்சாகமாக பாட […]

கம்யூனிஸ்ட் உருப்படாமல் போனது அப்படித்தான்

இந்த கம்யூனிஸ்டுகளுக்கு என்னாயிற்று என தெரியவில்லை, திடீர் என தலித்பாசம் பொத்துவிட்டது திமுகவில் தலித்துக்கள் மாவட்ட செயலாளராக ஆகமுடியுமா என பொங்குகின்றார்கள் அட பதர்களா, அதன் தலைவனே மிக தாழ்த்தபட்ட சாதியிலிருந்து வந்தவன் என்பதை மறந்துவிட்டீர்களா? ஆ.ராசா போன்ற தமிழக‌ தலித்துகள் எல்லாம் டெல்லியில் அமைச்சரானது திமுகவின் சாதனை என்பது தெரியாதா? திமுகவில் சாதிபாகுபாடுகள் என்றும் இருந்ததில்லை, பகுத்தறிவு கொண்ட பிராமணரை கூட அது தள்ளிவைக்கவில்லை இதெல்லாம் குதர்க்கம் ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை இவ்வளவு பேசும் இந்த […]

சென்னையில் வங்கி கொள்ளை இட முயன்றவன் கைது

சென்னையில் வங்கி கொள்ளை இட முயன்றவன் கைது : பரபரப்பு செய்தி அவன் யாரென தெரியவில்லை ஆனால் கொஞ்சம் கூட இந்திய யதார்த்தம் அந்த முட்டாள் கொள்ளையனுக்கு தெரியவில்லை வங்கிகளை துப்பாக்கி முனையில் கொள்ளையடிப்பது சுதந்திர போராட்ட காலத்தில் போராளிகள் ஆயுதங்களுக்காக கொள்ளையடிப்பதோடு போயிற்று இது சுதந்திர இந்தியா, இங்கு இப்படியா கொள்ளை அடிப்பார்கள்? இங்கு எல்லா கொள்ளைக்கும் லைசன்ஸ் வேண்டும். மணல் அள்ள ஒரு லைசென்ஸ் வைத்து மணல் கொள்ளை அடிக்கலாம், கல்குவாரிக்கு லைசென்ஸ் வைத்து […]

இன்று அந்த தனிப்பெரும் எழுத்தாளனுக்கு பிறந்த நாள்

இந்த தமிழகத்தில் மொழிவெறி, இனவெறி , மதவெறி இன்றி மானுடத்தை நேசித்த ஒரு மாபெரும் எழுத்தாளன் ஒருவன் இருந்தானென்றால் அது ஜெயகாந்தன் ஒருவனே மானிடம் மானிடமாக வாழ அவன் எழுதினான், சமூக சீர்கேடுகளை சாடி எழுதினான் அந்த எழுத்தில் மானிட நேயம் மட்டுமே மிகுந்திருந்தது பாரதிக்கு பின் தமிழகம் கண்ட தனிப்பெரும் சிந்தனையாளன் அவன் இந்த பாழ்பட்ட தமிழகத்தில் பிறக்காமல் மேல்நாட்டில் பிறந்திருந்தால் நிச்சயம் டாஸ்டாய் அளவு அவன் பேசபட்டிருப்பான் தமிழ்சினிமா தமிழகத்தை எந்த அளவு கெடுத்தது […]

ராகுலை பிரதமராக்க மோடி இப்படி எல்லாம் பாடுபட கூடாது.

தீபக் மிஸ்ரா எனும் உச்சநீதிமன்ற நீதிபதியினை மாற்ற முடியாது என வெங்கய்ய நாயுடு சொல்லியிருக்கலாம் ஆனால் இந்திய நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போயிற்றென்று இத்தேசம் நம்ப தொடங்கிவிட்டது அந்த அவநம்பிக்கையினை நீக்கவேண்டுமென்றால் கட்டாயம் தீபக் மிஸ்ராவினை மாற்றியே தீரவேண்டும் தோற்றிருப்பது தீர்மானம் அல்ல, மத்திய அரசு இப்படி அடம்பிடிப்பதன் மூலம் நீதித்துறையில் தங்கள் பிடி இருப்பதை இந்தியா முழுக்க சொல்லிகொண்டிருக்கின்றார்கள் இதனால் இருக்கும் அவப்பெயர் இன்னும் அதிகரிக்குமே அன்றி குறையாது ஆனாலும் ராகுலை பிரதமராக்க மோடி இப்படி […]

திருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழருக்கு பதவி இல்லை

திருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழருக்கு எப்பொழுதும் பிரதான இடம் உண்டு, திருப்பதி எனும் பெயரே தமிழ்பெயர். அது தமிழருக்கான ஆலயம் பின்னாளில் மொழிவாரி பிரியும்பொழுது அது ஆந்திராவுக்கு சென்றாலும், அதன் நிர்வாக குழுவில் தமிழர் இருந்து கொண்டே இருந்தனர் 50% திருப்பதி பக்தர்களில் தமிழர்கள் என்பதால் அக்குழுவில் தமிழர் இருக்க வேண்டிய அவசியம் இருந்தது இம்முறை தமிழருக்கு பதவி இல்லை என சொல்லியாயிற்று, பழனிச்சாமி அரசும் அப்படியா? என சொல்லிவிட்டு அது போக்கில் இருக்கின்றது இதற்கு மேல் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications