பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்த பச்சை மண் குழம்பி நிற்கின்றது

ஆனாலும் மைசூரிலிருந்து வந்து இந்த நாளைய தமிழக முதல்வர் கட்சி ஆரம்பித்திருக்கும் நேரம் இப்படி காவேரி சோதனை வந்திருக்க கூடாது மைசூரில் விழும் அடியா?, இல்லை அத்தையின் கட்சியா? என இந்த பச்சை மண் குழம்பி நிற்கின்றது ஒரு மாபெரும் தலைவி உருவாகிவிட கூடாது என்ற சதிதான் இப்பொழுது காவேரி தீர்ப்பும் அதை தொடர்ந்த போராட்டமுமாக ஆகிவிட்டது . இன்னும் காவேரி பிரச்சினையில் இந்த பேபிம்மாவின் கருத்தை கேட்காத ஊடகங்களை வன்மையாக கண்டிக்கின்றோம்  

தனிநாடானால் கூட இந்த டோல்கட்டணம் பன்மடங்கு ஆகும்

டோல்கேட் அதிகமாம், காரில் செல்ல முடியவில்லையாம் அப்படி தமிழரை சுரண்டுகின்றார்களாம் இதனால் அடித்து உடைத்துவிட்டார்களாம், இதற்கும் சிலர் பாராட்டுக்கள் . நாம் ஏதும் சொன்னால் தமிழக டோல் கொடுமை உனக்கு எப்படி தெரியும் என வியாக்கியானம் வேறு டோல்கேட் எந்த நாட்டில் இல்லை?, எல்லா நாட்டிலும் உண்டு. ஆனால் இந்தியாவில் டோல் அதிகம் என்கின்றார்களே ஏன்? மற்ற நாடுகளில் கார்கள் விலை அப்படி. புதுகார் வாங்கும்பொழுது வரி என கிட்டதட்ட காரின் விலையில் முக்கால்வாசி வரும் அந்த […]

இதுதான் தமிழன், இதன் பெயர்தான் வெறுப்பு வளர்க்கும் அரசியல்

அப்பொழுதும் தமிழ்நாட்டை கெடுக்கும் டாஸ்மாக்கினை உடைப்பதை தவிர்த்து, தமிழகத்தை கெடுத்த திரையரங்கை உடைப்பினை தவிர்த்து, தமிழகத்தை ஆண்ட கட்சிகளை விட்டுவிட்டு, ராமசந்திரன் ஜெயா சிலைகளை எல்லாம் விட்டுவிட்டு, தமிழரின் முதல்வர் என அமர்ந்திருக்கும் பழனிச்சாமி கட்டவுட்டினையும் விட்டுவிட்டு , எங்கோ சென்று டோல் கேட்டை உடைத்திருக்கின்றான் அல்லவா? இதுதான் தமிழன், இதன் பெயர்தான் வெறுப்பு வளர்க்கும் அரசியல் உடைப்பதாக இருந்தால் ராமசந்திரன், ஜெயா கல்லறையினை உடையுங்கள், இன்னும் சில இருக்கின்றன‌உடைப்பதற்கு . சில கட்சிகளின் அலுவலகங்களை உடையுங்கள் […]

காலம்வரை கண்டே பிடிக்கமுடியாத செலவு எது தெரியுமா?

ரபேல் போர் விமானம் வாங்கிய விலையினை கேட்டால் அது ரகசியம் என்றார்கள், இப்பொழுது ரஷ்ய கப்பலை வாங்கிய விலையினை கேட்டாலும் அதே பதில் ஆனால் இந்த ரஷ்ய கப்பல் காங்கிரஸ் அரசால் வாங்கபட்டது, 1987ல் ரஷ்ய கடற்படையிலிருந்து அகற்றபட்ட கோர்ஸ்கோவ் எனும் கப்பலை பெயின்ட் அடித்து நம் தலையில் விற்றது ரஷ்யா மிக பழைய கப்பலுக்கு ஏன் இவ்வளவு விலை கொடுக்க்க வேண்டும்? புதிதாக வாங்கினால் என்ன என்ற சர்ச்சை அப்பொழுதே வந்தது இப்பொழுது இது தொடர்பான […]

தொடரும் காவேரி போராட்டம்

கன்னட அரசை கண்டித்து நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கடை அடைப்பு போராட்டம் இதே வள்ளியூர் பெரிய குளத்திற்கு நீர் மேற்கு குளங்களில் இருந்துதான் வரவேண்டும், அவர்களோ நன்றாக நிரப்பி விட்டு மீதி இருந்தால் கொடுப்பார்கள் வள்ளியூர் குளம் முழுக்க நிரம்பி பன்னெடுங்காலம் ஆகின்றது அருகிருக்கும் திறுக்குறுங்குடி குளத்தில் இருந்து 1 லிட்டர் தண்ணீரை இவர்கள் கொண்டுவரமுடியுமா என்றால் நிச்சயம் முடியாது இந்த வள்ளியூர் மக்கள்தான் எங்கோ இருக்கும் கன்னட அரசை கடுமையாக கண்டிக்கின்றார்களாம். ஆயிரம் சர்ச்சை இருக்கலாம், […]

இவ்வளவு கொடூர , பாசிச மனநிலை பிடித்தவர்களா இவர்கள்?

தமிழகத்திற்கு காவேரி விவகாரத்தில் மாபெரும் அநீதி இழைக்கபட்டு அதற்கு தமிழகம் பொங்கிகொண்டும் இருக்கின்றது தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்காத உங்களை இப்படித்தான் நோக வைத்து கொல்வோம் என்கின்ற அரசியல் நடக்கின்றது. இது இந்நாட்டின் ஒருமைபாட்டுக்கும், தேசிய நல்லிணக்கத்திற்கும் சவால் விடுகின்றது. எல்லோரும் இந்நாட்டு மைந்தர் எனும் அடிப்படை கொள்கைக்கும், சட்டம் எல்லோருக்கும் சமம் எனும் அடிநாத கோட்பாட்டிற்கும் சவால்விடுகின்றது காங்கிரசுக்கும், பாஜகவிற்கும் வாக்களிக்காத தமிழகத்திற்கு காவிரி நீர் தரமாட்டோம், உச்ச நீதிமன்றம் கட்டளை இட்டாலும் கொடுக்கமாட்டோம் என்பது உச்சபட்ச […]

ஸ்டாலினுடன் 2 லட்சம் தொண்டர்கள் சிறை செல்ல தயார்

யாரோ ஸ்டாலினுடன் 2 லட்சம் தொண்டர்கள் சிறை செல்ல தயார் என சொன்னதை நம்பி திடீரென மறியல் போராட்டத்தில் குதித்திருக்கின்றார் ஸ்டாலின் ஆனால் லட்சம் பேர் திரண்டு சிறைசெல்லவில்லை, ஸ்டாலினோடு சில நூறுபேர் கூட இல்லை என்கின்றது செய்திகள் அவர் கைது செய்யபட்டவுடனாவது மாநிலம் முழுக்க திமுக பொங்கி இருக்க வேண்டாமா? அதுதான் மாலையில் விட்டுவிடுவார்களே? இதற்கேன் போராட்டம் என அவர்கள் போக்கில் இருந்துவிட்டார்கள் கனிமொழிமட்டும் அதே பாணியில் கைதாகியிருக்கின்றார், தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பது […]

ஜிசாட் 6 செயற்கைகோள் தனது கட்டுபாட்டை இழந்ததாக செய்திகள்

இந்தியா நேற்று ஏவிய ஜிசாட் 6 செயற்கைகோள் தனது கட்டுபாட்டை இழந்ததாக செய்திகள் வருகின்றன , இது சாதாரண செய்தி அல்ல‌ காரணம் ஜிசாட் செயற்கைகோள் ராணுவ தொடர்பினை வலுப்படுத்தும் வசதிக்காக ஏவபட்டது இதுவரை இந்தியா செலுத்தியதில் செயற்கை கோளை சுமந்து செல்லும் ராக்கெட் பழுதாகுமே தவிர செயற்கைகோள் எல்லாம் பழுதானதாக தகவல் இல்லை வானவெளி என்பது பிரமாண்டமானது , இந்த செயற்கை கோள் எல்லாம் பூமி மீது அதன் சுற்றுபாதையில் நிறுத்தபடும், அதாவது அதில் நிறுத்திவிட்டால் […]

நல்ல பிள்ளையாக போய் சிறையில் அமர்ந்துவிட்டார் சசிகலா

15 நாள் பரோலில் வந்த சசிகலா , பரோல் முடியும் முன்பே நல்ல பிள்ளையாக போய் சிறையில் அமர்ந்துவிட்டார் ஒரு வழக்கினையே சட்டத்தை மதிக்காமல் 18 வருடம் இழுத்தடித்த சசிகலாவா இவர் என தமிழகம் மகா ஆச்சரியமாய் பார்க்கின்றது நடராஜன் பெயரிலுள்ள சொத்து தகறாறு, தன் வீட்டு அதிகார தகறாறு எல்லாம் சேர்த்து சசிகலாவினை இந்த அளவு வெறுப்புக்குள்ளாக்கிற்று என பத்திரிகைகள் எழுதியது உண்மையாயிற்று இதற்கு இரண்டே வாய்ப்புகள்தான் உண்டு முதலாவது எல்லாம் தன் கைவிட்டு போயிருப்பதை […]

திமுக மறுபடி டீசன்ட் கட்சியாயிற்று

அண்ணா காலத்தில் திமுக கொஞ்சம் பண்பாடான கட்சி என அறியபட்டது, அவரது பேச்சும் அணுகுமுறையும் அப்படி பின்னாளில் அதன் போக்கு மாறிற்று டெல்லியிலிருந்து வருவபர்கள் சர்ச்சைகுரியவர்கள் என்றால் “அவர்கள் மீது முட்டைகளை எறியாதீர்கள் , கற்களை எறியாதீர்கள், அவர்கள் நம் விருந்தினர்கள் அவர்கள் மேல் அழுகிய தக்காளிய்னை எறியாதீர்கள் மன்றாடி கேட்கின்றோம் எறியவே எறியாதீர்கள்” என்றெல்லாம் வசனம் கேட்கும் அதன் அர்த்தம் எறிய வேண்டாம் என்பதே அல்ல. இதனால் அவை எல்லாம் எறியபட்ட சம்பவமும் உண்டு இந்திராகாந்தி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications