பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அருவி : திரைப்பட விமர்சனம்

இந்த அருவி படத்தை மிகசிறந்த படம், தமிழக சினிமாவினை புரட்டி போட்ட படம் என்றெல்லாம் சொன்னார்கள் ஒரு மண்ணாங்கட்டியுமில்லை, எல்லாம் பழைய கதை ஜெயகாந்தனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்” எனும் நாவல் முன்பு படமானது,லட்சுமி மிக சிறப்பாக நடித்திருந்தார். அந்த கதையின் தழுவல்தான் அருவி மூலக்கதை அதுதான். ஆனால் அந்நாவலின் குடிகார கங்காவினை இங்கு எய்ட்ஸ் நோயாளியாக்கி படத்தை மாற்றிவிட்டார்கள் ஜெயகாந்தன் இருந்திருந்தால் சீறியிருப்பார் , அவர் இல்லாத காலம் என்பதால் சிக்கல் இல்லை அந்த […]

உ.பியில் ஜெயிச்சோம், பீகார்ல ஜெயிச்சோம்னு லட்டு கொடுத்தோம்

“இங்க டெப்பாசிட் போனாலும் உ.பியில் ஜெயிச்சோம், பீகார்ல ஜெயிச்சோம்னு லட்டு கொடுத்து சந்தோஷமா இருந்தோம் யார் கண்ணு பட்டுச்சோ அந்த சந்தோஷமும் போச்சி,. இந்த நேரத்தில சும்மா விடுறானுகளா? போன் பண்ணி அக்கோய் லட்டு வேணுமான்னு கேக்குறானுக”    

மாறன் சகோதரர்கள் வழக்கிலிருந்து விடுவிப்பு

ஆக காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் போடபட்ட ஒரு வழக்கும் சரியில்லை என்பது தெளிவாயிற்று இனி மாறன் குரூப்ஸ் முழு அரசியலுக்கு திரும்பலாம் , தடையான கடைசி வழக்கும் நீங்கிவிட்டது “நா யாரு..நா யாரு கொய்யால நீ கேளு நா ராஜா.. எங்கேயும் நா ராஜா” என இனி அறிவாலயம் நோக்கி மாறன் சகோதரர்கள் தெம்பாக நடக்கும் நேரம் வந்தே விட்டது

பா.ஜ.க.வுக்கு இறங்கு முகம்

உ.பி, பீகார் மக்களவை இடைத்தேர்தல் – 3 தொகுதிகளிலும் பா.ஜ.க.வுக்கு இறங்கு முகம் மாபெரும் வெற்றி பெற்ற கொஞ்சநாளுக்குள் மிக வேகமாக சரிகின்றார்கள் என்றால் அதற்குள் மக்கள் வெறுப்பினை சம்பாதித்துவிட்டார்கள் இடைதேர்தலில் ஆளும் கட்சியின் தோல்வி சாத்தியமில்லை, அது சாத்தியமானால் அக்கட்சிக்கு மக்கள் நாள் குறித்தாயிற்று என்பதே அர்த்தம். பொய்களும் போட்டோஷாப்களும் நீண்ட நாள் நிலைக்காது.

ஹாக்கின்ஸ் பற்றி செல்லூர் ராஜு

நல்ல வேளையாக ஹாக்கின்ஸ் இறந்தபின் செல்லூர் ராஜூ இப்படி சொல்லியிருக்கின்றார் ஒருவேளை அவர் வாழும் போது, “நீங்களே என் இஸ்பிரேஷன்” என செல்லூர் ராஜூ சொல்லியிருந்தால் ஹாக்கின்ஸ் தன் கண்டுபிடிப்புகளை எல்லாம் கிழித்து போட்டுவிட்டு தற்கொலை செய்திருக்க மாட்டாரா?  

ஸ்டீபன் ஹாக்கின்ஸ் மரணம்

ஐன்ஸ்டீனுக்கு அடுத்து மாபெரும் விஞ்ஞானி என கருதபட்ட ஸ்டீபன் ஹாக்கின்ஸ் மரணம் அடைந்ததாக அறிவிக்கபட்டிருக்கின்றது மிக பெரும் அறிவாளி அவர். விண்வெளி ஆராய்ச்சி அவரின் பிடித்தமான விஷயம். இளம் வயதிலே டாக்டர் பட்டம் வாங்கிய ஹாக்கின்ஸ்க்கு 21 வயதில் மிக கடுமையான நரம்பு நோயினால் பாதிக்கபட்டார் அதாவது கைகால் அசையாது, பேசமுடியாது கிட்டதட்ட பக்கவாத நிலை. என்ன செய்துவிட முடியும்? கிட்டதட்ட வசூல்ராஜா ஆனந்த் சார் போல சப்ஜெக்டாக அவர் வாழ்ந்திருக்க வேண்டும் ஆனால் அவரின் அறிவினை […]

எங்க வீட்டு மாப்பிள்ளை

எது எதெல்லாமோ ஈவ் டீசிங் வகையில் வருமாம், பெண் மனதை நோகடிப்பது, பெண்ணை அசிங்கபடுத்துவது, பொது இடத்தில் ஒரு மாதிரி பார்ப்பது எல்லாம் ஈவ் டீசிங்காம் ஆனால் கிட்டதட்ட 50 ஆயிரம் பெண்களை ” சீ …போ..” என கடந்துவிட்டு 1 பெண்ணை ஆர்யா மணம் முடிப்பாராம் இப்படி ஏராளமான பெண்களை அவர் “ச்சீ போ..” ரிஜெக்டட் என கோடிமக்கள் பார்த்திருக்க டிவியில் சொல்வாராம். அப்பெண்கள் அவமனமாய் வெளியேறுவார்களாம் இது அப்பெண்ணின் மனதில் எவ்வளவு பெரும் பாதிப்பினை […]

மூன்றாம் கலைஞர்னா என்ன அர்த்தம்?

“கனி.. அங்க என்ன நடக்குது? ஆளாளுக்கு இரண்டாம், மூன்றாம் கலைஞர்னா என்ன அர்த்தம்? அண்ணே.. உனக்கே கோபம் வருதுண்ணா? திகார்ல சப்பாத்தி தின்ன எனக்கு எப்படி இருக்கும்? யாருக்காக ஜெயில் போனேன்? மூன்றாம் கலைஞருக்கா? அவனுகள எப்படி வழிக்கு கொண்டு வரணனும்னு தெரியும் கனிபாப்பா, இரண்டாம் அழகிரின்னு என் மகன இறக்குறேன், நீ சின்ன கலைஞரேன்னு உன் மகன இறக்கு, இரண்டுல ஒண்ணு பார்த்துருவோம்”    

உதயநிதி இதிலிருந்து பாடம் படித்தால் அவருக்கு நல்லது

திமுகவில் ஒரு சராசரி நடிகன் ஓவர் பில்டப் கொடுத்து பிம்பமாக உருவாக்கபட்டால், அவனை சிலர் முருங்கை மரத்தின் மீது ஏற்றிவிட்டால் என்னாகும் என்பதகு உதயநிதிக்கு சாட்சியாக அவரது பெரியப்பா மு.க முத்துவே இருக்கின்றார் வேறு எங்கும் உதயநிதி உதாரணம் தேடி அலையவேண்டியதில்லை, அது அவர் குடும்பத்திலே இருக்கின்றது. முக முத்து சராசரி நடிகனாக அதைவிட நல்ல பாடகனாக சினிமா உலகில் நின்றிருப்பார். ஆனால் பெரும் பிம்பங்களும் அவருக்கு திடீரென எழும்பிய ரசிகர் மன்றமே திமுகவின் பல சிக்கல்களுக்கு […]

இரண்டாம் முரசொலிமாறனா நாம வரக்கூடாதாம்

“பாத்தியாண்ணே… இரண்டாம் , மூன்றாம் கலைஞர் வரலமாம், ஆனால் இரண்டாம் முரசொலிமாறனா நாம வரக்கூடாதாம் அந்த கட்சிக்கு நம்ம அப்பா உழைக்கலையாண்ணே? அழுகையா வருதுண்ணே.. இதெல்லாம் என்ன நியாயம்ணே???”

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications