பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்தியாவின் பணக்கார கட்சியானது அதிமுக

இந்தியாவின் பணக்கார கட்சியானது அதிமுக: ஐந்தே ஆண்டுகளில் சொத்து மதிப்பு 155% உயர்வு ராமசந்திரன் பொருளாளராக இருந்த‌ திமுகவில் கணக்கு கேட்டுவிட்டு, அவர்கள கணக்கை காட்டிய பின்னும், இது மோசடி, தான் மிக தூய்மையான அரசியலை முன்னெடுப்பதாக சொல்லிவிட்டு தொடங்கிய கட்சி இது இன்று இந்தியாவில் பணக்கார கட்சியாம், இப்போதும் கேளுங்கள் கலைஞர் ஊழல் பணத்தில் உலக பணக்காரர் ஆனார் என ஒரு கும்பல் சொல்லிகொண்டே இருக்கும் அவர்களை திருத்தவே முடியாது  

இனி எந்த நடிகனும் கிழிக்க முடியாது

ரஜினி , நானும் என்.டி.ஆர் ஆட்சி கொடுப்பேன்னுதான் பேசி பார்த்தேன் ஆந்திராவில ஒரு பயலும் கண்டுக்கல‌ காங்கிரஸில கலந்து அப்படியே பொழைச்சிகிட்டேன். சொன்னா கேளுங்க. ஏதாவது தேசிய கட்சியில கலந்து பொழைச்சிக்கோங்க‌ எனக்கே இந்தபாடுண்ணா , நீங்க என்னபாடு படபோறிங்களோ, இத்தோட திருந்திடுங்க.. அந்த காலம் எல்லாம் மாறிப்போச்சி ரஜினி, இனி எந்த நடிகனும் கிழிக்க முடியாது    

மாணவி அஸ்வினி கொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள்

மிக மிக சோகமான சம்பவம் என்றாலும், மாணவி அஸ்வினி தொடர்பாக பல்வேறு தகவல்கள் வருகின்றன‌ அஸ்விணிக்கும் அந்த அழகேசனுக்கும் பதிவு திருமணம் நடந்தது என்கின்றார்கள், பின் அஸ்வினி பிரிந்து சென்றுவிட்டார் அதனால் அழகேசன் கொன்றுவிட்டார் என்றும் சில தகவல்கள் வருகின்றன‌ மாணவியினை காதல் தகறாறில் குத்தி கொன்றான் அழகேசன் என்றும், மனைவியினை குத்தினான் கணவன் என்றும் குழப்பமான செய்திகள் வருகின்றன‌ இந்த ஊடகங்கள் ஆளுக்கொரு செய்தியாக சொல்லி குழப்புவது இப்படித்தான் ஆனால் அஸ்வினிக்கும் அந்த அழகேசனுக்கும் காதல் […]

பிற்படுத்தபட்டவருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்திருக்கின்றது

மருத்துவ மேற்படிப்பில் 27% என்றிருந்த பிற்படுத்தபட்டவருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்திருக்கின்றது எப்பொழுது என்றால், எச்.ராசா பெரியார் சிலையினை இடிப்போம் என சர்ச்சை கிளப்பிய நேரத்தில் அட்டகாசமான திட்டமிது தமிழ்நாட்டு கவனத்தை வேறுபக்கம் திருப்பிவிட்டு மிக நுணுக்கமாக இந்த அறிவிப்பினை செய்திருக்கின்றார்கள் பெரியார் சிலையினை காக்க கிளம்பிய தமிழகம் பெரியாரின் கொள்கையினை தகர்ப்பதை கவனிக்காமல் விட்டுவிட்டது விஷயம் கொஞ்சம் வீரியமாகின்றது முதல் போராட்டத்தை பாமாக நடத்துகின்றது. என்ன இருந்தாலும் இம்மாதிரி விஷயங்களில் ராமதாஸை பாராட்டாமல் […]

கமலஹாசனுக்கு எதிராக நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வழக்கு

கமலஹாசனுக்கு எதிராக நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வழக்கு தொடுக்க போவதாக செய்திகள் வருகின்றன‌ அதாகபட்டது கமலயாசனின் மக்கள் நீதி மய்யம் என்பது, லோக் அதலத் நீதி மன்றம் என்பதின் தமிழாக்கமாக வருகின்றது அதானால் அவரின் கட்சி பெயரை தேர்தல் கமிஷன் அங்கீகரிக்க கூடாது என சொல்கின்றார்களாம் உண்மையில் நீதி மன்றம் எனும் பெயர் நீதி மையம் எனும் பொருளில் வரும். இந்த குற்றச்சாட்டிலும் நியாயம் இல்லாமல் இல்லை வழக்குதொடுக்க போகின்றவர் யாரென பார்த்தால் வலம்புரி மோசே என்பவராம். […]

இன்று மணியம்மை நினைவு நாள், அவருக்கு அஞ்சலி செலுத்தியாயிற்று

இன்று மணியம்மை நினைவு நாள், அவருக்கு அஞ்சலி செலுத்தியாயிற்று மணியம்மை எப்படி இருந்தார் என நமக்கு தெரியாது, ஆனால் அவரை,அவரின் வாழ்வினை திரையில் காட்டி நின்றவர் தலைவி குஷ்பு மிக மிக அட்டகாசமாக நடித்து சிவாஜி கட்டபொம்மனை காட்டியது போல, குஷ்பு மணியம்மையினை நிறுத்தி இருந்தார் சத்யராஜூக்கு பெரியாரின மோதிரத்தை கொடுத்தவர்கள் , குஷ்புவிற்கு எந்த விருதும் கொடுத்ததாக தெரியவில்லை அதனால் என்ன? கட்டபொம்மனுக்கு சிலை வைத்த சிவாஜிகனேசன் போல, மணியம்மைக்கு சிலை வைத்து தலைவி திறக்க […]

மணியம்மை நினைவு நாள்

என்னதான் திமுக பெண் விடுதலை, பெண் உரிமை என பேசினாலும் ஒரு பெண்ணின் மாபெரும் தியாகத்தை அவ்வளவாக சொல்லமாட்டார்கள், ஒரு மாதிரி நழுவுவார்கள் அப்பெண்ணே திமுக தோன்றுவதற்கு வாய்ப்பாகவும் பின் அது ஆட்சி அளவிற்கு வந்து நிற்க காரணமாகவும் இருந்திருக்கின்றார், அவர் இல்லாவிட்டால் திமுக என்றொரு கட்சி உதயமாகியிருக்க வாய்ப்பு இல்லாமே போயிருக்கும் அவர் மணியம்மை, திகவின் பிரதான தொண்டராக இருந்த வேலூர் கனகசபை என்பவரின் மகள், கனகசபை நீதிகட்சி, சுயமரியாதை தொண்டர் ஆதலால் அன்றே பள்ளி […]

அய்யாகண்ணு திருச்செந்தூர் ஆலய வளாகத்தில் புரட்சி…

அய்யாகண்ணு பெரும் போராளியாக இருக்கலாம், ஆனால் திருச்செந்தூர் ஆலய வளாகத்தில் புரட்சிசெய்ய அவரை அனுமதித்தது யார் என தெரியவில்லை அதிலும் அப்பெண் அவரை பிராடு என்பதும், பதிலுக்கு இவர் வைரமுத்துவின் சர்ச்சை பெயரோடு பாய்வதும் பார்க்க சகிக்கவில்லை அதனை இந்து அபிமானிகள் ஏன் கண்டுகொள்ளவில்லை என்பதும் தெரியவில்லை, இதெல்லாம் ஆலய வளாகத்தில் நடைபெறவேண்டிய சண்டை அல்ல‌ ஆனால் மாநில அரசை கண்டிக்காமல் டெல்லியில் ஆடையின்றி உருண்டவரை , அதன் பின் பழனிச்சாமி பக்கமே செல்லாதவரை பிராடு என்றுதான் […]

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு குக்கர் வியாபார ஏஜெண்டுகள் எல்லாம் இனி ஐபில் ஏலத்தில் கலந்துகொள்ளும் அளவு சம்பாதிக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கின்றது இனி “சார் எங்களது கேஸ் அடுப்பு வியாபாரம் ஆக வேண்டும், டிவி விற்க வேண்டும், கார் விற்க வேண்டும் தயவு செய்து அடுத்த தேர்தலில் நாங்கள்சொல்லும் சின்னம் கேளுங்கள் சார்..” என முதலாளிகள் கூட்டம் தினகரன் வீட்டு வாசலில் வரிசையில் நின்றாலும் ஆச்சரியமில்லை மிக சிறந்த மார்கெட்டிங் ஐகானாக தினகரன் […]

முதலில் அணையினை திறந்துவிட்டு அதன் பின் பெரியார் பற்றி பேசுங்கள்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு கண்டிப்பாக அமைக்காது- சீமான் எங்கே? அப்படி ஒரு வாரியம் அமைந்து தொலைத்துவிடுமோ என்ற பதைபதைப்பே அங்கிளிடம் உள்ளது ஆம், சிக்கல் தீர்ந்துவிட்டால் இவர் எப்படி பிரிவினை அரசியல் செய்வது? கயவர்களுடன் கூட்டணி கிடையாது: மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஏம்பா கமலஹாசா.. நானும் இப்படித்தான் தொடக்கத்துல சொல்லிட்டுஇருந்தேன் எல்லாம் ஸ்டார்ட்டிங் டிரபிள், போக போக சரியாயிரும் தீரா வியாதியில் இருப்பவர்களை கருணை கொலை செய்ய அனுமதிக்கலாம் : உச்சநீதிமன்றம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications