பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இவர்கள் சாதி ஒழிப்பு போராளிகளாம்….

ரஜினியினை எல்லா சாதி இயக்குனர்களும் இயக்கி இருக்கின்றார்கள், ஆனால் அவர்கள் சாதி என்ன என்பது யாருக்கும் தெரியாது. யாரும் இவர் எங்கள் சாதி என கொண்டாடவுமில்லை, படு மொக்கையான படங்களை ரஜினி கொடுக்கும்பொழுது குறிப்பாக பாபா கொடுதபொழுது, அவரை வறுத்தெடுத்தபொழுது எங்கள் சாதி என்பதற்காக சுரேஷ் கிருஷ்ணாவினை பழிக்கின்றார்கள் என கிளம்பவில்லை குசேலன் வந்தபொழுது வாசுவினையும், விங்கா வந்தபொழுது கே.எஸ் ரவிகுமாரையும் கலாய்த்தால் யாரும் வந்து எங்கள் சாதி இயக்குநர் என்பதால் உனக்கு பிடிக்கவில்லை என வரிந்து கட்டவில்லை […]

இனிய ஹோலி நல் வாழ்த்துக்கள் !

ஹோலிபண்டிகை பற்றி ஏராளமான காரணங்கள் உண்டு. அது ஹோலி என்றால் ஒரு வித பயிர். அது அன்றுதான் விளையும் அதனால் அக்கால விவசாயிகள் கொண்டாடிய அறுவடை விழா ஹோலியாயிற்று என்பது ஒரு கூட்டம் சொல்வது மதவாதிகள் இரு காரணங்களை சொல்கின்றார்கள், முதலாவது கண்ணன் பூதகியினை கொன்ற நாள், இரண்டாவது இரண்யன் கதை அதாவது கண்ணன் குழந்தையாக இருந்தபொழுது அவனை அப்பொழுதே கொன்றுவிட பூதகி என்றொரு அரக்கி வந்தாளாம். அவள் விஷப்பாலை ஊட்டி குழந்தை கண்ணணை கொல்ல முயன்றபொழுது […]

தலைவி குஷ்பு தமிழக மக்களை பற்றியே சிந்தித்துகொண்டிருப்பவர்

நடிகர்களுக்கு சமூக பொறுப்பு வேண்டும் என்றால் எம்.ஆர் ராதா. அவருக்கு பின் யாருக்கும் இருந்ததாக தெரியவில்லை. அவர் மகள் ராதிகாவே மக்கள் விரோத விளம்பரங்களில் நடிக்கின்றது ஆனால் தலைவி குஷ்பு தமிழக மக்களை பற்றியே சிந்தித்துகொண்டிருப்பவர் ஆம், இன்று தொடங்கும் +2 தேர்வுக்கு வாழ்த்து தெரிவித்து மாணவ மணிகளை உற்சாகபடுத்தியிருக்கும் ஒரே கலையுலக பிரமுகர் அவர்தான். இனி எல்லோரும் தேர்ச்சி பெறுவார்கள், மாணவ உலகம் அவ்வளவு மகிழ்ச்சியாக தேர்வு எழுத செல்கின்றது இப்படி தமிழக மக்களுக்கு வாழ்த்து […]

கார்த்தி சிதம்பரம் கைது

கார்த்தி சிதம்பரம் கைது செய்யபட்டிருக்கின்றார். எப்பொழுதுமே காங்கிரஸ் தன் மீது சாட்டபடும் ஊழல் வழக்குகளை கண்டு ஓடி ஓளியாது, நேர்மையாக விசாரிக்க ஒத்துழைப்பு கொடுக்கும் போபர்ஸ் ஊழல் என வந்தபொழுது ராஜிவ் பதவி இழந்து, அடுத்து தான் குற்றமற்றவர் என நிரூபிக்க போராடியபொழுதுதான் கொல்லபட்டார் தன் கூட்டணி கட்சிகள் ஊழல் செய்தன என்ற குற்றசாட்டு வந்தபொழுது கனிமொழியினை, ராசாவினை கூட அது விட்டுவைக்கவில்லை அப்படிபட்ட காங்கிரசில் இப்பொழுது கார்த்தி சிறைக்கே சென்றிருக்கின்றார். நிச்சயம் நிரபராதியாக வெளிவருவார் மல்லையா, […]

திருப்பதி வந்து வணங்கிணார் ராஜபக்சே

வேட்டி சட்டை சகிதம் திருப்பதி வந்து வணங்கிவிட்டு சென்றிருக்கின்றார் ராஜபக்சே திருப்பதி வந்து அவர் கோவிந்தா என்று சொல்லியிருந்தால் சிக்கல் இல்லை, ஆனால் அவர் ஒருமாதிரி அரசியல் பேசிவிட்டு சென்றிருக்கின்றார் இலங்கையில் சீன ஆதிக்கம் ஒன்றும் ரகசியமல்ல, அதனை தன் பேட்டியில் பகிரங்கமாகவே இந்தியாவினை சீண்டுகின்றார் ராஜபக்சே ஆம், ஹம்பாந்தோட்டை மேம்பாடு, சாலை மேம்பாடு என எல்லாவற்றிற்கும் இந்திய உதவியினை நாடினோம் , அவர்கள் கண்டுகொள்ளவில்லை, ஆர்வமில்லை வேறுவழியின்றி சீனாவிடம் சென்றோம் அவர்கள் வந்தார்கள், ஹம்பாந்தோட்டாவினை 99 […]

காலா டீசர் வந்தாயிற்று

  காலா டீசர் வந்தாயிற்று அதில் கருப்பு என்பது உழைப்பின் வண்ணம் என சொல்லவந்துவிட்டார்கள். மிக சுறுசுறுப்பான உழைப்பாளிகளான ஜப்பானியர், சீனர் இன்னும் பல இனங்கள் கருப்பு அல்ல என்பதை மறந்துவிட்டார் டைரக்டர் படத்தில் நிறைய கருப்பு பாத்திரங்கள் வருகின்றன, வசனங்களும் கருப்பு என்பது போலவே வருகின்றது, அவ்வளவும் கருப்பு. முழு படத்தையும் கருப்பு பணத்தில் எடுத்திருப்பார்கள் போலிருகின்றது. படத்து டீசர் பத்தவை.. என வார்த்தையோடு முடிகின்றது, மயிலு செத்திருக்கும் நேரம் பார்த்து “பத்தவை பத்தவை” என்பது […]

உணவு சரியில்லை – கார்த்தி சிதம்பரம் புகார்…

நேற்று இரவும், இன்று காலையும் சிபிஐ அளித்த உணவு சரியில்லை – கார்த்தி சிதம்பரம் புகார். மனிதர் அவர் வீட்டு சமையல்காரரை உள்ளே இழுக்க நினைக்கின்றார், செட்டியார் வீட்டு சமையல்காரர் தலைமறைவாகி விடுவது நல்லது

சிரியாவில் என்ன நடக்கின்றது என்பதன் சுருக்கம் இதுதான்

சிரியாவில் என்ன நடக்கின்றது என்பதன் சுருக்கம் இதுதான் சிரியாவில் ஆட்சியினை மாற்றலாம் என கருதி போராளிகளை உருவாக்கியது அமெரிக்கா. ஆனால் சிரியா மக்கள் அரசை எதிர்க்கவில்லை, அதிருப்தி உணரவில்லை இதனால் போராளிகளுக்கு வரவேற்பில்லை போராளி குழுக்களில் ஒன்றான அல் நுஸ்ரா என்னவென்று நினைக்கின்றீர்கள்? அல் கைதாவின் ஒரு பிரிவு. பின் எப்படி ஆதரவு கிடைக்கும்? இந்நிலையில் ஐஎஸ் இயக்கத்தின் அட்டகாசம் பெருகி சிரியாவில் குழப்பம் வெடித்தது. அமெரிக்கா ராக்கா நகரில் வீசிய குண்டில் செத்த குழந்தைகள் கணக்கில்லாதவை, […]

அராபத் பற்றி ஒரு வார்த்தை சொல்வாரா , அங்கிள் ?

எங்கள் நிலை இன்னொரு இனத்திற்கு வேண்டாம்; சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான் இப்பொழுது இந்திய தமிழனை யார் கொத்தாக அழித்தார்கள்? அப்பொழுதே சொன்னோம் உலகெல்லாம் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் விசுவாசிகள் அந்தந்த நாட்டில் கொடிபிடிப்பார்கள் என்று. பல நாட்டில் ஆரம்பித்தாயிற்று, இனி தமிழகத்திலும் தொடங்கும் இதோ அங்கிள் வந்துவிட்டார் அல்லவா? பொறுத்து பாருங்கள் திருமுருகன் காந்தி, உதயகுமார் என வரிசையாக வருவார்கள் வந்து ரஷ்யா தாக்குதலை நிறுத்தவேண்டும், அது காட்டுமிராண்டி […]

காலா டீஸர்….

அந்த டீசர் இன்று வந்தால் என்ன? நாளை வந்தால் என்ன? இருக்க போவது என்னவென்றால் ரஜினிக்கு ஒரு மாதிரி பெயிண்ட் அடித்து , ஒரு மாதிரி ஆடை உடுத்தி போராளி போல உலாவ விட்டிருப்பார் ரஞ்சித், ரஜினி ஸ்டைலாக நடப்பார், ஸ்டைலாக சிரிப்பார், பன்ஞ் டயலாக் பேசுவார் அவ்வளவுதான் தெருவில் நடப்பார், அங்கே சுருண்டு கிடக்கும் நாயினை மிதித்து “போ போய் போராடு” என்பார், மாடு கட்டபட்டிருந்தால் “மாட்டின் குணமே போராடுவது அதை கட்டிவைக்காதே” என வசனம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications