பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரத்னவேல் பாண்டியனின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்…

“சனி பிணம் தனி போகாது” என்பார்கள், மயிலு விஷயத்தில் சரியாக இருக்கின்றது என்ன யழவோ தெரியவில்லை தொடர்ந்து மரண செய்திகளாக வருகின்றன , சாக வேண்டியவர் ஏராளமானோர் இருக்க, இருக்க வேண்டிய பலர் இருக்கின்றனர் இப்பொழுது காஞ்சி சங்கராச்சாரியினை தொடர்ந்து, நீதிபதி ரத்னவேல் பாண்டியனும் இறந்துவிட்டாராம் ஒரு பிற்படுத்தபட்ட வகுப்பில் பிறந்து கல்வி ஒன்றினால் மேல் வந்து வழக்கறிஞராகி பின் நீதிபதியாகி , உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் வரை நீதிபதியாக உயர்ந்தவர் அவர். உச்சநீதிமன்ற நீதிபதியாக […]

இங்கே ஆளாளுக்கு கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் வாழ்க என சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

இங்கே ஆளாளுக்கு கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் வாழ்க என சொல்லிகொண்டிருக்கின்றார்கள், டிரம்ப் கூட ஜெருசலேமிற்கு அமெரிக்க தூதரகத்தை மாற்றுவேன் என சொல்லிகொண்டிருக்கின்றார் ஆனால் அங்கே நிலை என்ன? கிறிஸ்துவை யூதர்களுக்கு கொஞ்சமும் இன்றுவரை பிடிக்காது, அவர் தங்கள் பெருமையினை கெடுக்க வந்த கோடாரி காம்பாகவே கருதுகின்றார்கள். தாங்கள் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் இயேசு எனும் குட்டிசாத்தானே முழு காரணம் என்பது அவர்களின் மனமார்ந்த நம்பிக்கை அதனால் ஜெருசலேமில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயங்களை எல்லாம் கண்டுகொள்வதில்லை, சிலவற்றை பல்லை கடித்துகொண்டு பொறுத்துகொள்கின்றார்கள் […]

கலாச்சாரத்தை தேடி தமிழகம் வந்து வாழ்ந்த தங்கத் தலைவி…

ஸ்ரீதேவி எப்படி மரித்தார் என துபாய் சொல்லிவிட்டது, மும்பை திரையுலகம் தாவுத் கட்டுபாட்டில் இருக்கின்றது என சு.சாமி சொல்கின்றார். இன்னும் மும்பை திரையுலகின் இன்னொரு முகம் பற்றி , கலாச்சாரம் பற்றி ஆளாளுக்கு சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் கவனித்தால் ஒன்று புரிகின்றது அந்த கலாச்சாரம் பிடிக்காமல்தான் தலைவி குஷ்பு கலாச்சாரம் நிறைந்த தமிழகத்திற்கு ஓடிவந்து, தமிழ்பெண்ணாக மாறி, தமிழச்சியாகவே நிலைத்துவிட்டார். தமிழச்சியான ஸ்ரீதேவி மும்பை சென்று மாறி மரித்தும் விட்டார். இதிலிருந்து தலைவி மிக நல்ல கலாச்சாரத்தை தேடி […]

1980களில் டி.ராஜேந்தர் அதிரடியாக பேசிகொண்டிருந்தார்

1980களில் டி.ராஜேந்தர் அதிரடியாக பேசிகொண்டிருந்தார். ராமசந்திரன் என்பவரின் மறுபக்கம் மிக இறுக்கமானது என்ற பேச்சுக்கள் வந்த நேரம் அது கங்கை அமரனை மிரட்டியது , ரஜினியினை சீண்டியது என திரையுலகத்தை மிரட்டி ஒடுக்கி வைத்து தமிழகத்தை மகா இறுக்கமாக வைத்திருந்தார் ராமசந்திரன் அப்பொழுது டி.ஆர் மிக துடிப்பாக பேசினார். உண்மையில் மகா தைரியமான பேச்சுகளாக அப்பொழுது கருதபட்டது. அதிரடி கேள்விகளை எழுப்பினார். திமுகவின் தொண்டராக குதித்துகொண்டிருந்தார் டி.ஆர் அவரை பற்றி அதிமுகவின் முக்கிய கூட்டமுடிவில் அவர்களிடம் கேட்டார்கள், […]

கார்த்தி சிதம்பரம் கைது …

என்னதான் படித்திருந்தாலும் , அரசியல் அனுபவமிருந்தாலும் நடப்பு யதார்த்தம் என்பது சிதம்பரம் குடும்பத்திற்கு தெரியவில்லை போலிருக்கின்றது குறி வைத்த உடனே லண்டனுக்கோ, பாரிஸ்க்கோ, சிங்கப்பூருக்கோ சென்றிருக்க வேண்டாமா? மல்லையாவும், லலித்மோடியும், நீரவ்மோடியும் வந்தபின் சீனியாரிட்டிபடி நான் கடைசியாக வருகின்றேன், என் உயிருக்கு ஆபத்து என ஒரு அறிக்கை விட்டிருந்தால் இவ்வளவு சிக்கல் வந்திருக்குமா? தப்பு கணக்கு போட்டிருக்கின்றார் கார்த்தி சிதம்பரம். யாரை பிடித்தால் எங்கு வலிக்கும் என்பது அறியா கூட்டமா? மத்தியில் இருக்கின்றது கனிமொழி போன்ற அரசியல் […]

காஞ்சி பீடத்தின் உச்ச குருவான சங்கராச்ச்சாரியார் மரணம்

இது துயர அதிர்ச்சி செய்திகள் வரும் வாரம் போலிருக்கின்றது, காஞ்சி பீடத்தின் உச்ச குருவான சங்கராச்ச்சாரியார் மரணம் அடைந்துவிட்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன‌ இந்துக்களின் மிக புனிதமான , உயரமான பீடம் அது. அந்த பாரம்பரியமிக்க‌ பீடத்தின் அதி உச்ச குருவாக இருந்து வழிநடத்தியவர் சங்கராச்சாரியார். அவர் மீது கொலை சர்ச்சைகளும் வந்தன. ஆனானபட்ட போப் ஆண்டவர் கூடத்தான் அக்காலத்தில் சிலுவை போரை ஆரம்பித்து ரத்த ஆறு புனிதமான ஜெருசலேமில் ஓட காரணமாயிருந்திருக்கின்றார், அவர் கொலையாளி என […]

கடவுள் சிரியாவினை அழிக்காமல் விடமாட்டேன் என சொன்னாராம்

  இந்த சிரிய யுத்தம் வந்தாலும் வந்தது, அழிச்சாட்டிய கிறிஸ்தவர்களின் அட்டகாசம் தாளவில்லை மூளையினை கழற்றி அதிமுகவினரிடம் கொடுத்துவிட்டார்களா? இல்லை கடலில் எறிந்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை அதாகபட்டது பழைய ஏற்பாட்டில் கடவுள் சிரியாவினை அழிக்காமல் விடமாட்டேன் என சொன்னாராம், அப்படி அழிக்கின்றாராம் கடவுள் அப்படி சொன்ன காலம் என்ன? கிட்டதட்ட 3 ஆயிரம் வருடம் இருக்கலாம். ஆம், சிரியாவின் டமாஸ்கஸ் உலகின் பழமையான நகரங்களில் ஒன்று. இந்த யூதர்கள் எகிப்தில் அடிமையாய் இருந்தபொழுதே டமாஸ்கர் பெரும் நகராய் […]

வரலாற்றில் அமெரிக்கா பாடம் படிக்கவே இல்லை

முன்பு சதாம் குவைத்தை பிடித்தார், சவுதிக்கு வரும் எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை. பல சர்ச்சைகளில் பதிலடி கொடுக்க குறிப்பாக எண்ணெய் உற்பத்தியினை குறைக்க மறுத்ததால் குவைத்தினை அவர் ஆக்கிரமித்தார் திபெத்தை சீனா ஆக்கிரமித்தால் அமெரிக்கா கண்டுகொள்ளுமா என்றால் இல்லை, காரணம் திபெத்தில் எண்ணெய் இல்லை ஆனால் குவைத்திற்காக வந்தது, எப்படி வந்தது? அடுத்தது சதாம் விழுங்கபோவது உன்னைத்தான் என சவுதி அரசை பயமுறுத்தி கால்பதித்தது, வளைகுடா யுத்த முடிந்து கிட்டதட்ட30 வருடம் ஆக போகின்றது, சதாம் இல்லை, […]

டிராபிக் ராமசாமியின் போராட்ட வாழ்வினை படமாக எடுக்கின்றாராம் எஸ்.ஏ சந்திரசேகர்

ஜெயலலிதா இல்லாததால் குளிர்விட்டு போனவர்களில் ரஜினி, கமல் வரிசையில் எஸ்.ஏ சந்திரசேகரும் வந்துவிட்டார். சினிமாவில் அரசியலும் புரட்சியும் பேசிவிட்டு தியேட்டருக்கு வெளியே மகனை முதல்வராக்குவது பற்றிய சிந்தனையிலே இருப்பவர் எஸ்.ஏ சந்திரசேகர், அவர் இப்பொழுது டிராபிக் ராமசாமியின் போராட்ட வாழ்வினை படமாக எடுக்கின்றாராம் அவரே டிராபிக் ராமசாமி வேடத்தில் நடிப்பாராம். அரசியல் படமென்பதால் அவருக்கு வினோத ஆசை வந்திருக்கின்றது. அதாவது அரசியலில் பிசியாக இருக்கும் நடிகர்களை நடிக்க அழைத்திருக்கின்றார் அதில் தலைவி குஷ்புவினை நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கின்றார், […]

துர்கா ஸ்டாலினின் ‘அவரும் நானும்’ நூல்

முன்பெல்லாம் திமுகவில் அண்ணா, பெரியார், திராவிடம் என நூல் வெளியிடுவார்கள் கலைஞர் தானே எழுதிய இலக்கிய‌ நூலை வெளியிடுவார், நெஞ்சுக்கு நீதி போன்றவை எழுதினாலும் அதிலும் கட்சியும் தானும் கடந்துவந்த பாதையினை ஆவணம் போல் சொல்லியிருப்பாரே தவிர சுயபுகழ்ச்சி இருக்காது அனுதினமும் முரசொலியில் எழுதிகொண்டே இருந்ததால் தனிபட்ட முறையில் அவரை பற்றி எழுத அவசியமும் இல்லை முரசொலி மாறன் போன்றவர்கள் கூட திராவிட கொள்கை புத்தகம்தான் எழுதினார்கள் இப்பொழுது திமுக மாறிவிட்டது, உதயநிதி ஸ்டாலின் கோஷ்டிகளின் அழிச்சாட்டியம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications