பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காவேரி வழக்கில் உச்ச நீதி மன்ற இறுதி தீர்ப்பு…

காவேரி வழக்கில் தன் இறுதி தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வெளியிட்டுவிட்டு இனி அப்பீல் கிடையாது எனவும் சொல்லிவிட்டது, இதுவே நாட்டாமை தீர்ப்பு என சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுவிட்டது. கிட்டதட்ட 50 ஆண்டுகளாய் நடந்த இழுபறியில் இனி இழுக்க முடியாதவாறு தீர்ப்பினை சொல்லிவிட்டது மன்றம் இந்த தீர்ப்பில் 177.5 டி.எம்.சி கொடுத்தாக வேண்டும் என உறுதிபட சொல்லியிருப்பதில் மகிழ்ச்சி, 10 டிஎம்சி இடைக்காலத்தில் திறக்க சொன்னாலே மூக்கால் அழும் கன்னடத்தின் செவிட்டில் அடித்து 177.5 கொடு என […]

வங்கி மோசடி நீரவ் மோடி

இந்தியாவில் அடிக்கடி வெளிவரும் ஊழலில் இப்பொழுது பஞ்சாப் நேஷனல் வங்கி சர்ச்சை வந்துள்ளது என்னாயிற்று? நீரவ் எனும் நகை வியாபாரி பல்லாயிரம் கோடிகளை வாங்கிவிட்டு கம்பி நீட்டி விட்டாராம், அவர் 2018ல் மோடியினை சந்தித்தார் என காங்கிரசாரும் இல்லை 2011லே ஊழல் நடந்தாயிற்று என பாஜகவினரும் சொல்ல தொடங்கியாயிற்று ஆக காங்கிரஸ் காலத்தில் தொடங்கிய மோசடி , பாஜக காலம் வரை தொடர்ந்திருக்கின்றது என்பதுதான் விஷயம் ஒன்று சொல்லலாம் இது வளரும் நாடு என்ற முறையில் பல […]

கலகலப்பு 2 : வரலாற்றின் சிறந்த நகைச்சுவை

விடுமுறை என்றால் குஷ்பு படம் பார்க்கவேண்டும், இம்முறை குஷ்பு தயாரித்த படம் “கலகலப்பு 2” வந்திருப்பதால் சங்கத்து தீர்மானபடி ஓடிசென்று நள்ளிரவிலே பெரும்படையுடன் சென்று பார்த்தாயிற்று. தியேட்டர் நிரம்பியிருந்தது குஷ்பு வழங்கும் என்ற டைட்டில் பார்த்தவுடன் தியேட்டர் அதிர்ந்தது, ஆம் உலகிலே ஒரு தயாரிப்பாளர் பெயருக்கு அவ்வளவு வரவேற்பு இருந்த அதிசயத்தை அங்குதான் காணமுடிந்தது படம் 20 வருடத்திற்கு முன்பு வந்த “உள்ளத்தை அள்ளித்தா” “மேட்டுகுடி” “ஜாணகி ராமன்” சாயல், ஆனால் கச்சிதம் என்பது மிக சரியாக வந்திருக்கின்றது […]

சீன புத்தாண்டு 2018 கொண்டாட்டங்கள்

https://youtu.be/Qh1k-mRWIDs  சீன புதுவருடமாம், சொர்க்கத்தில் இருப்பவர்களுக்கு பணம் அனுப்ப வேண்டுமாம். சில பிரத்யோக சீட்டுகளை வாங்கி எரிக்கின்றார்கள், அப்படி எரித்தால் அந்த பணம் வானலோகம் சென்று உரியவர்களுக்கு அடையுமாம் கீழ்வீட்டிலிருந்து சீனர் கிளப்பும் புகை மட்டும் மேலே வருகின்றது, மனிதர் அவர்கள் சமூக கணக்கில் பல கோடிகளை எரித்து ஆனந்த கண்ணீர் சிந்துகின்றார் மூட நம்பிக்கை என்பது உலகின் எல்லா இனங்களிலும் இருக்கின்றது. இதற்கு பதில் அந்த சீட்டு வாங்கும் பணத்தை அப்படியே மேலே நேரடியாக சொர்க்கம் […]

“கோங் சீ பா சாய்” : சீன புத்தாண்டு வாழ்த்துக்கள்

எல்லா நாகரீக இனங்களுக்கும் நாட்காட்டி உண்டு, நாடிகாட்டி இருந்தால் நிச்சயம் ஆண்டு கணக்கு உண்டு, அதில் புத்தாண்டு கொண்டாட்டம் தவிர்க்கமுடியாதது. அதில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு என்றே ஒரு இனம் வாழுமானால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அது சீன இனம், அவர்கள் கலாச்சாரம் அப்படி, என்றைக்கு நாள்காட்டி என ஒன்றை கண்டார்களோ அன்றுமுதல் இன்றுவரை அப்படித்தான், புத்தருக்கு முந்தைய காலமுதல் இன்றைய பொதுவுடமை குடியரசு சீனா வரை மாறாத கொண்டாட்டம் அது. 12 விலங்குகளின் பெயரில் சுழற்சிமுறையில் வரும் […]

என்னய்யா சொன்னார் வாசுகி பாஸ்கர்?

என்னய்யா சொன்னார் வாசுகி பாஸ்கர்? ஆளாளுக்கு பொங்குகின்றார்களே தவிர என்ன சொன்னார் என சொல்லவே இல்லை ஸ்டாலின் எடப்பாடியிடம் கொடுத்த 27 பரிந்துரைகளை ஸ்டாலினே படித்திருக்க மாட்டார் என வாசுகி பாஸ்கர் சொன்னாராம், இதுதான் பிரச்சினையாம் ஸ்டாலினின் அணுகுமுறைகளில் வித்தியாசமிருக்கலாம் ஆனால் மேயர், துணை முதல்வர் என பல பொறுப்புக்களை அவர் வகித்துவிட்டுத்தான் செயல் தலைவராகி இருக்கின்றார் என்பது கவனிக்கதக்க விஷயம் அதனால் சில பரிந்துரைகளை சொல்ல அவருக்கு தகுதி இருக்கின்றது, சொல்லிவிட்டார் ஸ்டாலினின் பரிந்துரைகளை சீண்டும் வா.பாஸ்கர் […]

அமெரிக்காவில் மறுபடியும் துப்பாக்கி சூடு: 17 பேர் பலி…

அமெரிக்காவில் மறுபடியும் துப்பாக்கி சூடு நடந்திருக்கின்றது, இம்முறை 17 பேர் கொல்லபட்டிருக்கின்றார்கள் இது தீவிரவாத தாக்குதலோ, ரவுடி கும்பல் மோதலோ இல்லை காவலர்கள் நடத்திய தடுப்பு தாக்குதலோ அல்ல , மனம் வெறுத்த மனநோயாளிகள் செய்யும் காரியம் நமது ஊரில் கோபம் வந்தால் சிலர் பேசாமல் இருப்பார்கள், சிலர் சீமான் அளவு கத்திவிட்டு அமைதி ஆவார்கள், சிலர் தமிழிசை போல புலம்பிகொண்டிருப்பார்கள் இங்குள்ள மனநிலையும், வாழ்க்கை முறையும் வேறு அமெரிக்கா அப்படி அல்ல, தனிமனித சுதந்திரம் மிக்க […]

பல விஷயங்களில் சறுக்கினாலும் சில விஷயங்களில் மோடி சாதிக்கின்றார்

பல விஷயங்களில் சறுக்கினாலும் சில விஷயங்களில் மோடி சாதிக்கின்றார் இந்தியாவினை சுற்றி சீனா ஆணியடிக்க, சீனாவின் நடமாட்டத்தினை முடக்கும் விஷயங்களிலும் இந்தியா கவனமாக காய் நகர்த்துகின்றது ஜப்பானுடன் நல்லுறவு, வியட்நாமுடன் பிரம்மோஸ் ஒப்பந்தம் , வியட்நாமில் இந்திய துறைமுகம் என அதன் காலடியில் மிரட்டுகின்றது இந்தியா, நிச்சயம் இது அட்டகாசமான திட்டம் அப்படியே பாகிஸ்தானில் சீனா கட்டும் துறைமுகத்திற்கு எதிராக ஈரானிலும் கட்டுகின்றது இந்தியா இப்போது ஓமானின் டக்ம் எனும் துறைமுகத்தை இந்தியா பயன்படுத்திகொள்ள ஒப்பந்தம் தயாராகிவிட்டது, […]

ஹார்லி டேவிட்சன் போன்ற பைக்குகளுக்கு இருக்கும் மதிப்பே தனி

என்னதான் என்பீல்டு புல்லட், ஹீரோ ஹோண்டா , பஜாஜ் என பல பைக்குகள் இந்தியாவில் தயாரிக்கபட்டாலும் , பணக்காரர்கள் இறக்குமதி செய்யும் ஹார்லி டேவிட்சன் போன்ற பைக்குகளுக்கு இருக்கும் மதிப்பே தனி இவை எல்லாம் வெளிநாட்டுதயாரிப்புகள் அவற்றிற்கான சந்தை இந்திய பெரும் பணக்காரர்களுக்கானது, இதில் என்ன சிக்கல் என்றால் இந்திய அரசு இறக்குமதி வரியினை 70% வரை வைத்திருக்கின்றது வெளிநாட்டிலிருந்து பைக் வாங்க வசதி இருக்கின்றதல்லவா? கட்டு வரியினை என கேட்பது இந்திய நிலைப்பாடு, இதில் குறிப்பிட்ட […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications