பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பஞ்சாபில் பாஜக…

கொஞ்ச நாளாக சோர்ந்திருந்த பாஜகவிற்கு பஞ்சாப் அமைச்சர் ஒருவர் அட்டகாசமான உற்சாகம் கொடுத்துவிட்டார் அதாகபட்டது பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடக்கின்றது, பாலிடெக்னிக் ஆசிரியர்களை நியமிக்க அமைச்சர் சரண்ஜித் சிங் முடிவு செய்யவேண்டிய நேரம், இருவர் சம தகுதியுடன் ஒரே இடத்திற்கு தேர்வாக வந்திருக்கின்றார்கள் அமைச்சர் யோசித்திருக்கின்றார், தேர்வுகளிலும் தகுதியிலும் இருவரும் சரிக்கு சமம் என்ன செய்யலாம் என்றவருக்கு கிரிக்கெட் அம்பையர் நினைவு வந்திருக்கின்றது சட்டென டாஸ் போட்டு பூவா? தலையா? விளையாடி அதில் வென்றவருக்கு வேலை என […]

மவுன விரதத்தை முடித்து விட்டு பேச தொடங்கினார் சசிகலா

மவுன விரதத்தை முடித்து விட்டு பேச தொடங்கினார் சசிகலா, இனி ஆறுமுக சாமி கமிஷன் முன் பேசுவார் என்ன பேசுவார்? “2016 செப்டம்பர் 22ம் தேதி காலையில கோழி கொக்கரக்கோன்னு கூவிச்சா, அக்கா காபி கேட்டாங்க…” என்ற ரீதியில் நிச்சயம் கமிஷனை தெறிக்க விடுவார். யாரையும் இந்த கமிஷன் உருப்படியாக விசாரித்ததாக தெரியவில்லை நிச்சயம் சசிகலா விசாரிக்கபட வேண்டியவர், ஆனால் லண்டன் டாக்டர், சிங்கப்பூர் பிசியோ தெரப்பிஸ்ட் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ், அடிக்கடி சந்தித்த வெங்கய்யா […]

எம்ஜியார் நினைவு இல்லம்….

இந்த ராமசந்திரனின் வீடு ஒன்று பாலக்காட்டில் இருக்கின்றதாம், அன்னார் வசித்த வீடாம் அதனால் அதனை அவரின் நினைவு இல்லமாக மாற்றி அவரின் வாழ்க்கை வரலாறை பரப்புவார்களாம் ராமசந்திரன் பாலக்காட்டில் வசித்தது மிக சொற்பமான நாட்களே என்பது வேறு விஷயம், இப்பொழுது ராமசந்திரனின் வாழ்க்கை வரலாறை விளக்க போகின்றார்களாம் என்ன வரலாறு? பெரியார் கொள்கையில் வளர்வதாக சொல்லி பின் பெரியார் சொன்னதையும் மீறி கட்சி உடைத்ததையா? எல்லோரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருக்க இவர் கோவா சூட்டிங்கில் இருந்ததையா […]

வல்லவன் விற்றதே எண்ணெய்

செக்கில் எடுக்கபடும் எண்ணெய் மீது உணவு பாதுகாப்பு துறை ஆய்வு, அது பாதுகாப்பில்லா எண்ணெய் என சில விஷயங்களை உறுதிபடுத்தியது அத்துறை : செய்தி நிச்சயம் இந்த மாரடைப்பு, புற்ற்நோய், கிட்னி பிரச்சினை இன்னபிற நோய்கள் வர இறைச்சி வகைகள் கூட காரணமல்ல பாதுகாப்பாற்ற எண்ணெய் வகைகளே காரணம் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டு இப்பொழுதெல்லாம் மக்கள் செக்கில் ஆட்டபட்ட எண்ணெய்களை வாங்க ஆரம்பித்தாயிற்று சிலரோ கவனமாக மூலபொருளை கொடுத்து எண்ணெய் வாங்கி செல்லும் அளவு விழிப்புடன் இருக்கின்றனர், அப்படியே நலமுடனும் […]

இது கனடா நாட்டு அமைச்சரவை, பின் ஏன் கனடா செழிக்காது

மருத்துவ அமைச்சர் ஒரு மருத்துவர் போக்குவரத்து துறை அமைச்சர் ஒரு விண்வெளி வீரர் பாதுகாப்பு துறை அமைச்சர் முன்னாள் ராணுவ தளபதி இளைஞர் துறை அமைச்சர் வயது 45க்குள் விவசாய துறை அமைச்சர் ஒரு விவசாயி நிதி அமைச்சர் ஒரு வெற்றிபெற்ற தொழிலதிபர் அறிவியல் மற்றும் பொருளாதார அமைச்சர் ஒரு பொருளாதார ஆய்வாளர் சட்ட அமைச்சர் ஒரு நீதிபதி விளையாட்டு துறை அமைச்சர் ஒலிம்பிக் வீரர் பன்மொழி தெரிந்தவர் குடியுரிமை அமைச்சின் பொறுப்பாளர் 50% பெண்கள் கொண்ட […]

ஆந்தராக்ஸ் பவுடர் இப்பொழுது விஷயமாகின்றது…

உலகம் புதுவித மிரட்டலுக்கு ஆளாகியிருக்கின்றது, இப்பொழுதெல்லாம் விஷ பவுடர் பார்சலில் அனுப்பி மிரட்டுகின்றார்கள், விஷயத்தில் சிக்கல் என்னவென்றால் யார் அனுப்புகின்றார்கள் என்பதே தெரியாது அதாவது உலகின் மிக மலிவான ஆயுதம் விஷஆயுதங்கள். செலவு குறைவு பாதிப்பு மிக அதிகம் உதாரணம் நகரின் மையத்தில் விஷவாயு குண்டை வெடிக்க செய்தால் நகரின் உயிர்கள் மட்டும் காலி மற்றபடி கட்டங்கள் எல்லாம் அப்படியே இருக்கும், குண்டூசி கூட பாதிக்கபடாது அந்த விஷ ஆயுதங்களில் பலவகை உண்டு, இப்பொழுது பரவுவது விஷ […]

தென்கொரியாவிலும் ஒரு ஜெயா- சசி போன்ற இரட்டையர்கள் …

ஜெயா சசிகலா போலவே தென்கொரியாவிலும் ஒரு இரட்டையர்கள் இருந்தார்கள், இப்பொழுது சிறையில் நூடுல்ஸ் உறிஞ்சுகின்றார்கள் அதாவது தென்கொரியாவில் அதிபராக இருந்தவர் பார்க் கியூன் இவரின் நெருங்கிய தோழி சோய் சூன் சில். இருவரும் அங்கு செய்யாத அட்டகாசமில்லை, சுருட்டாத செல்வமில்லை அது என்ன தமிழ்நாடா? சில நாட்களிலே இருவரையும் சிறையில் அடைத்தாயிற்று, இப்பொழுது தென்கொரிய சசிகலாவிற்கு 20 ஆண்டு சிறையும் பலகோடி அபராதமும் விதிக்கபட்டிருக்கின்றது தென்கொரிய ஜெயலலிதாவிற்கு இன்னும் விசாரணை முடியவில்லை ஆக உலகெலாம் தோழிகள் சிறைசெல்லும் […]

ஆட்சியை கவிழ்க்க ஒரு நிமிடம் போதும் : ஸ்டாலின்

தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தால் திமுகவுக்கு ஒரு நிமிடம் போதும் : ஸ்டாலின் பின்னர் ஏன் கலைக்கவில்லை, அன்னார் கடிகாரத்தில் 1 நிமிடம் என்பது சர்வதேச கடிகாரத்தில் 4 வருடமா? இவர் கொல்லைபுறம் வழியாக ஆட்சிக்கு வரமாட்டாராம், தேர்தலில் வென்றபின் ஆளுநர் வீட்டுக்கு வந்து கையினை பிடித்து இழுத்தபின் நேர் வழியில் வருவாராம் நேர்வழியில் வெல்ல தேர்தல் வேண்டும், தேர்தல் நடக்க ஆட்சி கலையவேண்டும் என சொல்ல கூட இவர் அருகில் யாரும் இல்லையா? […]

நடமாடும் தாஜ்மஹாலின் படத்தோடு காதலர் தின வாழ்த்து !!!

கரூரில் தங்க தலைவிக்கு பெரும் கூட்டம் சேர்ந்தது என்ற மிக பெரும் மகிழ்ச்சியான செய்தியினையும், அங்கு தலைவி பக்கோடா கொடுத்து மோடியினை தில்லாக கலைத்திருக்கின்றார் எனும் அதிரடி செய்தியினையும் கேட்டு சங்கம் பெரு மகிழ்வு கொள்கின்றது உலகிற்கெல்லாம் இந்தியாவின் நடமாடும் தாஜ்மஹாலின் படத்தோடு காதலர் தின வாழ்த்து சொல்வதில் சங்கம் மிக்க மகிழ்ச்சி அடைகின்றது

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த நாள்…

தமிழகம் மிக அமைதியான மாநிலம் அதன் மீது திணிக்கபடும் அடக்குமுறைகளை எதிர்கொள்வதை தவிர எப்பொழுதும் அது சட்டம் ஒழுங்கினை மதித்தே வருகின்றது அப்படிபட்ட தமிழகத்தின் மாபெரும் களங்கமாக ராஜிவ் கொலை நடந்தது , தமிழகம் அமைதி பூங்கா என மிக தைரியமாக பலமுறை வந்த ராஜிவ் அன்றும் அப்படியே வந்தார், வந்தவர் திரும்பவில்லை தமிழக சட்டம் ஒழுங்கிற்கான முதல் சவால் அன்று விடபட்டது, சாட்சாத் விடுத்தது புலிகள் அதன்பின் இந்தியா மிக கடுமையாக இறங்கி அவர்களை விரட்டி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications