பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சாமியார் + தொழிலதிபரான பாபா ராம்தேவ் ஐஐடியில் சிறப்புரை

நாடு மிக நாசமாய் சென்றுகொண்டிருக்கின்றது என்பதற்கு பெரும் உதாரணம் சமீபத்தில் நடந்திருக்கின்றது அதாகபட்டது இந்தியாவின் பெரும் அறிவு களஞ்சியமாக கருதபடுபவை ஐஐடிக்கள், வெளிநாடுகளால் இந்தியாவில் மதிக்கபடும் கல்விநிலையங்களில் முதலிடம் அதற்குத்தான் அப்படிபட்ட தரம்வாய்ந்த கல்வி நிலையத்தில் ஒரு விஞ்ஞானியினை பேச அழைத்தார்கள், இப்பொழுது இந்தியாவில் விஞ்ஞானிகள் இரண்டே ரகம் ஒன்று யோகா சாமிகள் இன்னொன்று பசுமாட்டின் ஹோமிய ஆராய்ச்சியாளர்கள் இதில் இப்போதைய சாமியார் + தொழிலதிபரான பாபா ராம்தேவினை ஐஐடியில் சிறப்புரை ஆற்ற அழைத்தார்களாம், அந்த பிரபல […]

தமிழ்கடவுள் முருகன் எப்படி கலராக இருப்பான்?

தமிழ்கடவுள் முருகன் எப்படி கலராக இருப்பான்? கருப்பாக மீசையோடுதான் இருப்பான் : சைமன் அங்கிள் சைமன் காமெடி இப்படித்தான் இருக்கும், அவர் காதை திருகி “டேய் முருகன் இமயமலையில் இருந்து தெற்கே வந்தவன், அவன் வளர்ந்த இடம் கைலாயம், அந்த பனிமலையில் கொழுகொழு பேபியாகத்தான் வளர்ந்திருப்பான், உண்மையில் அவனொரு வந்தேறி” என சொல்ல ஒருவருமில்லை

தைவான் மக்களுக்காக பிரார்த்திப்போம்

சீனா குதற நினைக்கும் தைவானை நிலநடுக்கம் தூக்கி போட்டு அடித்திருக்கின்றது முதல் செய்தியில் 4 பேர் பலி என கணக்கு தொடங்குகின்றது, கட்டங்கள் சரிந்தும் தொங்கிகொண்டும் , தமிழக அரசு போலவும் நிற்பதை கண்டால் மாபெரும் அச்சம் மேலோங்குகின்றது. மிக கவனமாகவும், அழகாகவும், பிரமாண்டமாகவும் கட்டபட்ட கட்டங்கள் எல்லாவற்றையும் நொடியில் சரித்து தள்ளிவிட்டது பூமி எனினும் தலைநகர் தைபேயில் உள்ள உலகின் மிக உயர கட்டிடத்திற்கு ஆபத்தில்லை, அங்கு நிலம் அதிரவில்லை உலக நாடுகள் உதவிபொருட்களோடு விரைகின்றன, […]

லண்டனின் இலங்கை சுதந்திரநாள்…

என்னதான் சிங்கள அரசு தந்திரமாக நடந்தாலும் அதிகாரிகளில் சில‌ அடிமுட்டாள்கள் உண்டு என்பது முன்பே தெரிந்த விஷயம். அப்படி ஒருவர் இப்பொழுது காட்சிக்கு வந்திருக்கின்றார் அதாவது லண்டனின் இலங்கை சுதந்திரநாள் கொண்டாடபட்டது, இலங்கையின் லண்டன் தூதரகமும் சிறபித்தது என்னதான் புலிகொடி பிடித்தாலும் ஐரோப்பிய ஈழதமிழர் இன்றுவரை இலங்கை குடிமக்களே, வைகோ ஈழம் சென்றது போல அல்லது புலிகள் தமிழகம் வந்தது போல அடையாளமின்றி செல்ல முடியாது. இலங்கை குடிமகன் என்ற அடையாளம் எக்காலமும் உண்டு இதனால் சிங்களர் […]

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் பெரும் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் பெரும் ஆர்ப்பாட்டம், சர்கஸ் ஆட்சி என ரகளை காங்கிரஸின் காமெடி சில நேரங்களில் இப்படித்தான் இருக்கும், கடும் காற்றில் அணைய போகும் அந்த விளக்கினை இவர்கள் ஏன் ஊதி அணைக்க வேண்டும்? 4 வருடமாக விட்டுவிட்டு கடைசி காலத்தில் ரவுண்டு கட்டுவார்களாம், இப்பொழுதுதான் மோடி பொய் பேசுவதை கண்டுபிடித்தார்களாம், ரொம்ப லேட். இந்த களபேரத்திலும் தமிழகத்தில் இருந்து சென்ற 39 எம்பிக்கள் என்ன செய்வார்கள் என நினைக்கின்றீர்கள்? வழக்கமானதுதான் சில படங்களில் செந்தில் இலைமுன் […]

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக‌ இந்துபெண் செனட் உறுப்பினராக பதவியேற்றார் : செய்தி

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக‌ இந்துபெண் செனட் உறுப்பினராக பதவியேற்றார் : செய்தி “இது நாம் பாகிஸ்தானுக்கு கொடுத்த எச்சரிக்கையால் வந்த வெற்றி என முழங்கிவிடுவோமா? தொடங்கிவிட்டால் போதும், கொஞ்சமும் யோசிக்காம ஊரெல்லாம் சொல்ல நம்மகிட்ட பெரும் கூட்டம் இருக்கு யோவ் இப்படி எல்லாம் பேசிட்டு இந்தியா தாண்ட முடியாது, அதுவும் அவனுக எமபாதகனுக, நாங்கள் இந்துபெண்ணுக்கு பதவி கொடுத்துவிட்டோம், மோடி அரசில் இஸ்லாமியர் இல்லை கிறிஸ்தவர் இல்லை என அவர்கள் சொல்லி வம்பு இழுத்தால் என்னாகும்? சும்மாவே […]

இன்னும் 3 வாரத்தில் தமிழிசையின் பதவி காலாவதியாகின்றது

இன்னும் 3 வாரத்தில் தமிழிசையின் பதவி காலாவதியாகின்றது உலகிலே பதவி இழக்கும் தலைவருக்கு பரிவட்டம் கட்டி அனுப்பிவைக்கும் கட்சி நம்ம கட்சிதான்  பக்கோடா விற்பனை செய்வது கேவலமான தொழில் அல்ல : தமிழிசை எங்கே உங்கள் சித்தப்பா வந்தகுமாரை பக்கோடா விற்க சொல்லுங்கள் பார்க்கலாம்? அட அதுகூட வேண்டாம், அந்த‌ கிட்னி ஸ்பெஷலிஸ்ட் சவுந்திரராஜன் எனும் மருத்துவரை பக்கோடா கம்பெனி தொடங்க சொல்வீர்களா?  18 பேரில் ஒருவரைத்தான் முதல்வராக்குவேன்: தினகரன் என்னவோ இயேசுநாதர் தன் சீடர்களுக்கு வாக்கு […]

அப்படி மைத்ரிபாலா என்ன பேசிவிட்டார்?

இலங்கையில் சில இடங்களில் இந்நாளைய அதிபர் மைத்திரிபாலா பேச்சில் அசத்துகின்றார், அதெல்லாம் இங்குள்ள பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்கின்றன‌ சிங்கள, ஈழ மக்களின் ஒற்றுமையான பொற்காலத்தை நினைவுபடுத்தி கசப்பான காலங்களை கடக்க சொல்லும் அவரின் அணுகுமுறை இங்குள்ளவருக்கு எப்படி பொறுக்கும்? அதனால் கண்கள் சிவக்க மைத்திரிபாலா ஒழிக என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் அப்படி மைத்ரிபாலா என்ன பேசிவிட்டார்? அற்புதமான வரலாற்றை சொல்லியிருக்கின்றார் அதாகபட்டது உலகின் முதல் பெண்பிரதமர் சிரிமாவோ பண்டாராநாயக, உலக நாடுகளின் முதல் பெண்பிரதமர் இலங்கையர் என்பதில் […]

மாலத்தீவால் மோடிக்கு என்ன பிரச்சினை?

எல்லா நாட்டு ராணுவத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அந்நிய நாட்டில் தன் படைகளை இறக்கி தங்கள் வலிமையினை , வேகத்தை சோதித்துபார்க்கும் எண்ணம் இருக்கும் எவ்வளவு நேரம்? எவ்வளவு துல்லியம்? எவ்வளவு வீரர்களை எவ்வளவு குறிப்பிட்ட நேரத்தில் இறக்கலாம்? ஆயுதங்கள் நிலை என்ன? என்னென்ன சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்? அதனை மேம்படுத்துவது எப்படி போன்ற தரவுகளை அவர்கள் அதில்தான் தெரிந்துகொள்ள முடியும் உலகெல்லாம் அமெரிக்கா சண்டையிடுவதும், இன்னும் சில நாடுகள் பல விஷயங்களை பரிசோதிப்பதும் அப்படித்தான் இந்தியா […]

தேடி சென்ற கப்பலும் நேற்று காணாமல் போய்விட்டதாம்…

மலேசிய விமானம் காணாமல் போய் 4 வருடம் ஆன நிலையில் தேடல் தொடர்ந்தது, இப்பொழுது அடுத்த அதிர்ச்சி வந்திருக்கின்றது ஆம் அதனை தேடி சென்ற கப்பலும் நேற்று காணாமல் போய்விட்டதாம், அதிர்ந்து நிற்கின்றது உலகம் பர்முடா முக்கோணம் போல ஏதோ மர்மம் நிலவுவதாக செய்திகள் வருகின்றன, இது பசிபிக் கடலில் ஆங்காங்கு நிலவுகின்றது என முன்பே செய்திகள் சொன்னாலும் இப்பொழுது திகிலடைய செய்கின்றது மலேசிய விமானம் இந்த மர்ம இடத்தில் காணாமல் போயிருக்கலாம், ஆனால் இந்த மர்ம […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications