பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

லால் பகதூர் சாஸ்திரி

அந்த மனிதன் அப்பழுக்கற்ற தேசபக்தன், சர்ச்சைக்கு அப்பாற்பட்ட அர்பணிப்பும் , தூய்மையும் தேசபற்றும் அவனுடையது வடக்கே ஒரு காந்தி , தெற்கே ஒரு காலா காந்தி (காமராஜர்) என காலகாலமாக ஏமாற்றினார்கள், உண்மையில் வடக்கே ஒரு குள்ள லால்பகதூர் தெற்கே ஒரு வளர்ந்த லால் பகதூர் என்றுதான் இருந்திருக்க வேண்டும் அவர் வாழ்க்கையும், அவர் மரணமும் ஏன் அவர் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் இந்த நாட்டிற்கானது. லால் பகதூர் சாஸ்திரி. இந்திய வரலாற்றில் எளிமைக்கும் நாட்டுபற்றிற்கும் தியாகத்திற்கும் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 01

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 01 “தன்னை யறியு மறிவு தனைப்பெறில்பின்னைப் பிறப்பில்லை வீடு” தன்னை அறியும் அறிவுதனை பெறில் பின்னை பிறப்பில்லை வீடு என்பது இக்குறளின் பொருளாகும் அதாவது தன்னையே யார் என அறிந்து கொண்டால், நான் என்பது உடலா மனமா ஆத்மாவா என்பதை மிக தெளிவாக அறிந்து கொண்டால் அடுத்த பிறவி இல்லை, இந்த பிறவியே தான் யார் என்பதை அறிய கொடுக்கபட்டது என்பது […]

அபிராமி அந்தாதி : 53

“சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்தகன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்தன்னந்தனியிருப்பார்க்கு இது போலும் தவமில்லையே” தன் முந்தையபாடலில் அன்னையின் அடியார்கள் அடுத்தபிறவியில் அரசர்களாக பிறப்பார்கள் என சொன்னார் அல்லவா, அப்படி சொல்லிவிட்டு அன்னையின் பக்தியில் மறுபடியும் மூழ்குகின்றார், அன்னையின் திருமேனியினை கண்முன் தியானிக்கின்றார், அப்படி தியானித்தவர் அன்னையின் பொலிவான தோற்றம் பற்றி மேற்கண்டபாடலை பாடுகின்றார் பாடலை கொஞ்சம் ஆழமாக காணலாம் அன்னையின் தோற்றத்தை அவளின் இடுப்பிலிருந்து காண்கின்றார் பட்டர் “சின்னஞ்சிறிய […]

நவராத்திரி சிந்தனைகள் : 05 & 06

லட்சுமி எனும் ஐஸ்வர்யம் அருளும் தெய்வத்தை அலைமகள் என்றார்கள் இந்துக்கள், அலையாடும் நீரில் அமர்ந்திருப்பவள் என அதற்கு பொருள் “ஆறில்லாத ஊர் பாழ்” என்பார்கள், ஆறு போல் நீர் இல்லா ஊர் சிறக்காது. நீர் வளமே மானுடம் வாழ செழிக்க முதல் வளம். நீர் இன்றி எந்த தொழிலும் சிறப்பதில்லை, உயிர்களும் பயிர்களும் வாழவும், எல்லா வகை தொழில்களும் நடக்கவும் நீர்வளம் அவசியம். இதனால் நீர் இருக்கும் இடம் லட்சுமி இருப்பாள் என நீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 97

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 97 “எவரெவ ரெத்திறத்த ரத்திறத்த ராய்நின்றவரவர்க் காவன கூறி – எவரெவர்க்கும்உப்பாலாய் நிற்பமற் றெம்முடையார் தம்முடையான்எப்பாலு நிற்ப தென்” நல்ல ஆசிரியர் என்பவர் தன் மாணக்கர்களில் எவர் எந்தத் திறம் உடையவர் ஆயினும், அவரவர் அவருடைய திறமைக்கு ஏற்ப நின்று கடமையாற்றி அவரவர்க்கு ஆவன கூறி அவரை எல்லோருக்கும் மேலாக உயர்த்தி வைப்பர் , பரம்பொருள் பக்தனுக்கு அருள்வழங்கி காப்பது போல் காத்து வருவார்கள் நல்ல ஆசிரியர்கள் தன் மாணவனுக்கு அவன் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 09

“பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றிஅறுத்துருவ மாற்றி யிரு” பிறப்பற்ற நிலையினை அடைவதே மோட்சவீடு பாக்கியமாகும், சிறந்த ஒப்புமை (பேர் உவமை) இன்றி, அதாவது உலகோடும் உலக இயல்போடும் ஒன்றி இராமல் அந்த இயல்பை அறுத்து தன்னை உருமாற்றி இருத்தல் வேண்டும் என்கின்றார் ஒளவையார். மோட்சம் என்பது பிற்ப்பற்ற நிலையே, அந்த நிலையினை அடைய உலக இயல்பை அறுத்து தன் மானிட இயல்பிலிருந்து தன்னை அறுத்து , தன் இயல்பை மாற்றி சிவ சிந்தனையில் இருத்தல் வேண்டும் என்கின்றார் […]

நவராத்திரி சிந்தனைகள் : 04

மானிட வாழ்வினை இயக்கும் மிகபெரிய சக்தி, ஆதார சக்தி செல்வம் என்பதை உணர்ந்திருந்த இந்து ஞானியர் அதனை பெருக்கவும் காக்கவும் அதன் மூலம் தானும் உய்ந்து சமூகத்தையும் ஒருவன் உய்விக்கலாம் என்பதை உணர்ந்தார்கள் “பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை” என அதை தெளிவாக சொன்னார் வள்ளுவ நாயனார். செல்வம் எல்லோரிடமும் இருப்பதல்ல, திறமையும் அறிவும் இருக்குமிடம் எல்லாம் செல்வம் இருப்பதில்லை என்பதையும், செல்வம் இருந்தாலும் அதை கொண்டாடி அனுவிக்க பலவகை காலசூழலும் வாய்ப்பும் வரவேண்டும் என்பதையும் அதை தெய்வமே […]

நீதிநெறி விளக்கம் : 96

“இசையாத போலினு மேலையோர் செய்கைவசையாகா மற்றையோர்க் கல்லாற் – பசுவேட்டுத்தீயோம்பி வான்வழக்கங் காண்பாரை யொப்பவேஊனோம்பி யூன்றின் பவர்” மேலோர் செய்யும் பல காரியங்களை இழிபுத்தி கொண்ட மக்களால் புரிந்து கொள்ள முடியாது, அதனை இகழ்ந்து பரிகசிப்பர். பசுவின் நெய்கொண்டு யாகம் வளர்த்து உலக நன்மைக்கு பாடுபடும் மேலோரும், பசுவினை கொன்று தின்னும் கீழோரும் ஒப்பாகமுடியுமோ? பெரியோர்கள் செய்யும் காரியங்களையும் அவற்றின் பலனையும் புரிந்துகொள்ள முடியா மூடர்கள் பெரியோரை பரிகசிப்பார்கள் இழிவு செய்வார்கள் அவர்களால் மேல் மக்களை புரிந்துகொள்ளவும் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 08

“பிதற்று முணர்வை யறுத்துப் பிரபஞ்சவிகற்ப முணர்வதே வீடு அர்த்தமில்லா உணர்வை அதாவது உடலே பிரதானம் எனும் உணர்வை அறுத்து உண்மையான பொருளை தேடி தவமிருந்து பிரபஞ்சத்துடன் கலப்பதே வீடு பேற்றுக்கான வழி என்கின்றார் ஒளவையார். அழிய கூடிய உடலிலும் அதன் ஆசைகளிலும் மனதை வைத்து ஆசையினை செலுத்தி வாழ்வினை வீணாக்காமல் அழியாத நித்தியமான பிரபஞ்ச சக்தியினில் கரைந்து வீடு பேறு அடைய முயற்சிக்க வேண்டும் என்பது ஒளவை சொல்லும் போதனை

நவராத்திரி சிந்தனைகள் : 03

நவராத்திரி சிந்தனைகள் : 03 அன்னபறவை வெண்மை நிறமானது, எப்பொழுதும் முழு வெண்மையாக காட்சி அளிப்பது. வெண்மை என்பது தூய்மையின் நிறத்தை குறிப்பது, கலைகளும் அதன் பலனும் எப்பொழுதும் தூய்மையாய் உயர்ந்ததாய் இருக்கவேண்டும் என்ற தத்துவத்தில் அன்னபறவை சரஸ்வதிக்கு சின்னமாக்கபட்டது அன்னம் எப்பொழுதும் சுத்தமாக காட்சியளிக்கும், சுத்தமில்லாமலோ அழக்கு அடைந்தோ அதனை காண முடியாது, கலைகள் எப்பொழுதும் சுத்தமாக தூய சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்ற தத்துவம் அதில் இருந்தது அன்னம் நீர், நிலம், வானம் என […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications