பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெருசலேம் தீர்மானம் ஐநா பொதுசபையில் தோல்வி

ஜெருசலேம் விவகாரத்தில் ஐநா பொதுசபையில் தீர்மானம் தோல்வியுற்று கடும் அவமானத்திலும் ஆத்திரத்திலும் இருக்கின்றது அமெரிக்கா ஆனாலும் மிகபெரும் பணக்கார நாட்டாமை அல்லவா? நிச்சயம் சும்மா இருக்கமாட்டார் இனி எங்கெல்லாம் என்னவெல்லாம் நடக்கபோகின்றதோ தெரியாது. ஆனால் அவமானத்தை பழிதீர்க்க மிக சரியான நேரம் பார்த்துகொண்டிருப்பார்கள் யார் சோலி எல்லாம் முடிக்கவேண்டும் என்ற பட்டியல் டிரம்ப் மேஜையில் இப்பொழுதே இருக்கும்

கலைஞருக்கு ராசா உருக்கமான கடிதம் : செய்தி

கலைஞருக்கு ராசா உருக்கமான கடிதம் : செய்தி ஏன் கடிதம் எழுதவேண்டும், நேரே சென்று பார்த்து பேசினால் முடிந்தது விஷயம், ஆனால் ஏன் எழுதினார்? மறைமுகமாக ராசா சொல்லவரும் வரி இதுதான் “ஆடுங்கடா என்ன சுத்தி, நா அய்யனாரு வெட்டு கத்தி..”  

வேலைக்காரன் : குறுவிமர்சனம்

காந்தி, நேரு,காமராஜர் எல்லாம் நாட்டுநலன், மக்கள் பொறுப்பு எல்லாம் நிறைய‌ பேசி வீணாக போய்விட்ட தேசத்தில், இவைகள் எல்லாம் சினிமாவில் பேசி சம்பாதிக்கவேண்டியது என என்றோ கண்டுகொண்டது தமிழகம் அப்படி வேலைக்காரன் என்ற படத்திலும் தமிழ்சினிமாக்காரர்கள் பேசியிருக்கின்றார்கள் என்கின்றது படம் பார்த்தவர்களின் விமர்சனம். இதிலும் வழக்கம்போல் சம்பாதிப்பார்களா என்பது விரைவில் தெரியும்

நடிகர் ரஜினிகாந்த் – தமிழருவி மணியன் திடீர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த் – தமிழருவி மணியன் திடீர் சந்திப்பு ரஜினிக்கு எப்பொழுதெல்லாம் நேரம் போகவில்லையோ அப்பொழுதெல்லாம் இந்த தமிழருவி மணியனுக்கு போன் போட்டு அழைத்து பேசிகொண்டிருப்பார் போல‌ எத்தனை பெரும் தலைவர்கள் எல்லாம் பேசியும் ஹா ஹா என நழுவிய ரஜினி, மணியனுக்கு மட்டும் மசிவாரா? இன்னும் கொஞ்சநாளில் பாதிக்கபட்ட ரசிகர்களில் ஒருவராக மணியனும் ” கொஞ்சமாவது அந்த ஆளுக்கு இரக்கம் இருக்காய்யா..” என கதறப்போவது உறுதி இந்த ரோகித் சர்மா என்பவருக்கும் கனிமொழிக்கும் ஒரே ராசி […]

பெரும் துறைமுகம் கன்னியாகுமரி மாவட்டத்தில்…

கொழும்பு துறைமுகத்திற்கு நிகராக பெரும் துறைமுகத்தை கன்னியாகுமரி மாவட்டம் இணையத்தில் தொடங்குகின்றது மத்திய அரசு இதனை எதிர்த்து கிளம்பிவிட்டார்கள், அய்யகோ இது வாழ்வாதார பிரச்சினை, இது எங்களை அழித்துவிடும் என ஒப்பாரி குரல் தொடங்குகின்றது இப்படி எல்லாவற்றிலும் அழுதுகொண்டிருந்தால் எங்கிருந்து திட்டங்கள் வரும்? எங்கிருந்து வளர்வார்கள்? சென்னை வளர்கின்றது, மும்பை வளர்கின்றது என ஒப்பாரி வைக்க வேண்டியது, சரி உங்களையும் வளர்த்துவிடுவோம் என்றால் அய்யோ என் வாழ்வாதாரம் என்னாகும் என குப்புறபடுத்து அடம்பிடிக்க வேண்டியது எம்மாதிரி மனநிலை […]

தொழிலதிபர்கள் விடுதலையா?

இப்பொதுதெல்லாம் இந்தியாவில் தொழிலதிபர்கள் சம்பந்தபட்ட வழக்குகளில் பலரை விடுதலை செய்கின்றார்களாம், அங்கு சென்று பார்த்துத்தான் விடுவோமா? இந்த லலித்மோடி பயலும் கூட வந்தால் நன்றாக இருக்கும்  

கக்கன் மறைந்த தினம் 23 டிசம்பர்… அழுவோம் வாய்விட்டு அழுவோம்

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு காலத்தில் தூய்மையான தியாகிகளும், மக்களை தவிர ஏதும் சிந்தியா மகா உத்தமர்களும் இருந்தார்கள், அப்படியும் ஒரு பொற்காலம் இருந்தது அப்படி ஒரு குறையும் சொல்லமுடியாத தூய்மையான அரசியல்வாதிகளில் ஒருவர்தான் கக்கன் , காந்தி, சாஸ்திரி, காமராஜரை போலவே மகா தூயவாழ்வு வாழ்ந்த அரசியல் மகான் அவர் சுதந்திரபோராட்ட தியாகி, வெள்ளையனிடம் சிறையில் சித்திரவதை பட்டவர்களில் அவரும் உண்டு, கடுமையான அடிகள் அவை சுதந்திர இந்திய பொதுதேர்தலில் மதுரை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டவர். […]

அந்த வீடியோ வந்து இருநாட்கள் ஆகின்றது…

அந்த வீடியோ வந்து இருநாட்கள் ஆகின்றது, அதன் உண்மை தன்மை அறிய ஒரு அம்மா விசுவாசியுமில்லை. அதனை பார்த்து அழ ஒரு தொண்டனுமில்லை ஜெயா பற்றிய பிம்பம் உடைந்து சிதறுகின்றது, இனி ஜெயாவின் மர்மத்தையோ அவரின் படத்தினையோ காட்டி யாரும் வோட்டு வாங்க முடியாது என விளங்குகின்றது மிக எளிதாக அந்த வீடியோவினை கடந்துவிட்டது தமிழகம், யாருக்கும் அனுதாபமில்லை யாருக்கும் சோகமில்லை தமிழகம் அதன் போக்கில் இயங்குகின்றது, சசிகலா குடும்பத்தில் மட்டும் வெட்டு குத்து இருக்கும் போல‌ […]

தனுஷ்கோடி புயலில் அழிந்த சம்பவம் நடந்து 53 ஆண்டுகள் ஆகின்றன

சுனாமி எப்படி இருக்கும் என நமக்கு 2004 வரை தெரியாது, தெரிந்த பின்பு பட்ட கலக்கம் வாழ்நாள் வரை தீராது அப்படித்தான் புயல் என்பது எவ்வாறான அழிவுகளை ஏற்படுத்தும் என்பது தனுஷ்கோடி அழிவில்தான் தமிழகத்திற்கு புரிந்தது. ஒரு ஊரே புயலில் அழிந்த கோர சம்பவம் அது. ஆறா துயரம் அது அது பழமை வாய்ந்த ஊர், ராமர் காலடிபட்ட இடமாகவும் இருந்தது. வெள்ளையன் அந்த தனுஷ்கோடி வரை ரயில் இயக்கினான், அங்கிருந்துதான் இலங்கையின் தலைமன்னார் வரை கப்பல்கள் […]

உலகில் ஆரியபட்டர், பாஸ்கரருக்கு பின் இந்தியரின் மதிப்பினை உயர்த்தியவர் ராமானுஜம்

கணிதம் எல்லோருக்கும் புரியாது,அதற்கொரு ஞானமும் வரமும் வேண்டும், இன்னும் சாதிக்க வேண்டுமென்றால் தனிதிறமை வேண்டும், இவை எல்லாம் அமைந்து உலகில் ஆரியபட்டர், பாஸ்கரருக்கு பின் இந்தியரின் மதிப்பினை உயர்த்தியவர் ராமானுஜம். அவர் காலத்தில் கணித உலகில் சிலர் தத்தி நடை பழகி கொண்டிருந்த பொழுது, அவர் ஒலிம்பிக்கில் ஓடி கொண்டிருந்தார், சில நடிகர்கள் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் ஆஸ்கார் அவார்டுகளை குவித்தது போன்றது ராமானுஜரின் சாதனைகள். ஏழை குடும்பம், கணிதம் தவிர வேறு எல்லா பாடமும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications