பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அண்ணே தனி தமிழ்நாடுதான் தீர்வுண்ணே….

அண்ணே தனி தமிழ்நாடுதான் தீர்வுண்ணே, அதுதான் இனி தமிழன் வாழ வழி அப்படியா, ஆமாண்ணே சரி தனியா பிரிஞ்சா என்ன செய்வீங்க? முதல்ல சிங்களன அடிப்போம்ணே, தனியா ஈழம் வாங்குவோம் அப்புறம்? கன்னடனுக்கு அடிக்கிற அடியில தானே காவேரி வரும்ணே அதுதான் இப்பொழுதே வருதே நாங்க சொல்றது வருஷம் பூராவும்ணே அப்புறம்? ஒலிம்பிக்ல எல்லா பதக்கமும் தமிழ்நாட்டுக்குண்ணே, அப்படி பயிற்சி அளிப்போம், ஒலிம்பிக் இங்கேயே நடத்த வைப்போம்ணே அப்புறம்? எல்லாமே தமிழ்ணே, அமெரிக்க டாலருக்கு பதிலா வள்ளுவர் […]

மஹா லக்‌ஷ்மி என்பவர் என்ன சொல்லிவிட்டார்?

அந்த Maha Laxmi என்பவர் என்ன சொல்லிவிட்டார்? சர்ச்சை ஓடுகின்றதே தவிர என்ன செய்தி என தெரியவில்லை. அவர் பக்கமும் எனக்கு தடை செய்யபட்டிருக்கின்றது, அந்த பக்கம் என்றல்ல யாரெல்லாம் அவரவர் கட்சியில் , மதத்தில், இயக்கத்தில் அதிதீவிரமாக இருக்கின்றார்களோ பக்கம் எல்லாம் நான் வர கூடாது என விரட்டிவிடுவார்கள். என்ன நடந்தது? தெரிந்தவர்கள் சொல்லலாம்

அரேபியாவில் பேரழகி குஷ்பூ …

தங்க தலைவி இப்பொழுது அரேபிய நாடுகளில் சுற்றுபயணம் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன‌ இப்பொழுது குவைத் பக்கம் தலைவி தரிசனமாகியிருக்கின்றார் லைலாவிற்கு பின் பெரும் பேரழகியினை பார்க்கும் அந்த பகுதி பெருமகிழ்ச்சி கொள்கின்றது. அரேபிய கதையில் வரும் பாக்தாத் பேரழகு பெண்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என மக்கள் வியந்துகொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம்.  

தினகரனுக்கும் பழனிச்சாமி கோஷ்டிக்கும் போட்டி…

தமிழகத்தில் சத்தமில்லாமல் ஒரு போட்டி நடக்கின்றது, அது தினகரனுக்கும் பழனிச்சாமி கோஷ்டிக்கும் ஆனது ராமசந்திரனுக்கு நூற்றாண்டு விழா என பழனிச்சாமி போகும் இடத்திற்கெல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தினகரன் கோஷ்டி முந்தி சென்று பலம் காட்டிவிட்டு வருகின்றது இம்முறை தூத்துகுடியில் பலம் காட்டுகின்றார்கள் , பழனிச்சாமிக்கு முன்பு எப்படி செல்லலாம் என யோசித்த தினகரனுக்கு வஉசி நினைவுக்கு வந்தார், உடனே சென்று கூட்டம் கூட்டி தினகரன் பலத்த அழிச்சாட்டியம் நேற்று பழனிச்சாமி சென்றிருக்கின்றார் இவர்கள் இருவரும் […]

அன்புசெழியன் அலுவகத்தில் வருமான வரி சோதனை நடக்காதா?

இந்த அன்புசெழியன் என்பவர் அலுவகத்தில் எல்லாம் வருமானவரி சோதனை எல்லாம் நடக்கவே நடக்காதா? எல்லா விஷயத்திலும் வரிந்து கட்டும் கமல்ஹாசன் என்பவரை அன்புசெழியன் விவகாரத்தில் காணவில்லை இன்னும் பலரையும் காணவில்லை, அவர்களில் விஜயும் அவர் தகப்பனார் எஸ்.ஏ சந்திரசேகரும் ஒருவர். அன்புசெழியன் இல்லாவிட்டால் தமிழக சினிமா இல்லை எனும் அளவிற்கு அஞ்சி கிடக்கின்றது திரையுலகம் என்கின்றார்கள் அன்புசெழியன் யாரால் உருவானார் என்பதும், அவர் மூலம் திரையுலகம் யாரால் கட்டுபடுத்தபட்டது என்பதும் தெரியும் சூழல் இது அன்புசெழியனுக்கு ஏது […]

விசித்திரமான கிரிக்கெட் உலகிது

ஆசிய,ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வருமானம், கூடவே தொழில்புரட்சி அதாவது ஏகபட்ட உற்பத்தி, இப்படியாக 18ம் நூற்றாண்டில் செல்வத்தின் உச்சத்தில் இருந்தது பிரிட்டன், அவர்களுக்கு அன்று பெரும் சவால் விடும் நாடுகள் இல்லை, ஒரே ஒரு பெரும் மிரட்டல் நெப்போலியன், அவனையும் முடித்தாயிற்று. பணம் தமிழக டாஸ்மாக்காய் கொட்டிற்று, பணம் அதிகமானால், வேலைக்காரர்கள் அதிகமாவார்கள். வேலைக்காரர்கள் அதிகரித்தால் முதலாளிகளுக்கு ஓய்வுநேரம் அதிகரிக்கும், பின்னர் என்ன விளையாட்டுத்தான். பிரிட்டிசார் எப்பொழுதுமே அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள், ஸ்டைலாக ஆட ஒரு பழைய ஆட்டத்தினை […]

ரப்ரி தேவி லல்லு ஆவேசம்

மோடியின் கழுத்தை அறுத்து, கையை வெட்ட பீகார் மக்கள் காத்திருக்கின்றனர்: ரப்ரி தேவி ஆவேசம் இதென்ன புது சவால்? ஒரு கும்பல் தீபிகா படுகோனேவினை வெட்டுவோம் என்கின்றது, இன்னொரு கும்பல் மோடியினை பற்றி பேசினால் வெட்டுவோம் என்கின்றது லல்லுவின் பத்தினியோ மோடியினையே பீகாரியர் கழுத்தை அறுப்பார்கள் என சவால் விடுகின்றார் அரசியலில் ஏமாற்றி வஞ்சகமாக கழுத்தறுப்புகள் நடக்கும், ஆனால் இப்படி பகிரங்கமாக எல்லாம் இதுவரை வெட்டுவதாக சொல்லவில்லை வடக்கே பல தலைவெட்டிகள் இருப்பார்கள் போல.. இப்படி வடக்கே […]

ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கினார் ரஜினி

ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கினார் ரஜினி ஆனால் லதா வைத்திருக்கும் வாடகை பாக்கி பற்றி மட்டும் மனிதர் பேசமாட்டார், அது வேறு வகை இப்படி மடத்திற்கு கோடிகளை அள்ளிகொடுக்கும் ரஜினி முன்பு லிங்கா போன்ற படங்கள் மிகுந்த நஷ்டமளித்த போது விநியோகிஸ்தர்களுக்கு ஒன்றுமே கொடுக்க முன்வரவில்லை இச்சம்பவம் சொல்வது ஒன்றுதான் இனி மடங்களே ரஜினியின் படங்களை விநியோகித்தால் நல்லது, லாபத்திலும் பங்குகொடுப்பார் ரஜினி

நடிகர் ஆர்யாவிற்கு பெண் கிடைக்கவில்லையாம்..

நாட்டில் இருக்கும் சிக்கல் நாட்டில் போதாது என்றால், ஊடகங்கள் சொல்படி பார்த்தால் புதிய சிக்கல் ஒன்று முளைத்துள்ளது சிக்கல் என்னவென்றால்,ஆர்யாவிற்கு பெண் கிடைக்கவில்லையாம், “என்னை திருமணம் செய்து யாராவது எனக்கு வாழ்வுகொடுங்கள்..” என கெஞ்சிகொண்டிருக்கின்றார் நடிகர் ஆர்யா என்னாச்சி மனிதருக்கு? அந்த அளவு கிராக்கி இருந்திருந்தால் சினிமா நடிகைகளே தூக்கியிருப்பார்கள், ஆக மனிதரை திருமணம் செய்துகொள்ள நடிகைகள் ஒருவர் கூட தயாரில்லை இப்பொழுது ஊரெல்லாம் நம்பர் கொடுத்து என்னை கட்டிகொள்ளுங்கள் என சொல்வதாக செய்திகள் அப்படியும் ஒன்றும் சிக்கவில்லையாம் […]

90 வயது பெண்மணியான தியாகி சரஸ்வதி ராஜாமணி

கென்னடி சம்பந்தமான பைல்கள் வெளியிடபடும்பொழுது, நேதாஜி தொடர்பான பைல்களும் வெளியிடபடவேண்டும் என டெல்லியில் பேரணி நடந்தது அதில் கலந்துகொண்ட 90 வயது பெண்மணியான சரஸ்வதி ராஜாமணி என்பவரை பற்றி யாரும் பேசவில்லை. இத்தேசத்தின் மிகபெரும் தியாகி அவர், எந்த போராளிக்கும் குறையாத தியாகம் அவர் செய்தது. வரலாற்றில் வாழும்பொழுது மறைக்கபட்ட பெரும் தியாகி, இத்தேசம் இன்னும் அவரை அங்கீகரிக்கவில்லை அவர் பர்மாவின் மிக செழிப்பான குடும்பத்தில் பிறந்தார் அப்பொழுது அவருக்கு 15 வயதுதான் ஆகியிருந்தது. பர்மாவில் நேதாஜி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications