பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வைரமுத்து கவிதை சொல்லிவிட்டாராம்

வைரமுத்து கவிதை சொல்லிவிட்டாராம் தமிழக குழப்பம், இருக்கும் சிக்கல் போதாதென்று மோடியும் கவிதை படித்துவிட்டாராம் எங்கெங்கு நோக்கினாலும் கவிதை சிக்கலாகிவிட்டது, ஒரே குழப்பம் அதனால் சிலப்பதிகார கவிதை வரிகளுக்கு சென்று வாசித்தாகிவிட்டது, ஆனால் ஆச்சரியம் அந்த அளவு குஷ்புவிற்கு பொருந்தும் வரிகளை எழுதியிருக்கின்றார் “மாசறு பொன்னே வலம்புரி முத்தே! காசறு விரையே கரும்பே தேனே!  அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே மலையிடைப் பிறவா மணியே அலையிடைப் பிறவா அமிழ்தே” குஷ்புவின் முகத்தைபற்றி அன்றே எழுதியிருக்கின்றார் இளங்கோவடிகள், குஷ்பு […]

ஒவையாரின் சில வரிகள் குழப்பமாகின்றன‌

ஒவையாரின் சில வரிகள் குழப்பமாகின்றன‌ அவர் பெண்தான் என்றாலும், பெண்களை பற்றி உயர்வாக ஒன்றும் எழுதவில்லை,மாறாக சண்டாளி, சூர்ப்பநகை என்றெல்லாம் எழுதி நல்ல பெண் இல்லா வீடு புலியின் குகை என்றெல்லாம் எழுதிவிட்டார் இப்பொழுது ஒருத்தி அப்படி எழுதினால் உடனே பெண் பெயரில் இருக்கும் ஆண் என சீறிவிடுவார்கள். ஆக ஒவையார் என்பவர் அக்காலத்திலே பெண் பெயரில் இருந்த ஆணாக இருக்குமோ, அன்றே பேக் ஐடி கலாச்சாராம் இருந்திருகலாமோ என்ற சந்தேகம் எழுகின்றது அல்லது பெண் அடிமை […]

ஜோதி நிர்மலா என்றொரு கலெக்டர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்பு ஜோதி நிர்மலா என்றொரு கலெக்டர் இருந்தார், 2003ம் ஆண்டுகள் வாக்கில் இருந்தார் வைகுண்டராஜனின் முறைகேடான மணல் கொள்ளையினை முடக்கி அவர் ஆலைக்கே சீல் வைத்த முதல் நபர் அவர்தான் கன்னியாகுமரியில் அவர் இருக்கும் வரை ஒரு ஸ்பூன் மண் அள்ளமுடியாமல் மணல் கும்பல் தவித்தது தென்னகை கடற்கரை எல்லாம் வைகுண்டராஜனின் அரசாங்கம், அவரின்றி அலையும் அடிக்காது என மிகுந்த இறுக்கமான காலங்களில் மிகதுணிச்சலான அதிரடிகாட்டியவர் அந்த ஜோதி நிர்மலா அதன் பின் சில […]

சர்வதேச நீதிமன்றம் என்றொரு நீதிமன்றம்

சர்வதேச நீதிமன்றம் என்றொரு நீதிமன்றம் உண்டு, நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் இயங்கும், அதற்கு 15 நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்றும் உண்டு சில நேரம் உருப்படியான தீர்ப்புகளை இந்த நீதிமன்றம் வழங்கும், முன்னாள் யுகோஸ்லேவிய இனபடுகொலையாளி அப்படித்தான் தூக்கிலிடபட்டார், சில நேரம் தென் சீனகடல் சீனாவிற்கு சொந்தமல்ல என சொன்னாலும் சீனா காதில் வாங்காமல் நடந்துகொள்ளும் போது சிரித்துகொள்ளும் அந்த சபை நீதிபதிகளுக்கு ஐநா பாதுகாப்பு சபை, பொதுசபை என இரண்டிலும் ஆதரவு வேண்டும் அப்படி […]

கச்சதீவினை கொடுத்தபொழுது கலைஞர்

இந்திரா கச்சதீவினை கொடுத்தபொழுது கலைஞர் எதிர்க்கவில்லை : அதிமுக அறிவாளி அமைச்சர்கள் கலைஞராவது சில தீர்மானங்களை நிறைவேற்றினார் ஆனால் அன்று எதிர்கட்சி என சொல்லிகொண்டிருந்த ராமசந்திரன் என்ன செய்தார்? தமிழக மீணவர் நலனுக்கு அவர் என்ன செய்தார்? “மீணவ நண்பன்” படத்தில் நடித்துகொண்டிருந்தார், அந்த பயங்கரமான மேக் அப்ப்பில் லதாவுடன் ஆடிகொண்டிருந்தார் அதுவும் நேரம் பவுர்ணமி நேரம் என அவர் லதாவுடன் ஆடிய ஆட்டம் எல்லாம் சும்மா அல்ல‌ அவர்கள் தலைவி ஜெயலலிதா அன்று என்ன செய்துகொண்டிருந்தார் […]

சன்டிவியில் பன்னீர் செல்வமும் ஜெயா டிவியில் துரைமுருகனும்

  சன்டிவியில் பன்னீர் செல்வமும், ஜெயா டிவியில் துரைமுருகனும் பேசுவதாக செய்திகள் வருகின்றன‌ சசிகலா மீதான ரெய்டுகள் இன்னும் அதிகமானால் சி.ஆர் சரஸ்வதி சன் டிவியிலும், அன்பழகன் போன்றோர் ஜெயா டிவியிலும் ஒப்பாரி வைப்பார்கள் ஏன் என்றால் அப்படித்தான் ஒரு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கே பல ரகசிய ஒப்பந்தகள் நடக்கும் தமிழகத்தில், மாநில முதல்வர் பதவிக்கு என்னென்ன எழுதபடா ஒப்பந்தங்கள் எல்லாம் நடந்திருக்கும்? விலகி இருந்து அடித்துகொள்வது போல சீறுவதும், டெல்லி களமிறங்கபார்த்தால் ஒன்றாக நின்று டெல்லியினை […]

அப்படி என்ன சொல்லி விட்டார் வைரமுத்து?

அப்படி என்ன சொல்லி விட்டார் வைரமுத்து? முற்றிய நெல் குனிந்து நிற்கும் என மோடியினை பற்றியும், நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தாற் போல் என நிர்மலா சீத்தாராமன் பற்றியும் சொல்லிவிட்டார். அவர் கலைஞர் அபிமானி என்பதால் மத்திய அரசைபற்றி கவி புனையகூடாதா என்ன? “கவிதைக்கு பொய் அழகு” என என்றோ சொல்லிவிட்டவர்தான் அவர், பின்னும் ஏன் அதனையே சீரியசாக பேசிகொண்டிருக்கின்றார்கள்? கவிஞர்கள் தொழிலே அக்காலத்திலிருந்து இப்படி பொய்யாக பாடுவதுதானே? இதில் என்ன குறை கண்டார்கள்? மிசாவில் […]

உணர்ச்சி போய்விட்ட இனமாயிற்று தமிழினம்

ஒரு வழியாக கிட்டதட்ட 37 ஆண்டுகாலம் ஜிம்பாப்வேயினை ஆட்சி எனும் பெயரில் நாசம் செய்த முகாபேயினை கழுத்தை பிடித்து தள்ளிவிட்டார்கள், புது அதிபர் விரைவில் நியமிக்கபடுவாராம் சரி இந்த முகாபே என்ன ஆவார் என்றால் அவரை நாடு கடத்திவிடுவார்களாம், அதாவது ஏற்கனவே அடுத்த நாட்டில் அவர் குவித்து வைத்திருக்கும் சொத்துக்களை அனுபவிக்க கிளம்பிவிடுவார் உள்நாட்டில் அவர் குவித்த சில சொத்துக்களை அரசு எடுத்துகொண்டு , மீட்டதாக அறிவித்துவிடும் தென்னாப்ரிக்கா, ஜிம்பாப்வே எல்லாம் வெள்ளையன் மிக வளமாக வைத்திருந்த […]

போயஸ் கார்டன் கொள்ளையடிக்கும் கூட்டத்தின் தலமையகம்

போயஸ் கார்டன் கொள்ளையடிக்கும் கூட்டத்தின் தலமையகமாக இருந்திருக்கின்றது, கொஞ்சமும் மனசாட்சியின்றி இவர்கள் முறைகேடான வழியில் பணத்தை குவித்திருக்கின்றார்கள் கருப்புபணத்தை வெள்ளையாக்கவே கம்பெனிகள் தொடங்கபட்டிருக்கின்றன, அக்கம்பெனிகளின் முகவரியாக போயஸ் கார்டனே காட்டபட்டிருக்கின்றது” இது நீதிபதி குன்ஹா தீர்ப்பில் எழுதிய வரிகள் ஆக அந்த கொள்ளை கூட்டத்தின் தலமையகத்தில்தான் சோதனை நடத்துகின்றார்கள், அது கோவில் என்றும், யாரை கேட்டு சோதனை என சிலர் பொங்குவதெல்லாம் மாபெரும் அழிச்சாட்டியங்கள் போயஸ்கார்டனை குறிப்பிட்டு ஒரு நீதிபதி மிக கடுமையாக‌ தீர்ப்பு எழுதியபின்னும் இது […]

புத்த மதத்திற்கு முன் இந்துமதம் இருந்ததா?

புத்த மதத்திற்கு முன் இந்துமதம் இருந்ததா? நிரூபிக்க முடியுமா என பலர் சவால் விடுகின்றார்களாம் இதனை எழுத தொடங்கினால் அது மிகபெரும் பாகமாக வரும், அவ்வளவு விஷயம் இருக்கின்றது என்பதால் மிக சுருக்கமாக சொல்லிவிடலாம் வேதகாலம் என்பது இக்காலம் என கணிக்கமுடியா அளவு பழமையானது அன்றே தோன்றிவிட்டது இந்துமதம். அதன் வீச்சு அரேபியா முதல் சீனா வரை பரவியிருந்தது 6 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட பிள்ளையார் சிலைகள் பாகிஸ்தான் பகுதியில் கண்டெடுக்கபட்ட விஷயம் உண்டு, சிந்துசமவெளி ஆராய்ச்சியில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications