இந்த தும்பிகள வச்சிட்டு நான் என்ன செய்யிறது என் உறவே”
“ஊரெல்லாம் வெள்ளம், இப்ப போயி எப்படி கன்னடனுகிட்ட காவேரி கேக்குறது?, தெலுங்கன் கிட்ட கிருஷணா நீரை திறண்ணு சொல்றது? இந்த தும்பிகள வச்சிட்டு நான் என்ன செய்யிறது என் உறவே”
சுத்தமான இந்து இந்தியன்….
“ஊரெல்லாம் வெள்ளம், இப்ப போயி எப்படி கன்னடனுகிட்ட காவேரி கேக்குறது?, தெலுங்கன் கிட்ட கிருஷணா நீரை திறண்ணு சொல்றது? இந்த தும்பிகள வச்சிட்டு நான் என்ன செய்யிறது என் உறவே”
பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவின் மகள் தினா வாடியா காலமானார் அந்த ஜின்னா அப்பொழுது பிரிட்டிஷ் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர்களில் ஒருவராக அறியபட்டார், அவர் நன்கு படித்தவர், வழக்கறிஞர் மிக சிறந்த வாததிறமை மிக்கவர் அவருக்கு ஒரு நண்பர் இருந்தார் அவர் பெயர் தின்ஷா பேட்டி, அவர் பார்சி, டாட்டாவின் உறவினர். ஜின்னாவோடு நண்பரான அவர், ஜின்னாவினை தன் சிம்லா மாளிகைக்கு விருந்துக்கு அழைத்தார் அந்த தின்ஷாபேட்டிக்கு ஒரு மகள் இருந்தாள் அவள் பெயர் ரத்னாபாய் தின்ஷா, 16 […]
சர்வதேச அளவில் ஒரு விவகாரம் கசிகின்றது அல்லது முணுமுணுக்கபடுகின்றது அதாவது இந்தியா அமெரிக்க டாலரை வாங்கி குவிக்கின்றதாம், இதில் ஏதோ சதி என அமெரிக்கா முணுமுணுக்க, உலகமெல்லாம் நெற்றி சுருக்கி பார்க்கின்றன இன்றைய உலகின் இதய துடிப்பு அமெரிக்க டாலர். தங்கம் முதல் பெட்ரோல் வரை அதில்தான் இயங்கும் ,அமெரிக்க டாலருக்கு நிகராக பரிவர்த்தனை செய்யபடும் அடுத்த நாட்டு பணங்களை பொறுத்தும, இன்ன பிற விவகாரங்களாலும் அமெரிக்க டாலருக்க்கு எதிரான பணத்தின் அளவு நிர்ணயிக்கபடும் பெட்ரோல், தங்கம், […]
தமிழகத்தில் ஒன்றும் புயல் மழை கொட்டவில்லை, தனுஷ்கோடியினை அழித்தது போல் கோர புயல் வீசவில்லை பெய்திருப்பது , பெய்துகொண்டிருப்பது சாதரண மழை. வெகு இயல்பான மழை அந்த மழை அதன் கடமையினை செய்கின்றது, ஆனால் இருந்த நீர் தேக்கங்களை எல்லாம் அடைத்து, கால்வாய்களை எல்லாம் மூடி இல்லாத அட்டகாசங்களை எல்லாம் செய்ய அனுமதித்தது அரசியல் 2015ல் வந்த எச்சரிக்கைக்கு பின்னும் தமிழக அரசு முழித்துகொள்ளவில்லை இன்றைய சென்னையின் ஸ்தம்பிப்பு அதனைத்தான் சொல்கின்றது மழைநீரும் மிக சரியாக தமிழகம் […]
வடதமிழ்நாடு வேண்டும் என சிலர் கேட்க தொடங்கியிருக்கின்றார்களா, கேட்பவர்கள் பாமக என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை அது வெகுநாட்களாக ராமதாஸ் எழுப்பிவரும் கோரிக்கை, இனி அதுவும் சாத்தியபடாது என்றால் தைலாபுரம் தோட்டத்தையாவது தனிமாநிலம் ஆக்க முடியுமா என்ற அளவு அவர் கோரிக்கை செல்லும் அதை தவிர அன்புமணியினை முதல்வராக்க அவரிடம் எந்த வழியுமில்லை ஆனால் தனி வடதமிழ்நாடு கேட்டுகொண்டிருக்கும் அந்த தமிழர்கள் யார் என்றுதான் தெரியவில்லை வட தமிழ்நாடு என்னமோ வடை போல கிடைக்கும் என நினைத்துகொண்டிருக்கின்றார்கள் ஒன்று […]
பத்மாவதி படத்திற்கு பாஜக எதிர்ப்பு இப்பொழுதுதான் தமிழகத்தில் ஜிஎஸ்டி என சொல்லி மெர்சலை எதிர்த்தார்கள், இப்பொழுது பத்மாவதி படம் வந்தால் மதகலவரம் வரும் என அதனையும் எதிர்க்கின்றார்கள் கலவரம் எல்லாம் இவர்கள்தானே ஏற்படுத்துவார்கள்? சினிமா என்று ஏற்படுத்திற்று? எப்படியோ மெர்சலை ஹிட் ஆக்கியது போல , பத்மாவதி படத்தையும் மெகா ஹிட் ஆக்க பாஜக தயாராகின்றது மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் படம் நிச்சயம் சூப்பர் ஹிட், விநியோஸ்தர்கள் நம்பி வாங்கலாம் தீபிகா படுகோனையோ, படத்தையோ நம்பி […]
“மிஸ்டர் எடப்பாடி, நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு எப்படி போனாரோ நடராஜன் அப்படியே வந்துட்டார்ன்னு மோடிகிட்ட சொல்லு ஒரு பய நிம்மதியா இருக்க முடியும்?..” எடப்பாடி சில அமைச்சர்களை நீக்கலாம் : இன்றைய செய்தி அந்த அமைச்சர்கள் எல்லாம் சேர்ந்து எடப்பாடி அரசையே நீக்கலாம் : நாளைய செய்தி
வள்ளியூர் பக்கம் கொடுமுடியாறு அணை திறப்பு, எம்.எல்.ஏ எம்.பி கலந்துகொண்டனர் : செய்தி நெல்லை எம்பி என்றொருவர் உண்டு என்பதே அந்த படத்தினை பார்த்தபின்புதான் நினைவுக்கு வருகின்றது அந்த அணை பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டபட்டதாக சொன்னார்கள், அந்த அணையின் அருகே இக்குளத்தால் 44 குளங்கள் பாசன வசதிபெறும் என அறிவிப்பு வேறு அந்த வறண்ட பகுதிக்கு மிகபெரும் ஆறுதலாக அந்த அணை வரும் என எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் பெரும் ஏமாற்றம் உண்மையில் அந்த […]
“அண்ணே இந்த அமலாபால் கார் ஏதோ பாண்டிச்சேரிகாரன் பெயர்ல இருக்காம்ணே அதுக்கென்னடா? அதிலதாண்ணே சந்தேகம்? என்னடா சந்தேகம்? அண்ணே, கார் பாண்டிச்சேரிகாரன் பெயர்ல இருக்கு.. அந்த அமலா பால்……… டேய் அடுத்தால நீ என்ன கேக்கபோறேண்ணு தெரியும், ஓடிரு”
முஸ்லீம் அனைவரும் குல்லா போட முடியும்.கிறிஸ்துவர் அனைவரும் சிலுவை போட முடியும். இந்துக்கள் அனைவரும் பூணூல் போட முடியுமா? – இயக்குனர் ரஞ்சித் எவனோ ரஜினியினை பொறுக்காதவன் மிக வஞ்சகமாக ரஜினியினை இவரிடம் சிக்க வைத்திருக்கின்றான் சொல்ல முடியாது, தமிழகத்தில் அம்பேத்கரை தூக்கிபிடித்து பெரியாரை மறக்கடிக்க எங்கிருந்து யாரோ போட்ட திட்டத்தில் ரஜினியும் ரஞ்சித்தும் இணைந்திருக்கலாம் இல்லாவிட்டால் கபாலியில் பட்ட அடிக்கு பின்னும் ரஜினி இவருடனே அடுத்தபடம் செய்ய வாய்ப்பே இல்லை ரஞ்சித் எனும் அரைகுறையினை கவனித்து […]