பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கத்தோலிக்க பாரம்பரிய கிறிஸ்தவர்களுக்கு ஆத்துமாக்கள் தினம், கல்லறை சிறப்பு நாள்

இன்று கிறிஸ்தவர்களுக்கு, அதாவது கத்தோலிக்க பாரம்பரிய கிறிஸ்தவர்களுக்கு ஆத்துமாக்கள் தினம், கல்லறை சிறப்பு நாள். பிரிவினைகளுக்கு இதெல்லாம் கிடையாது, பைபிளில் இல்லாத ஒன்றையும் கடவுளே சொன்னாலும் கவனிக்காத கூட்டம் அது இன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்கள் மற்றும் உரித்தானவர்கள் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள், கத்தோலிக்க பீடம் சொல்லும் கட்டளை அது. கிறிஸ்தவமரபு படி சிறிய பாவம் செய்தவர்கள் சொர்க்கம் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும், இங்குள்ளோர் அவர்களுக்காக ஜெபித்தால் அவர்கள் பரலோகம் செல்வார்கள் எனவும் […]

ஜெயா டிவி பொறுப்பு உணர்ச்சிக்கு பாராட்டுக்கள்

இப்பொழுதெல்லாம் மிக விருப்பமான டிவிநேரம் ஜெயா டிவி நியூஸ் நேரம்தான் அப்படி பழனிசாமி அரசினை போட்டு அடிக்கின்றார்கள், கடும் விமர்சனங்கள். ஆனால் பார்க்க நன்றாகத்தான் இருக்கின்றது அதிமுக டிவியே அதிமுக அரசை விமர்சிக்கும் அபூர்வ நிகழ்வு அது. சும்மா சொல்லகூடாது மகா அட்டகாசம் . தமிழகத்தில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றது என்பது இப்பொழுதுதான் ஜெயாடிவிக்கு தெரிந்திருக்கின்றது. ஆனால் அடிக்கடி தியாக தலைவி சின்னம்மா, அண்ணன் தினகரன் , இன்னும் சில அல்லக்கைகள் சொல்லும் துரோகி பேட்டிகள் எல்லாம் […]

கவன குறைவால் சிறிய தவறொன்று நடந்துவிட்டது

அந்த செய்தி எல்லா மீடியாக்களிலும் வந்தது, பொதுவாக உலக செய்திகளை சொல்லும் ஆங்கில மீடியாக்கள் மிக சில, அவைதான் மூலம் அந்த மூலத்திலிருந்து உலகெல்லாம் இருக்கும் சிறுபத்திரிகைகள் எடுத்துகொள்ளும் , அப்படி அந்த சவுதி 6 பெண்கள் விவகாரமும் உலகெல்லாம் பரவிற்று நேரமின்மையால் எமது கவன குறைவால் சிறிய தவறொன்று நடந்துவிட்டது, அதற்கு மன்னிப்பு கோருகின்றோம், முழுக்க ஆங்கில செய்திகளை படித்தபின் உண்மை புரிந்தது நடந்தது இதுதான் விவகாரம் என்னவென்றால் பிறந்தநாள் சம்பவம் நடந்து ஒருவருடம் ஆகின்றது, […]

“கருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டார்” : ராமதாஸ் மகிழ்ச்சி

“கருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டார்” : ராமதாஸ் மகிழ்ச்சி கலைஞரை சந்தித்து நலம் விசாரிக்க‌ ராமதாஸ் சென்றிருக்கின்றார், அதனை தொடர்ந்து இப்படி பேசியிருக்கின்றார். கலைஞர் பிறவி அரசியல்வாதி அய்யா, யாரை கண்டுகொள்ள வேண்டும் என்பது அவருக்கு தெரியாதா? இதனை நாகரீக சந்திப்பாக எடுத்துகொள்ள வேண்டும், ஏனென்றால் வானமும் பூமியும் உள்ளவரை திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை என சபதம் செய்திருக்கின்றார் மருத்துவர் அய்யா மிஸ்டர் விஜயகாந்த், நீங்க எப்போ கலைஞரை சந்திக்க போறேள்???

செந்தமிழர் சீமான் கேக் வெட்டியபொழுது …

பழந்தமிழர் முறைப்படி, முப்பாட்டன் வழிப்படி, செந்தமிழர் சீமான் கேக் வெட்டியபொழுது எடுக்கபட்ட படம். அன்னார் தமிழர் முறைப்படி வேட்டி கட்டி மேல்சட்டை இல்ல்லாமல் சந்தணம் பூசி நிற்பதை நீங்கள் கவனித்தே ஆகவேண்டும் இந்த டெல்லி அல்ட்ராசிட்டிகளுக்கு சொல்லிகொள்வதெல்லாம் இதுதான், தயவு செய்து திமுகவினை எதிர்க்க உருப்படியான ஆட்களை தயார் செய்யுங்கள் இம்மாதிரி காமெடியனகளை எல்லாம் அனுப்பாதீர்கள் இவர் எல்லாம் திமுகவின் எதிரி என சொல்லபடுவதை, திமுககாரன் அல்லாத எம்மாலே சகிக்க முடியவில்லை என்றால், திமுகவினர் நிலை எப்படி […]

கலைஞர் வீட்டு திருமணம்

கலைஞர் வீட்டு திருமணம் என எல்லா பத்திரிகையும் கலைஞரை காட்டுகின்றன, விக்ரமை காட்டுகின்றன‌ மணமக்களை காட்டுகின்றன, யாரெல்லாமோ வாழ்த்தினார்கள் என காட்டுகின்றன‌ ஆனால் அந்த மு.க முத்துவினை ஒரு பத்திரிகையும் காட்டவில்லை, அவர்தான் மணமகனின் தாத்தா கலைஞரின் மூத்த மகனுக்கு இப்படி ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டது கால கோலம் தன் கொள்கைபடி தன் மகனை வளர்க்க நினைத்து அவன் வாழ்வை தொலைத்தார் காந்தி கலைஞரும் அதே தவறினை செய்திருக்கின்றார் குழந்தைகளை அவரவர் இயல்பில் வளரவிடவேண்டும் என்ற உண்மையினை […]

மும்பையில் இருந்து ஒரு முழு நிலா

“மும்பையில் இருந்து ஒரு முழு நிலா” என்றொரு புத்தகம் எழுத சங்கம் முடிவெடுத்திருக்கின்றது விரைவில் எழுதி முடிக்கபட்டு வெளியிடபடும், இது சம்பந்தமாக தலைவியின் உதவியாளர், சமையல்காரர், நேற்று பேட்டியெடுத்த கார்த்திகை செல்வன் வரை நிறைய பேரை சந்திக்க வேண்டியிருக்கின்றது பெரும் சுவாரஸ்ய வரலாறு தலைவி , அதனால் பல பாகங்களாக கூட புத்தகம் வெளிவரலாம் தலைவி பெருமை எழுத இந்த உலகத்தின் மொத்த ஏடுகளும் போதாது, மொத்த கணிணி மெம்மரியும் தாங்காது  

எம்.கே. தியாகராஜ பாகவதர்

1940களுக்கும் 1955களுக்கும் இடைபட்ட காலங்களை ஆட்டிவைத்தவர் அவர், அன்றே அரசியலில் சினிமா கலந்திருக்குமானால் ராஜாஜி, காமராஜர் என்ற தலைவர்கள் எல்லாம் காணாமலே போயிருப்பார்கள். சுமார் 20 ஆண்டு காலம் தமிழகத்தை கட்டிவைத்தவர் எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ் சினிமாவின் கதல் வசூல் மன்னன். நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை. பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர். ஒரே சமயத்தில் நாடகம், […]

தினதந்திக்கு பவள விழாவாம் …

தினதந்திக்கு பவள விழாவாம் அதன் சிறப்புகள், அது பாமரனையும் படிக்க வைத்தது, அது வாசிக்க வைத்தது என்றெல்லாம் பலபேர் கிளம்புவார்கள் எமக்கு தெரிந்தது இதுதான் தமிழ் சுத்தமாக கெட்டுபோக அந்த பத்திரிகை ஒரு காரணம், நாட்டுபற்று பற்றியெல்லாம் அதில் அதிகம் இருக்காது மாறாக எது இருக்க கூடாதோ அது நிரம்பி இருக்கும். “அழகி” எனும் அற்புத தமிழ்வார்த்தையினை உவ்வே வார்த்தையாக்கியதும் , இன்னும் பல தமிழ்வார்த்தைகளை சமூகம் அருவெறுப்பாக பார்க்க வைத்ததும் அதன் தமிழ்தொண்டு தமிழகத்தில் சினிமா […]

எனக்கு அரசியல் வராது என சொன்னார் அஜித்குமார்

எனக்கு அரசியல் வராது என சொன்னார் அஜித்குமார், ரசிகர்கள் தெரிவிப்பு அதானே, அரசியல் என்றால் நன்றாக நடிக்க வேண்டும், உணர்ச்சி பொங்க பேச வேண்டும் நடிக்கவே தெரியாத, பேசவும் சரியாக தெரியாத‌ தனக்கு அரசியல் சரிபட்டு வராது என அஜித் உணர்ந்து கொண்டதில் ஆச்சரியமில்லை 21,783 கோடியில், 111 அதிநவீன ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்கும் : நிர்மலா சீத்தாராமன் ஆக மேக் இன் இந்தியா திட்டமெல்லாம் சும்மா கண் துடைப்புதான், அப்படித்தானே மேடம்?